43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! விலை எவ்வளவு? எப்போது விற்பனை?

|

நோக்கியா நிறுவனம் தனது 43-இன்ச் ஸ்கிரீன் கொண்ட நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வரும் ஜூன் 8-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

வீட்டு வாசலில் இலவச அங்கீகரிக்கப்பட்ட

பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும் இந்த சாதனத்திற்கு ஓராண்டு தரமான உத்தரவாதத்தையும், வீட்டு வாசலில் இலவச அங்கீகரிக்கப்பட்ட பழுதுபார்ப்பையும் வழங்குகிறது நோக்கியா நிறுவனம். மேலும் வாடிக்கையாளர்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கால் சென்டர் சேவை
என பல்வேறு சலுகைகளை வழங்குகிறது இந்நிறுவனம்.

மூன்று ஆண்டு முடிவில் 30 சதவீத

நோக்கியா ஸ்மார்ட் டிவியை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் முழுமையான பாதுகாப்பையும் தேர்வு செய்யலாம். இதன் பொருள் பயனர்கள் முழுமையான பாதுகாப்புத் திட்டத்தை வாங்குவதற்கு இரண்டு வருட கூடுதல் முழு உத்தரவாதத்தையும், மூன்று ஆண்டு முடிவில் 30 சதவீதஉத்தரவாத பரிமாற்ற மதிப்பையும் பெறுவார்கள்.

Sundar Pichai: உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவச இண்டர்நெட்: சுந்தர் பிச்சையின் எதிர்பார்ப்பு.!Sundar Pichai: உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவச இண்டர்நெட்: சுந்தர் பிச்சையின் எதிர்பார்ப்பு.!

Chromecast ஆதரவு போன்ற

நோக்கியா 43-இன்ச் 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் மற்றும் உள்ளமைக்கப்பட்ட Chromecast ஆதரவு போன்ற அம்சங்களுடன் வருகிறது. மேலும் கூகுள் பிளே ஸ்டோர்-கான ஆதரவுடன் நீங்கள் அதிகமான பயன்பாடுகளைப் பதிவிறக்கலாம். பின்பு நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், ZEE5, யூடியூப் மற்றும் பிற முக்கிய App பயன்பாடுகளை ஆதரிக்கிறது
இந்த ஸ்மார்ட் டிவி.

ஸ்மார்ட் டிவி ஆனது 43-இன்ச்

புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆனது 43-இன்ச் ஸ்கிரீன் மற்றும் 3840 × 2160 பிக்சல்கள் திர்மானம் அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் காட்சியை பொறுத்தவரை178 டிகிரி கோணங்களை ஆதரிக்கிறது. பின்பு 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 16:9 விகிதம், 400nits பிரைட்ஸ்நஸ் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

பல்வேறு ஆதரவுகள்

இந்த ஸ்மார்ட் டிவியில் 1200: 1 (Static) contrast ratio, டால்பி விஷன்,எம்இஎம்சி தொழில்நுட்பம், நுண்ணறிவுஎனப் பல்வேறு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. பன்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர்

43-இன்ச் ஸ்கிரீன் கொண்ட நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல் 1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53பிராசஸர் வசதியுடன் மாலி 450எம்பி4 ஜிபியு ஆதரவையும் கொண்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சியோமி ஸ்மார்ட் டிவிகளை விட சிறந்த மென்பொருள் அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா டிவி.

 ட்ரூ சரவுண்ட் ஒலி

ஆடியோவைப் பொறுத்தவரை, 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆனது டி.டி.எஸ் ட்ரூ சரவுண்ட் ஒலி அனுபவத்துடன் கீழே 24 வாட் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஜேபிஎல் ஸ்பீக்கர் ஆதரவும், டால்பி ஆடியோ அம்சத்தையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

 இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்

வைஃபை 802.11, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி2.0 போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், ஈதர்நெட் ஆகிய பல்வேறுஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி ஸ்டாண்ட் இல்லாமல் 9.3 கிலோ எடையும்,ஸ்டாண்டில் 9.4 கிலோ எடையும் கொண்டது.

நோக்கியா ஸ்மார்ட் டிவி

43-இன்ச் ஸ்கிரீன் கொண்ட நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.31,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia 43 Inch Smart TV Launched: Price in India, Sale Date and Other Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X