ஜன.31 அதிரும்.. ரூ.1,999 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. ஹெல்த் சூட்.. நாய்ஸ் ஓஎஸ்.. எந்த மாடல்?
அமேசான் அதிரும்படி மலிவான பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, நாய்ஸ்ஓஎஸ், மெட்டாலிக் டிசைன், ஹெல்த் சூட், 7 நாட்கள் பேட்டரி பேக்கப் போன்ற பக்காவான அம்சங்களுடன் நாய்ஸ்ஃபிட் வோர்டெக்ஸ் பிளஸ் (NoiseFit Vortex Plus) ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வரவிருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
நாய்ஸ்ஃபிட் வோர்டெக்ஸ் பிளஸ் அம்சங்கள் (NoiseFit Vortex Plus Specifications): இந்த நாய்ஸ்ஃபிட் மாடலானது, பிரீமியம் டிசைனில் (Premium Metallic Design) ரவுண்ட் டயல் (Round Dial) கொண்டிருக்கிறது. ஸ்லீக் பினிஷிங் (Sleek Finishing) வருகிறது. அதோடு டூயல் கன்ட்ரோல் பட்டன்கள் (Dual Control Buttons) வருகின்றன. 1.46 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது.

இதுவொரு ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-on Display) மாடலாகும். அதோடு 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்டிருப்பதால், அவுட்டோர் டிஸ்பிளே அவுட்புட் பக்காவாக இருக்கும். இந்த நாய்ஸ்ஃபிட் வோர்டெக்ஸ் பிளஸ் மாடலில் நாய்ஸ் ஓஎஸ் (Noise OS) பயன்படுத்தப்பட்டுள்ளது. இது யுஐ பர்ஃபாமென்ஸ் (UI Perfomance), மல்டி டாஸ்கிங் (Multi Tasking) ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
அதேபோல பேங்கிரவுண்ட் ரன்னிங் (Background Running) பர்ஃபாமென்ஸை அதிவேகமாக மாற்றுகிறது. இந்த நாய்ஸ்ஃபிட் வோர்டெக்ஸ் பிளஸ் வாட்ச்சில் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) வருகிறது. ஆகவே, டயல் பேட் (Dial Pad) மற்றும் காண்டாக்ட்ஸ் (Contacts) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இன்-பில்ட் மைக் (In-built Mic) வருகிறது.
அதேபோல இன்-பில்ட் ஸ்பீக்கர் (In-built Speaker) கொண்டுள்ளது. இந்த வாட்ச்சில் 100+ வாட்ச் பேஸ்கள் (Watch Faces), அனிமேடெட் வாட்ச் பேஸ்கள் (Animated Watch Faces) வருகின்றன. இந்த நாய்ஸ்ஃபிட் வோர்டெக்ஸ் பிளஸ் வேரியண்ட்டில் நாய்ஸ் ஹெல்த் சூட் (Noise Health Suite) வருகிறது. ஹெல்த் டிராக்கர்கள் (Health Trackers) மற்றும் ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) கொடுக்கப்பட்டுள்ளன.
ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ப்ரீத் டிரெயினிங் (Breathing Training), ஃபீமேல் சைக்கிள் டிராக்கர் (Female Cycle Tracker), ஸ்லீப் டிராக்கர் (Sleep Tracker), எஸ்பிஓ2 டிராக்கர் (SpO2 Tracker) மற்றும் ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கர் (Stress Level Tracker) ஆகியவை வருகின்றன. மல்டிபிள் வொர்க்அவுட் மோட்கள் (Multiple Workout Modes) கொண்டிருக்கிறது.
இதில் ரன்னிங், ஸ்விம்மிங், ஜாக்கிங், சைக்கிளிங், கிளம்பிங் போன்ற முக்கிய மோட்களும் இடம் பெற்றுள்ளன. ஆப், எஸ்எம்எஸ் மற்றும் கால்களுக்கான நோட்டிபிகேஷன் டிஸ்பிளே (Notification Display) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு குயிக் ரிப்ளே (Quick Reply) சப்போர்ட் வருகிறது. கேமரா கன்ட்ரோல் (Camera Control) மற்றும் மியூசிக் கன்ட்ரோல் (Music control) செய்து கொள்ளலாம்.
அதோடு வெதர் அப்டேட் (Weather Updates), ஸ்மார்ட் டிஎன்டி (Smart DND), ரீமைண்டர்கள் (Reminders) மற்றும் கால்குலேட்டர் (Calculator) ஆகிய பீச்சர்கள் வருகின்றன. இந்த நாய்ஸ்ஃபிட் வோர்டெக்ஸ் பிளஸ் மாடலில் 7 நாட்கள் பேட்டரி பேக்கப் வருகிறது. இந்த வாட்ச்சின் மெட்டல் ஸ்ட்ராப் வேரியண்ட்களில் (Metal Strap Variants) பிளாக் லிங்க் (Black Link) மற்றும் சில்வர் லிங்க் (Silver Link) ஆகிய கலர்கள் வருகின்றன.
அதோடு லெதர் ஸ்ட்ராப் வேரியண்ட்களில் (Leather Strap Variants) கிளாசிக் பிரவுன் (Classic Brown) மற்றும் கிளாசிக் கிரே (Classic Grey) கலர்களும் சிலிகான் ஸ்ட்ராப் வேரியண்ட்களில் (Silicone Strap Variants) ஜெட் பிளாக் (Jet Black), விண்டேஜ் பிரவுன் (Vintage Brown) மற்றும் ஸ்பேஸ் பிரவுன் (Space Brown) ஆகிய கலர்களும் வருகின்றன.
இந்த நாய்ஸ்ஃபிட் வோர்டெக்ஸ் பிளஸ் வாட்ச் வரும் ஜனவரி 31ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. அமேசான் (Amazon) மற்றும் கோநாய்ஸ் (Gonoise) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதன் விலை ரூ.1,999ஆக நிர்யணயம் செய்ய்பட்டுள்ளது. இதுவெறும் அறிமுக சலுகை மட்டுமேயாகும். ஆகவே, விரைவில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








