Home
Gadgets

மார்க்கெட் அதகளம்.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி விஷன்.. Nokia 50-இன்ச் 4கே டிவி அறிமுகம்.. என்ன விலை?

நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட் டிவிகளை (Nokia Branded Smart TVs) தயாரிக்கும் உரிமம் (license) பெற்ற பல நிறுவனங்களில் ஒன்றான ஸ்ட்ரீம்வியூ (StreamView) தற்போது நோக்கியா 50-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த மாதம் தொடக்கத்தில் 24-இன்ச், 32-இன்ச், 40-இன்ச், 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 50-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி தரமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

 மார்க்கெட் அதகளம்.. Nokia 50-இன்ச் 4கே டிவி அறிமுகம்.. என்ன விலை?

நோக்கியா 50-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அம்சங்கள்: 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே மற்றும் 3840 x 2160 பிக்சல்ஸ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா 50-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி. மேலும் எச்டிஆர் 10 ஆதரவு மற்றும் டால்பி விஷன் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா டிவி.

குறிப்பாக இந்த டிவியில் விவிட் கலர்ஸ் (vivid colors) ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். மேலும் ஏஆர்எம் கார்டெக்ஸ்-சிஏ55 குவாட்-கோர் சிபியு மற்றும் மாலி 470 எம்பி3 ஜிபியு (Mali 470 MP3 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் கார்டெக்ஸ்-சிஏ55 குவாட்-கோர் பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவியின் மென்பொருள் அமைப்பு மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஸ்ட்ரீம்வியூ நிறுவனம்.

மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த நோக்கியா டிவி. டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டிடிஎஸ் சவுண்ட் ஆதரவு கொண்ட இரண்டு 10 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டு வெளிவந்துள்ளது நோக்கியா 50-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நோக்கியா 50-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் பில்ட்-இன் குரோம்காஸட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ மற்றும் யூடியூப் போன்ற பிரபலமான ஸ்ட்ரீமிங் சேவைகளை வழங்குகிறது இந்த நோக்கியா 50-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல். இதுதவிர கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 7000க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் வருகிறது. குறிப்பாக ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் இந்த ரிமோட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மார்க்கெட் அதகளம்.. Nokia 50-இன்ச் 4கே டிவி அறிமுகம்.. என்ன விலை?

4 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள், ஈதர்நெட் லேன் போர்ட், டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 4.2 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த 50-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த டிவியின் எடை 9 கிலோ ஆகும். கருப்பு நிறத்தில் இந்த டிவியை வாங்க முடியும்.

இந்தியாவுக்கு வருமா? நோக்கியா 50-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியின் விலை $427 (இந்திய மதிப்பில் ரூ.35,498) ஆகும். தற்போது இந்த டிவி சர்வதேச சந்தைகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் நோக்கியா 50-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்படுவதைக் குறித்து ஸ்ட்ரீம்வியூ எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. இருந்தபோதிலும் இந்த 50-இன்ச் நோக்கியா டிவி இந்தியாவுக்கு வந்தால் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 50 inch 4K Android TV launched by StreamView: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X