Home
Gadgets

புரட்டிப்போடும் பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. 3ATM ரெசிஸ்டன்ஸ்.. AI அசிஸ்டன்ட்.. 7 நாட்கள் பேட்டரி.. எந்த மாடல்?

சிங்கிள் கட் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிசைன் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, லெதர் ஸ்ட்ராப், கிளவுட் வாட்ச் பேஸ்கள், ஆப் சப்போர்ட், ஹெல்த் மானிட்டர்கள், ஹெல்த் டிராக்கர்கள், IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட், கெஸ்ச்சர் கன்ட்ரோல், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் நெபுலா ஓஎஸ் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் நாய்ஸ்ஃபிட் ஓர்ஜின் (NoiseFit Origin) ஸ்மார்ட்வாட்ச் வெளியாகி இருக்கிறது. இந்த நாய்ஸ்ஃபிட் ஓர்ஜினின் முழு பீச்சர்கள் எப்படி? விலை மற்றும் விற்பனை எப்படி? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

நாய்ஸ்ஃபிட் ஓர்ஜின் அம்சங்கள் (NoiseFit Origin Specifications): சிங்கிள் கட் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிசைனில் (Single Cut Stainless Steel Design) ரவுண்ட் டயல் கொண்டிருக்கிறது. பிரீமியம் லுக் கொண்ட சிலிகான் (Silicone) மற்றும் லெதர் ஸ்ட்ராப் (Leather Straps) வேரியண்ட் கொண்டிருக்கிறது. 1.46 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.

புரட்டிப்போடும் பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. 3ATM ரெசிஸ்டன்ஸ் மாடல்!

இந்த டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இதுவொரு ஏபெக்ஸ்விஷன் (ApexVision) சப்போர்ட் கொண்ட ஆல்வேஸ்-ஆன்-டிஸ்பிளே (Always-On Display) மாடலாகும். 100+ கிளவுட் பேஸ்டு வாட்ச் பேஸ்கள் (Cloud Based Watch Faces) வருகின்றன. ப்ளூடூத் காலிங் (Bluetooth calling) உள்ளது.

ஆகவே, ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி வருகிறது. இந்த நாய்ஸ் மாடலில் IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. பிரத்யேகமாக நெபுலா யுஐ (Nebula UI) கொண்ட ஈஎன் 1 ப்ராஸசர் (EN 1 Processor) வருகிறது. இதனால், இந்த நாய்ஸ்ஃபிட் ஓர்ஜின் மாடலில் பக்கா பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.

ஹெல்த் மானிட்டர்களை பொறுத்தவரையில் ஹார்ட் ரேட் டிராக்கிங் (Heart Rate Tracking), ஸ்லீப் மானிட்டரிங் (Sleep Monitoring), பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டரிங் (Blood Oxygen Level Monitoring), ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கிங் (Stress Level Tracking) மற்றும் ஃபீமேல் சைக்கிள் டிராக்கிங் (Female Cycle Tracking) வருகிறது.

ஆகவே, அதற்கான சென்சார்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்பீச்சர்களை பார்க்கையில் எஸ்ஓஎஸ் (SoS), ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistant), டிஎன்டி (DND) வருகிறது. ரோட்டேடிங் கிரவுண் கன்ட்ரோல் கொண்டிருக்கிறது. இந்த நாய்ஸ்ஃபிட் மாடலில் கெஸ்ச்சர் (Gestures) சப்போர்ட் வருகிறது.

ஆகவே, மியூட்டிங் கால் மற்றும் போட்டோ கேப்ச்சர் போன்றவற்றை மணிக்கட்டை அசைத்து கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங் போன்ற 100 ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன. ஆகவே, 3ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டிருக்கிறது. 1.5 மீட்டர் ஆழம் வரையில் பயன்படுத்தலாம்.

அதிகபட்சம் 30 நிமிடங்கள் வரையில் தாக்குபிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. இந்த நாய்ஸ்ஃபிட் ஓர்ஜின் மாடலில் 7 நாட்களுக்கு பேக்கப் எதிர்பார்க்கலாம். நாய்ஸ்ஃபிட் ஆப் (NoiseFit App) மூலம் கனெக்ட் செய்து கொள்ளலாம். ஹெல்த் மானிட்டர் டேட்டாக்களை அதிலும் பார்த்து கொள்ளலாம்.

இந்த மாடலில் 6 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஜேட் பிளாக் (Jet Black), சில்வர் கிரே (Silver Grey), மிட்நைட் பிளாக் (Midnight Black), மொசைக் ப்ளூ (Mosaic Blue), கிளாசிக் பிளாக் (Classic Black) மற்றும் கிளாசிக் பிரவுன் (Classic Brown) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

கோநாய்ஸ்.காம் (gonoise.com), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. இந்த நாய்ஸ்ஃபிட் ஓர்ஜின் மாடலின் விலை ரூ.6,499ஆக இருக்கிறது. பீரிமியம் பீச்சர்கள் மற்றும் லுக் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
NoiseFit Origin With AMOLED Display Sale From June 7 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X