Home
Gadgets

தலைவன் வேற ரகம்.. AMOLED டிஸ்பிளே.. ஹெல்த் சூட்.. 7 நாட்கள் பேக்கப்.. மெட்டாலிக் பினிஷ்.. எந்த மாடல்?

டிரெண்ட்டிங் டிசைன் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக ரோடேட்டிங் பெசல் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, நாய்ஸ் ஹெல்த் சூட், ட்ரூ சிங்க் டெக்னாலஜி, ப்ளூடூத் காலிங், நாய்ஸ்ஃபிட் ஆப், IP67 வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் 7 நாட்கள் பேட்டரி பேக்கப் கொண்ட நாய்ஸ்ஃபிட் ஹாலோ 2 (NoiseFit Halo 2) ஸ்மார்ட்வாட்ச் இந்திய மார்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த நாய்ஸ்ஃபிட் ஹாலோ 2 மாடலின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

நாய்ஸ்ஃபிட் ஹாலோ 2 அம்சங்கள் (NoiseFit Halo 2 Specifications): இந்த நாய்ஸ் மாடலின் டிஸ்பிளேவானது, டிசைன் மற்றும் பீச்சர்களில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் கொடுக்கும் 1.43 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-on Display) மாடலாகும்.

தலைவன் வேற ரகம்.. AMOLED டிஸ்பிளே.. ஹெல்த் சூட்.. 7 நாட்கள் பேக்கப்!

ஆக்ஸ்-கட் பெசல் (Axe-cut Bezel) வருகிறது. இது பெசலில் ரோடேட்டிங் ஆப்ஷன் (Rotating Option) வருகிறது. ஆகவே, புது விதமான டிசைனில் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களை கவர்ந்துள்ளது. இந்த நாய்ஸ்ஃபிட் ஹாலோ 2 மாடலில் ஹார்ட் ரேட் சென்சார் (Heart Rate Sensor), எஸ்பிஓ2 சென்சார் (SpO2 Sensor) மற்றும் ஆக்சிலரோமீட்டர் (Accelerometer) வருகிறது.

ஆகவே, நாய்ஸ் ஹெல்த் சூட் (Noise Health Suite) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ஹெல்த் சூட் மூலம் ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஸ்லீப் டிராக்கர் (Sleep Tracker) மற்றும் ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கர் (Stress Level Tracker) கிடைக்கிறது. இதுபோக ஸ்டெப் கவுண்ட் (Step Count) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஜூமிங், ஆர்க் ரோடேஷன் போன்ற கஸ்டமைசபிள் டிரான்சிஷன் எஃபெக்ட்ஸ் (Customizable Transition Effects) சப்போர்ட் வருகிறது. வாய்ஸ் கால்களுக்காக ட்ரூ சிங்க் டெக்னாலஜி (Tru Sync Technology) கொண்ட ப்ளூடூத் காலிங் சாப்போர்ட் (Bluetooth Calling Support) வருகிறது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

தலைவன் வேற ரகம்.. AMOLED டிஸ்பிளே.. ஹெல்த் சூட்.. 7 நாட்கள் பேக்கப்!

ஆகவே, லாக்-ப்ரீ ப்ளூடூத் வாய்ஸ் காலிங் அவுட்புட் கிடைக்கும். ஹெல்த் டேட்டா, கஸ்டமைசபிள் மற்றும் கன்ட்ரோல்களுக்காக நாய்ஸ்ஃபிட் ஆப் (NoiseFit App) சப்போர்ட் வருகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் இந்த ஆப் கிடைக்கிறது. ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் 100+ வாட்ச் பேஸ்கள் (Watch Faces) மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் (Sports Modes) வருகின்றன.

ரன்னிங், ஜாக்கிங், வாக்கிங், சைக்கிளிங் உள்ளிட்ட ஆக்டிவிட்டிகளை டிராக் செய்து கொள்ளலாம். பேட்டரியை பற்றி பார்க்கையில், நார்மல் மோடில் 7 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். அதேபோல ஸ்டான்ட்பை மோடில் 30 நாட்களுக்கு பேக்கப் பெறலாம். 2 மணி நேரம் ஃபுல் சார்ஜ் செய்ய தேவைப்படும். சார்ஜிங் கேபிள் சப்போர்ட் வருகிறது.

ரீமைண்டர்கள் (Reminders), கால்குலேட்டர் (Calculator), வெதர் அப்டேட் (Weather Update) உள்ளிட்ட ஸ்மார்ட் பீச்சர்கள் வருகின்றன. இந்த நாய்ஸ்ஃபிட் ஹாலோ 2 மாடலில் IP67 வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. மெட்டல் (Metal), லெதர் (Leather) மற்றும் சிலிகான் (Silicone) ஸ்ட்ராப் ஆப்ஷன் கிடைக்கிறது. 1 வருடத்துக்கு வாரண்டி பெற்று கொள்ளலாம்.

எலைட் சில்வர் (Elite Silver), எலைட் பிளாக் (Elite Black), வின்டேஜ் பிரவுண்ட் (Vintage Brown), கோல்டு ப்ளூ (Gold Blue) மற்றும் ஜெட் பிளாக் (Jet Black) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. சிலிகான் மற்றும் லெதர் மாடலின் விலை ரூ.4,499ஆகவும், மெட்டாலிக் மாடலின் விலை ரூ.4,999ஆகவும் இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
NoiseFit Halo 2 With AMOLED Display Launched Sale From Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X