பட்ஜெட்ல மாஸ் Tablet.. Nokia இப்போது புது HMD பொலிவுடன்.. தரமான அம்சத்துடன் என்ன விலை? எப்போ வாங்கலாம்?
நோக்கியா (Nokia) நிறுவனம் அதன் புதிய டேப்லெட் சாதனத்தை (Tablet Device) அறிமுகம் செய்துள்ளது. ஆனால், நோக்கியா என்ற பிராண்டிங் பெயர் இல்லாமல், எச்எம்டி (HMD) என்ற புதிய லோகோவுடன் நோக்கியாவிற்கு சொந்தமான புதிய டேப்லெட் சாதனம் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவொரு பட்ஜெட் செக்மென்ட் விலை டேப்லெட் (Budget Segment Price Tablet) விருப்பத்தில், அட்டகாசமான அம்சங்களை பேக் செய்த சிறந்த டேப்லெட் (Best Tablet) சாதனமாக வெளிவந்துள்ளது.
இந்த புதிய டேப்லெட் சாதனம் எச்எம்டி குளோபல் பிராண்டின் கீழ் வெளிவந்துள்ளது. இது நோக்கியாவின் மறுபெயரிடப்பட்ட சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய டேப்லெட் சாதனம் எச்எம்டி டி21 டேப்லெட் (HMD T21 Tablet) என்ற பெயருடன் மலேசியா சந்தையில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எச்எம்டி பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட முதல் டேப்லெட் சாதனமே இது தான்.

எச்எம்டி டி21 டேப்லெட் (HMD T21 Tablet):
கடந்த 2022 இல் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியாவின் மறுபெயரிடப்பட்ட டேப்லெட் சாதனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய எச்எம்டி டி21 டேப்லெட் (HMD T21 Tablet) சாதனம் மிகவும் சிறந்த ஸ்லிம் டிசைன் உடன் சிறந்த அம்சங்களை கொண்டது என்று கூறப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 அவுட் ஆப் தி (Android 13 out of the box) பாக்ஸ் நன்மையுடன் வருகிறது.
இந்த புதிய எச்எம்டி டி21 டேப்லெட் (HMD T21 Tablet) சாதனம் புதிய நிறத்துடன் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எச்எம்டி டி21 டேப்லெட் சாதனம் 10.4" இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே 2000×1200 ரெசொலூஷன் (resolution) ஆதரவுடன் வருகிறது. இது 5:3 ஆஸ்பெக்ட் ரேட்ஸியோவுடன் (aspect ratio) 360 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (peak brightness) உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எச்எம்டி டேப்லெட் (HMD tablet) சாதனம் யூனிஸாக் டி612 சிப்செட் (Unisoc T612 chipset) உடன் சிறப்பாக சூப்பர் சக்தியில் இயங்குகிறது. இது 6ஜிபி ரேம் (RAM) உடன் 128ஜிபி ஸ்டோரேஜ் (Storage) உடன் வருகிறது. இது மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் (microSD card slot) உடன் கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்தை வழங்குகிறது. இது 2TB வடை செல்கிறது.
எச்எம்டி டி21 டேப்லெட் விலை (HMD T21 Tablet Price):
இதன் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இதில் இரண்டு 8MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் ஒரு 8MP கேமராவும், முன்பக்கத்தில் 8MP கேமராவையும் வழங்குகிறது. இந்த எச்எம்டி டி21 டேப்லெட் (HMD T21 Tablet) சாதனம் 8200mAh பேட்டரி (Battery) உடன் 18W சார்ஜிங் உடன் வருகிறது. இது IP52 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவையும் வழங்குகிறது.
இது வைஃபை மற்றும் 4ஜி விருப்பத்துடன் வெளிவந்துள்ளது. இந்த எச்எம்டி டி21 டேப்லெட் (HMD T21 Tablet) சாதனம் மலேசியாவில் RM 1,259 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 22,000 வரை செல்கிறது. இந்த டேப்லெட் விரைவில் இந்தியாவிலும் சந்தைப்படுத்தப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications








