Home
Gadgets

தலைவன் பின்றானே.. AMOLED டிஸ்பிளே.. 7 நாட்கள் பேட்டரி.. ஹார்ட் ரேட் டிராக்கிங்.. எந்த மாடல்?

நாய்ஸ் நிறுவனத்தின் புதிய மற்றும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்வாட்ச் மாடலான நாய்ஸ்ஃபிட் ஹாலோ 3 (NoiseFit Halo 3) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அமோலெட் டிஸ்பிளேவை கொடுத்தது மட்டுமல்லாமல், வாய்ஸ் கமெண்ட், நாய்ஸ் ஏஐ ப்ரோ உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்துள்ளது. இந்த நாய்ஸ்ஃபிட் ஹாலோ 3 மாடலின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் மலிவு விலைக்கு இயர்பட்ஸ், நெக்பேண்ட் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை நாய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. இதில் நாய்ஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த வரிசையில் பிரீமியம் லுக் கொடுக்கும் மாடலாக நாய்ஸ்ஃபிட் ஹாலோ 3 அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தலைவன் பின்றானே.. AMOLED டிஸ்பிளே.. 7 நாட்கள் பேட்டரி.. எந்த மாடல்?

ஸ்போர்ட் பிரியர்களுக்கு ஏற்ப டிசைன் கொடுக்கும் மாடலாகவும் இருக்கிறது. மெட்டாலிக் பாடியில் ரவுண்ட் டயல் கொடுக்கிறது. ரோட்டேஷ்னல் கிரவுண் கிடைக்கிறது. மெட்டாலிக் ஸ்ட்ராப் (Metalic Strap), சிலிகான் ஸ்ட்ராப் (Silicon Strap) மற்றும் லெதர் ஸ்ட்ராப் (Leather Strap) போன்ற மல்டிபிள் ஸ்ட்ராப் கொடுக்கும்படி வேரியண்ட்கள் கிடைக்கின்றன.

நாய்ஸ் ஏஐ ப்ரோ (Noise AI Pro) சப்போர்ட் கொடுப்பதால், ஏஐ பீச்சர்களை கொடுக்கும் மாடலாகவும் இந்த நாய்ஸ்ஃபிட் ஹாலோ 3 இருக்கிறது. ஏஐ டிரான்ஸ்கிரிப்ஷன் (AI Transcription) உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்துள்ளது. வாய்ஸ் கமெண்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. கியூஆர் கோட், டிக்கெட்ஸ் உள்ளிட்டவைக்கு ஸ்டோரேஜ் கொடுக்க நாய்ஸ் வால்ட் (Noise Vault) கிடைக்கிறது.

நாய்ஸ்ஃபிட் ஹாலோ 3 அம்சங்கள் (NoiseFit Halo 3 Specifications): 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 1.43 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இதில் சூப்பர் நோட்டிபிகேஷன் (Super Notifications) சப்போர்ட் கிடைக்கிறது. ஓடிபி, எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஆப் நோட்டிபிகேஷன்களையும் இதில் பார்த்து கொள்ளலாம்.

கஸ்டமைசபிள் ஸ்மார்ட் டேஸ்போர்ட் (Customizable Smart Dashboard) கிடைக்கிறது. மியூசிக் கன்ட்ரோல்கள், ஏகியூஐ அப்டேட்கள், ஹைட்ரேஷன் டிராக்கிங் உள்ளிட்டவையை டேஸ்போர்ட்டில் வைத்து கொள்ளலாம். நாய்ஸ் வால்ட் (Noise Vault) வழியாக கியூஆர் கோட் உள்ளிட்ட முக்கிய டிஜிட்டல் விவரங்கள் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளலாம்.

ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர் கிடைக்கிறது. இதற்கான சென்சார்களையும் கொடுத்து இருக்கிறது. 7 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி பேட்டரி கிடைக்கிறது. 10 மீட்டர்கள் வரையில் தாக்குப்பிடிக்கும்படி வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ரன்னிங், வாக்கிங், சைக்கிளிங் உள்ளிட்ட மல்டிபிள் ஸ்போர்ட்ஸ் மோட்களை கொடுக்கிறது.

நாய்ஸ்ஃபிட் ஹாலோ 3 விலை (NoiseFit Halo 3 Price): ரூ.5,499 விலைக்கு இந்த நாய்ஸ்ஃபிட் ஹாலோ 3 கிடைக்க இருக்கிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் நாய்ஸ் ஆகிய தளங்களில் வாங்கி கொள்ளலாம். மெட்டலிக் ஸ்ட்ராப் (பிளாக்), லெதர் ஸ்ட்ராப் (பிரவுண் & ப்ளூ), சிலிகான் ஸ்ட்ராப் (பிளாக்) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

ஸ்போர்ட்ஸ் லுக்கில் ஸ்மார்ட் பீச்சர்களை கொடுக்கும் ஸ்மார்ட்வாட்ச்களை தேடிக் கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த நாய்ஸ்ஃபிட் ஹாலோ 3 பக்கா ஆப்ஷனாக இருக்கும். ஏஐ சப்போர்ட் கிடைப்பதால், புதுவித அனுபவம் கொடுக்கும். அமோலெட் டிஸ்பிளே கிடைப்பதால், வாட்ச் பேஸ்கள் உள்ளிட்டவை பக்காவாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
NoiseFit Halo 3 With AMOLED Display 7 Days Battery Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X