Home
Gadgets

பட்ஜெட் விலையில் புதிய நோக்கியா வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் அறிமுகம்.!

நோக்கியா நிறுவனத்தின் எசென்ஷியல் வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் ஆனது ஓவர் இயர் வடிவமைப்பு மற்றும் 40 மிமீ டைனமிக் டிரைவர்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த ஹெட்ஃபோன்களில் ஒரு உள்ளமைக்கப்பட்ட பேட்டரியும் உள்ளது. இது ஒரு சார்ஜில் 40 மணிநேர ஆடியோ பேளேபேக்கை வழங்குவதாக மதிப்பிடப்படுகிறது.

நோக்கியா எசென்ஷியல்

குறிப்பாக புதிய நோக்கியா எசென்ஷியல் வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் உலகளாவிய வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆதரவுடன் வருகின்றன.பின்பு இது கூகுள் அசிஸ்டென்ட் அல்லது சிரியுடன் தொடர்பு கொள்ள உங்களை அனுமதிக்கிறது.

 இந்த சாதனத்தின்

நோக்கியா எசென்ஷியல் வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் ஐரோப்பாவில் அறிமுகமாகி உள்ளன. குறிப்பாக இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.5,100-ஆக உள்ளது. மேலும் இந்த ஆண்டு நவம்பர் முதல் உலகளவில் விற்பனைக்கு வர உள்ளன. இந்த புதிய ஹெட்ஃபோன்ஸ் ஆனது கருப்பு நிறத்தில் மட்டுமே வருகின்றன.

வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் ஆனது

நோக்கியா எசென்ஷியல் வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் ஆனது 40 மிமீ டைனமிக் டிரைவர்களைக் கொண்டுள்ளன, அவை 20 ஹெர்ட்ஸ் மற்றும் 20,000 ஹெர்ட்ஸ் இடையே ப்ரெக்வன்சி ரெஸ்பான்ஸ் வரம்பைக் கொண்டுள்ளன. மேலும் இந்த ஹெட்போன்ஸ் மடிக்கக்கூடிய ஹெட் பேண்டுடன் வருகின்றன.

எசென்ஷியல் வயர்லெஸ்

நோக்கியா எசென்ஷியல் வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் வயர்லெஸ் இணைப்பிற்காக ப்ளூடூத் 5.0 ஐ ஆதரிக்கின்றன. இருப்பினும் ஒரு வயர்டு பிளேபேக் அனுபவத்தை இயக்க 3.5 மிமீ ஆடியோ ஜாக்கும் கிடைக்கிறது. இந்த புதிய நோக்கியா ஹெட்ஃபோன்ஸ் சார்ஜ் செய்ய மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்டையும் கொண்டுள்ளது.

சார்ஜ் செய்யவும் முடியும்

நோக்கியா உரிமதாரர் ஆன எச்எம்டி குளோபல் நிறுவனம் இதில் 500 எம்ஏஎச் பேட்டரியை வழங்கியுள்ளது. மேலும் இது 40 மணி நேரம் கேட்கும் நேரத்தை வழங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பின்பு மூன்று மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யவும் முடியும்.

அனுபத்தை வழங்க

மேலும் ஒரு வசதியான அனுபத்தை வழங்க, இந்த ஹெட்போனில் மென்மையான இயர் பட்ஸ் உடன் ஒரு அனோடைஸ் அலுமினியம்அவுட்டர் கவர் உள்ளது.

போது குறிப்பிட்ட பாதைகள்

பின்பு பயணங்களின் போது குறிப்பிட்ட பாதைகள் அல்லது திசைகளைப் பெற இந்த வயர்லெஸ் ஹெட்ஃபோனில் இருக்கும் கூகுள் அசிஸ்டென்ட் அல்லது சிரியை நீங்கள் நேரடியாக இயக்கலாம். மேலும் இந்த ஹெட்ஃபோன்ஸ் 197 கிராம் எடையை கொண்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia Essential Wireless Headphones Launched: Specs, Features and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X