சிறப்பா செஞ்சுவிட்ட Nokia.. உலகின் முதல் 360 டிகிரி 5G கேமரா.. வாய்பிளக்க வைக்கும் அம்சங்கள்.. யார் வாங்கலாம்?
நோக்கியா (Nokia) நிறுவனம் உலகத்தின் முதல் 5ஜி இணக்கத்துடன் இயங்கும் 360 டிகிரி கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய நோக்கியா 360° கேமரா சீரிஸ் (Nokia 360° Camera) இரண்டு மாடல்களை கொண்டுள்ளது. கடினமான சூழல்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த கேமரா, டேட்டா பாதுகாப்பை (data protection) உறுதிசெய்யும் வகையில், மிகவும் பிரத்தியேகமான புதிய பாதுகாப்பு சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களைக் கொண்டுள்ளது. நோக்கியாவின் பல முக்கிய கண்டுபிடிப்புகளை உள்ளடக்கிய நோக்கியாவின் விரிவான மல்டிமீடியா ஆராய்ச்சியின் ஒரு கண்டுபிடிப்பாக இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
இந்த புதிய நோக்கியா 360° கேமரா சீரிஸ் கேமரா மாடலின் கீழ் நிறுவனம், நோக்கியா 360° கேமரா வைஃபை வேரியண்ட் (Nokia 360° Camera Wi-Fi variant) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த வைஃபை வேரியண்ட் மாடல் 8K தரத்தில் 360° மல்டிமீடியா ஸ்ட்ரீமிங்கை (multimedia streaming) வழங்குகிறது. இரண்டாவதாக, நோக்கியா 5ஜி 360° கேமரா (Nokia 5G 360° Camera) இடம்பெறுகிறது.

சிறப்பா செஞ்சுவிட்ட Nokia.. உலகின் முதல் Nokia 360 டிகிரி 5G கேமரா:
இந்த நோக்கியா 5ஜி 360° கேமரா (Nokia 5G 360° Camera) மாடல் கடுமையான வெப்பம் வேரியண்ட் (Extreme Temperature variant) என்ற பெயருடன் வருகிறது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, இது கடுமையான வெப்பம் மற்றும் கடுமையான வானிலையில் (Extreme climate conditions) இயங்கக்கூடிய அம்சங்களை கொண்டுள்ளது. இந்த நோக்கியா 360 டிகிரி கேமராக்கள் எல்லாமே ஒற்றுமையான அம்சங்களை கொண்டுள்ளது.
இருப்பினும் சில குறிப்பிட்ட மாற்றங்களை மட்டும் ஹார்டுவேர் தரத்தில் மாற்றங்களை பெறுகிறது. புதிய நோக்கியா 360 டிகிரி கேமராக்கள் 8K தரத்தில் லோ-லேடன்சி உடன் ஸ்ட்ரீம் செய்கிறது. இந்த நோக்கியா கேமரா (Nokia camera) மாடல்கள் IP67 வாட்டர் ப்ரூப் (waterproof) பாதுகாப்புடன் வருகிறது. ஹை-ரெசொலூஷன் 360° வீடியோ மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ அனுபவத்தை 5ஜி வைஃபை மற்றும் ஈதர்நெட் இணக்கத்துடன் வழங்குகிறது.
நோக்கியா 5ஜி 360° கேமரா (Nokia 5G 360° Camera):
இந்த நோக்கியா 360 டிகிரி கேமராக்கள் ஒரு இடத்தில பல மல்டிகேமரா (multicamera) தேவையை குறைக்கிறது. இதன் மூலம் 3 கேமரா வாங்கும் இடத்தில், ஒரே ஒரு கேமராவை நீங்கள் பயன்படுத்தலாம். இதன் மூலம் பணமும் மிச்சமாகிறது. இது தவிர இன்னும் பல அதிநவீன அம்சங்களை இந்த நோக்கியா 360 டிகிரி கேமராக்கள் கொண்டுள்ளது.
இந்த நோக்கியா கேமரா ரியல்டைம் வீடியோ மற்றும் ஆடியோ டிரான்ஸ்மிஷன் (Real-time video and audio transmission ) அம்சத்தை கொண்டுள்ளது. அதுவும் பாதுகாப்பான டிரான்ஸ்மிஷனை இது வழங்குகிறது. இந்த கேமராவில் RXRM என்ற ரியல்டைம் எக்ஸ்டன்டாட் ரியாலிட்டி மல்டிமீடியா (Real-time eXtended Reality Multimedia) ரிமோட் மானிட்டரின் ஆதரவையும் இந்த கேமரா கொண்டுள்ளது. இதன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் கேமரா உள்ளடக்கங்களை பார்வையிடலாம்.
நோக்கியா 5ஜி 360° கேமரா விலை:
இது மிகப்பெரிய ஏரியாவை கவர் செய்யும் திறன் கொண்டது. பெரிய அலுவலகங்கள், கம்பெனிகள் போன்ற இடங்களை கண்காணிக்க பயன்படுத்தப்படலாம். விருப்பமுள்ளவர்கள் வீடுகளுக்கும் வாங்கி பயன்படுத்தலாம்.இதன் விலை பற்றிய விபரங்களை நோக்கியா நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. ஆனால், இந்த நோக்கியா 360 டிகிரி கேமராக்களை விரைவில் சந்தைக்குள் கொண்டுவர நோக்கியா முடிவு செய்துள்ளதால், விலை விபரம் விரைவில் வெளியிடப்படலாம்.


Click it and Unblock the Notifications








