Home
Gadgets

NoiseFit Halo: போடு! உடனே ஆர்டர் போடு! இப்படி ஒரு Smartwatch தான் வாங்க வெயிட் செஞ்சோம்.!

இந்திய சந்தையில் பல தரமான பட்ஜெட் ஸ்மார்ட் வாட்ச்களில், AMOLED டிஸ்ப்ளேவில் புளூடூத் அழைப்பு, ஸ்லீப் மோட், 150-க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ் போன்ற அம்சங்களை அனுபவிக்க விரும்புபவர்களுக்காக NoiseFit நிறுவனம், புதிய ஹாலோ (Halo) ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது.

NoiseFit Halo மிகவும் நேர்த்தியான வடிவமைப்புடன், கண்கவர் வண்ணத்தில் வருகிறது. இது ரூ. 5,000 விலைப் பிரிவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது boAt, Fire Boltt மற்றும் Ambrane போன்ற மற்ற பிராண்டுகளின் ஸ்மார்ட் வாட்சுடன் நேரடி போட்டியில் களமிறங்குகிறது. சரி, இப்போது இந்த புதிய NoiseFit Halo ஸ்மார்ட் வாட்சின் விலை என்ன? இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளதென்று பார்க்கலாம்.

NoiseFit Halo: போடு! உடனே ஆர்டர் போடு! இப்படி ஒரு watch தான் வாங்கனும்

NoiseFit Halo விலை என்ன?

இந்தியாவில் NoiseFit Halo ஸ்மார்ட் வாட்சின் விலை ரூ. 3,999 ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் பிப்ரவரி 27 ஆம் தேதி மதியம் 12 மணி முதல், ஆன்லைனில் விற்பனைக்கு வருகிறது. மேலும், GoNoise இணையதளத்தில் பதிவு செய்த பயனர்களுக்கு, இந்த NoiseFit Halo வாங்கினால் கூடுதலாக ரூ.300 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. NoiseFit Halo ஸ்மார்ட் வாட்ச் சாதனம் ஸ்டேட்மென்ட் பிளாக், விண்டேஜ் பிரவுன் நிறத்தில் வருகிறது.

இது கூடுதலாக ஃபாரஸ்ட் கிரீன், ஜெட் பிளாக், ஃபியரி ஆரஞ்சு மற்றும் கிளாசிக் பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இந்த குறைந்த விலையில், NoiseFit Halo ஃபயர் போல்ட் கோப்ரா மற்றும் போட் ஸ்டார்ம் கால் போன்ற பிரபலமான விருப்பங்களைப் பெறுகிறது. இந்த NoiseFit Halo ஸ்மார்ட் வாட்சின் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இது 466 × 466 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 1.43' இன்ச் ஆல்வேஸ்-ஆன் AMOLED பேனலைக் கொண்டுள்ளது.

பாஸ்ட் பேரிங் மற்றும் குறைந்த மின் நுகர்வுக்கான ஆதரவுடன், புளூடூத் காலிங் அழைப்பு அம்சம் போன்றவற்றை இந்த NoiseFit Halo ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளது. சுகாதாரத் திறன்களைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ் ஹெல்த் சூட்-ஐ வழங்குகிறது. இது SPo2, ஸ்லீப் மானிட்டர், இதயத் துடிப்பு, ஸ்டேப் கவுண்ட் மற்றும் சுவாச முறைகளுக்கான டிராக்கர்களைக் கொண்டுள்ளது.

NoiseFit Halo: போடு! உடனே ஆர்டர் போடு! இப்படி ஒரு watch தான் வாங்கனும்

NoiseFit Halo பேட்டரி எத்தனை நாள் நீடிக்கும்?

Noise ஆப்ஸ், சுகாதார இலக்குகளை நிறைவு செய்தல், நிகழ்நேர சுகாதாரத் தரவுகளுக்கான அணுகல், உடற்பயிற்சி சவால்கள் மற்றும் 150+ வாட்ச் ஃபேஸ்களில் இருந்து தேர்வு செய்தல் போன்ற பல அம்சத்தை இந்த NoiseFit Halo ஸ்மார்ட் வாட்ச் உங்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே Noise நிறுவனத்தின் தயாரிப்புகள் சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது.

NoiseFit Halo ஸ்மார்ட் வாட்ச் ஒரு பிரீமியம் மெட்டாலிக் கட்டமைப்பைப் பெறுகிறது. இது லெதர் ஸ்ட்ராப், கடினமான சிலிகான் மற்றும் ஸ்டாண்டர்ட் சிலிகான் ஆகிய விருப்பங்களுடன் வருகிறது. இந்த NoiseFit Halo ஸ்மார்ட்வாட்ச் வழக்கமான பயன்பாட்டுடன் 7 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்குகிறது. புளூடூத் அழைப்புடன் ஹெவி யூசேஜ் பொழுது இது 1 நாள் வரை நீடிக்கும் ஆயுளை வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாட்ச் IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் உடன் வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில், NoiseFit Crew ஆனது சமீபத்தில் இந்த பிராண்டால் வெளியிடப்பட்டது. இதன் விலை வெறும் ரூ.1,499 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. NoiseFit Halo ஸ்மார்ட்வாட்ச் இதேபோன்ற வடிவமைப்புடன் வருகிறது, ஆனால் AMOLED பேனல் மற்றும் மெட்டாலிக் பில்ட் போன்ற பிரீமியம் அம்சங்கள் அதில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

Best Mobiles in India

English summary
NoiseFit Halo smartwatch launched in India at Rs 3999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X