மொரட்டு பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. வாய்ஸ் அசிஸ்டன்ட்.. ப்ளூடூத் காலிங்.. 7 நாட்கள் பேட்டரி.. எந்த மாடல்?
ஸ்போர்ட்ஸ் லுக் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, நாயஸ் ஹெல்த் சூட், ட்ரூ சிங்க் டெக்னாலஜி, ப்ளூடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டன்ட், IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட், 7 நாட்கள் பேட்டரி பேக்கப் போன்ற பீச்சர்களுடன் நாய்ஸ்ஃபிட் ஜாவெலின் (NoiseFit Javelin) ஸ்மார்ட்வாட்ச் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. பட்டையை கிளப்பும் பில்ட் குவாலிட்டி, அல்ட்ரா பிரீமியம் டிசைன் போன்ற மற்ற அம்சங்களிலும் பின்னிப்பெடல் எடுக்கிறது. இந்த நாய்ஸ்ஃபிட் ஜாவெலின் மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இதுவொரு லிமிடெட் எடிஷன் மாடலாகும். அமேசான் (Amazon), மைந்த்ரா (Myntra) மற்றும் கோநாய்ஸ்.காம் (gonoise.com) ஆகிய தளங்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த மாடலின் பாடியில் 3 லேயர்ட் கேஸிங் (3 Layer Casing) மற்றும் நீரஜ் சோப்ராவின் ஆட்டோகிராப் இடம்பெற்றுள்ளது. அதேபோல ஸ்பெஷல் பூட்-அப் லோகோ (Special Boot-up Logo) கொண்டிருக்கிறது.

நாய்ஸ்ஃபிட் ஜாவெலின் அம்சங்கள் (NoiseFit Javelin Specifications): இந்த நாய்ஸ் மாடலில் 1.46 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. எச்டி (HD) ரெசொலூஷன் வருகிறது. ரவுண்ட் டயல் டிசைனில் (Round Dial Design) 3 லேயர்ட் பில்ட் பாடி வருகிறது. ஸ்க்ரூவ் டயல் கிரவுன் (Screw Dial Crown) வருகிறது. ரக்கட் மற்றும் ஸ்போர்ட்ஸ் லுக் கொடுக்கிறது.
இந்த வாட்ச்சில் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) வருகிறது. ஆகவே, டயல் பேட் (Dial Pad), ரீசண்ட் கால் ஹிஸ்டரி (Recent Call History) சப்போர்ட் வருகிறது. அதேபோல இன்-பில்ட் மைக்ரோபோன் (In-built Microphone) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) வருகிறது. நாய்ஸ்ஃபிட் ஆப் (NoiseFit App) கனெக்டிவிட்டி வருகிறது. ஆகவே, ஆப் மூலம் கன்ட்ரோல் செய்ய முடியும்.
100+ கிளவுட் பேஸ்டு வாட்ச் பேஸ்கள் (Cloud-based Watch Faces) வருகின்றன. இந்த வாட்ச்சில் நாய்ஸ் ஹெல்த் சூட் (Noise Health Suite) வருகிறது. ஆகவே, ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) மற்றும் ஆக்டிவிட்டி டிராக்கர்கள் (Activity Trackers) சப்போர்ட் வருகிறது. ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Heart Rate Monitoring), எஸ்பிஓ2 மானிட்டரிங் (SpO2 Monitoring) உள்ளது.

மேலும், ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking), ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கிங் (Stress Level Tracking), ஃபீமேல் சைக்கிள் டிராக்கிங் (Female Cycle Tracking) மற்றும் ப்ரீத் பிராக்டிஸ் (Breathing Practice) சப்போர்ட் வருகிறது. ரன்னிங், ஜாக்கிங், வாக்கிங், சைக்கிளிங் உள்ளிட்ட 100+ ஸ்போர்ட் மோட்கள் வருகின்றன. வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (Voice Assistance Support) வருகிறது.
IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் உள்ளது. இந்த நாய்ஸ்ஃபிட் ஜாவெலின் மாடலில் 7 நாட்கள் பேக்கப் கொடுக்கும் பேட்டரி வருகிறது. ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், எமர்ஜென்ஸி எஸ்ஓஎஸ், டிஎன்டி, வெதர் அப்டேட், கேமரா கன்ட்ரோல் மற்றும் மியூசிக் கன்ட்ரோல் வருகிறது. அதேபோல வெதர் அப்டேட்கள் மற்றும் நோட்பிகேஷன் டிஸ்பிளே சப்போர்ட் உள்ளது.
இந்தியன் ப்ளூ (Indian Blue) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த நாய்ஸ்ஃபிட் ஜாவெலின் மாடலின் விலை ரூ.3999ஆக இருக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, ஹெல்த் மானிட்டர்கள், ஹெல்த் டிராக்கர்கள் போன்ற பீச்சர்களுடன் ஸ்போர்ட்ஸ் பில்ட் பாடி கொண்ட மாடல் பட்ஜெட்டில் வேண்டுமானால், இந்த மாடலை ஆப்ஷனில் எடுங்கள்.


Click it and Unblock the Notifications








