Home
Gadgets

பிரீமியம் தரம்.. டிஸ்பிளே ஆன் நிரந்தரம்.. கலக்கலான NoiseFit Origin.. விலை என்ன? எப்போது வாங்கலாம்?

நாய்ஸ் (Noise) நிறுவனம், அதன் ஸ்மார்ட்வாட்ச் வரிசையில் மீண்டும் ஒரு புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது நாய்ஸ்ஃபிட் ஒரிஜின் (NoiseFit Origin) என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களை கவரும் விதத்தில் இது பல அம்சங்களை கொண்டுள்ளது. இந்த புதிய NoiseFit Origin வாட்ச் பற்றிய முழு விபரத்தை இப்போது பார்க்கலாம்.

நாய்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களில் புதிய சேர்ப்பாக இந்த நாய்ஸ்ஃபிட் ஒரிஜின் (NoiseFit Origin) சாதனத்தை நாய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. EN 1 பிராசஸர், ஹெப்டிக் ஃபீட்பேக் வைப்ரேஷன் போன்ற பல அட்டகாசமான அம்சங்களுடன், இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை என்ன? இதன் முழு சிறப்பம்ச விபரங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

பிரீமியம் தரம்.. டிஸ்பிளே ஆன் நிரந்தரம்.. கலக்கலான NoiseFit Origin..

நாய்ஸ்ஃபிட் ஒரிஜின் (NoiseFit Origin):

நாய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய நாய்ஸ்ஃபிட் ஒரிஜின் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 1.46" இன்ச் அளவு கொண்ட ஏபெக்ஸ் விஷன் அமோலேட் (ApexVision AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே நாய்ஸ் கிராஸ்பீட்ஸ் ஆர (CrossBeats Aura) ஸ்மார்ட்வாட்ச் போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது. இது 600 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (peak brightness) உடன் வருகிறது. இது நிரந்தரமாக ஆன் இல் இயங்கும் ஒரு ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளேவாகும்.

இது 100 வாட்ச் பேஸ் முகங்களை கஸ்டமைஸ் செய்து மாற்ற அனுமதிக்கும் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் ரொடேட்டிங் கிரௌன் (rotating crown) பட்டன் உடன் வருகிறது. இந்த நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் (Noise Smartwatch) சாதனம் 24/7 மணி நேர ஹார்ட் ரேட் கண்காணிப்பை வழங்குகிறது. இது பெண்கள் ஆரோக்கியத்திலும் ஒரு கண்ணை வைத்து கண்காணித்துக்கொள்கிறது.

அதேபோல், இந்த நாய்ஸ்ஃபிட் ஒரிஜின் (NoiseFit Origin) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் பிளட் ஆக்சிஜன் கண்காணிப்பு (monitoring blood oxygen), SpO2 லெவல், ஸ்லீப் மானிட்டர் (sleep monitor), மற்றும் ஸ்ட்ரெஸ் ட்ராக்கிங் (stress tracking) போன்ற பல அற்புதமான அம்சங்களை ஆதரிக்கிறது. இது 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட் ஆதரவையும் கொண்டுள்ளது.

7 நாட்களுக்கு நீடிக்கும் பேட்டரி.. கலக்கலான NoiseFit Origin ஸ்மார்ட்வாட்ச்:

புதிய பிரீமியம் நாய்ஸ்ஃபிட் ஒரிஜின் (NoiseFit Origin) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் ப்ளூடூத் 5.3 இணைப்புடன் ப்ளூடூத் கால்லிங் அம்சத்தை ஆதரிக்கிறது. கை அசைவில் வாய்ஸ் கால் அழைப்புகளை மியூட் செய்ய அனுமதிக்கும் சில கெஷ்டர் அம்சங்களையும் இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 7 நாட்களுக்கு நீடிக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது.

இது ஸ்மார்ட் டிஎன்டி (Smart DND) மற்றும் ஷெட்யூல் டிஎன்டி (Scheduled DND) போன்ற பிரத்தியேக அம்சங்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் IP68 ரேட்டிங் உடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது. மறுபுறம் இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 3ATM வரை நீரில் செயல்படக்கூடியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, 1.5 மீட்டர் ஆழம் வரை சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக தடையில்லாமலும், பாதிப்பு இல்லாமலும் செயல்பட கூடியது என்று நாய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், இந்த NoiseFit Origin ஸ்மார்ட்வாட்ச் சாதனம் ரூ. 6,499 என்ற விலையில் இந்தியாவில் வாங்க கிடைக்கும். இது ஜெட் பிளாக் (Jet Black), சில்வர் க்ரேய் (Silver Grey) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) நிறங்களில் கிடைக்கும்.

இதற்கு அடுத்தபடியாக, NoiseFit Origin Watch கிளாசிக் பிரவுன் மற்றும் கிளாசிக் பிளாக் நிறங்களில் கிடைக்கும். இவை மேக்னெட்டிக் கிளாஸ்ப், லெதர் மற்றும் சிலிகான் ஸ்ட்ராப் விருப்பங்களில் கிடைக்கும். நாய்ஸ் நிறுவனத்தின் வலைத்தளம், அமேசான், பிளிப்கார்ட் வழியாக ஜூன் 7, 2024 முதல் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
NoiseFit Origin Premium Smartwatch 1.46 inch ApexVision AMOLED Display 7 Days Battery Life Launched Rs 6499 India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X