இந்தியா: பட்ஜெட் விலையில் அட்டகாசமான புதிய நோக்கியா இயர்போன் அறிமுகம்.!

|

இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் ANC T3100 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த சாதனங்களை பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்துவமான வடிவமைப்பு

தனித்துவமான வடிவமைப்பு கொண்டுள்ளதால் இந்த சாதனங்கள் அதிக வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் மெல்லியமற்றும் சிறந்த வடிவமைப்பில் பரீமியம் பொருட்களை வாங்க விரும்புவோருக்காக தான் இந்த புதிய ஆடியோ சாதனங்கள் உருவாகப்பட்டுள்ளன.

நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 மாடல்

நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 மாடல்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 மாடல் ஆனது குவால்காம் QCC3034 ப்ளூடூத் ஆடியோ சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இதில் குவால்காம் cVc எக்கோ கேன்சலேஷன் மற்றும் நாய்ஸ் சப்ரெஷ் தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் ஊரடங்கு: ஜொமாடோ - ஸ்விக்கி டெலிவரி ரத்து.. தமிழகத்தில் ஊரடங்கு வருமா?மகாராஷ்டிராவில் ஊரடங்கு: ஜொமாடோ - ஸ்விக்கி டெலிவரி ரத்து.. தமிழகத்தில் ஊரடங்கு வருமா?

ஹெட்செட் T2000  சாதனம் ஆன

மேலும் நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 சாதனம் ஆனது 24-பிட் ஹெச்டி ப்ளூடூத் ஆடியோ வசதியை வழங்குகிறது. பின்பு இந்த நெக்பேண்ட் ஹெட்செட் ஆனது ரெபிட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 9 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.

நோக்கியா ட்ரு வயர்லெஸ் இயர்போன் ANC T3110

நோக்கியா ட்ரு வயர்லெஸ் இயர்போன் ANC T3110

அடுத்து நோக்கியா ட்ரு வயர்லெஸ் இயர்போன் ANC T3110 மாடல் ஆனது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் IPX7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த இரண்டு ஹெட்போன்களும் ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 மாடலின் விலை ரூ.1,999-ஆக உள்ளது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா ப்ளூடூத் ஹெட்செட் T2000 மாடலின் விலை ரூ.1,999-ஆக உள்ளது. பின்பு வயர்லெஸ் இயர்போன் ANC T3110 மாடலின் விலை ரூ.3,999-ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 9-ம் தேதி இந்த இரண்டு சாதனங்களும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 3.2

நோக்கியா 3.2

அண்மையில்எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட்-ஐ வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் உடன் மார்ச் security patch நன்மையும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடல் கடந்த 2019-ம் ஆண்டு துவகத்தில் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்

குறிப்பாக இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் அறிவிப்பை அதிகாரப்பூர்வ நோக்கியா தளத்தில் ஒரு அதிகாரி அறிவித்துள்ளார். குறிப்பாக இந்த புதிய அப்டேட் பயனர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். அதுவும் இந்தியா உட்பட 34 நாடுகளில் உள்ள நோக்கியா 3.2 பயனர்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு அப்டேட். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.26-இன்ச்

நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.26-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 720x1520 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு அட்ரினோ 504 ஜிபியு வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்தது, ஆனால் தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது.

13எம்பி ரியர் கேமரா

நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு அம்சம், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஃபேஸ் அன்லாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia Bluetooth Headset T2000 and TWS ANC T3110 Earbuds Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X