Home
Gadgets

புரட்டிப்போடும் பட்ஜெட்... AMOLED டிஸ்பிளே.. ஃபீமேல் ஹெல்த் மானிட்டர்.. மெட்டாலிக் பாடி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிச்சிக்கும் விதமாக பட்ஜெட் விலையில் பக்காவான பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், மகளிருக்கான பல்வேறு ஹெல்த் மானிட்டர்கள், வாட்டர் ரெசிஸ்டன்ட், மெனு ஸ்டைல் போன்ற மிரளவிடும் பீச்சர்களுடன் நாய்ஸ்ஃபிட் கிரேஸ் (NoiseFit Grace) ஸ்மார்ட்வாட்ச் களமிறங்கி இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

நாய்ஸ்ஃபிட் கிரேஸ் அம்சங்கள் (NoiseFit Grace Specifications): இந்த கிரேஸ் வேரியண்ட்டானது, மகளிருக்கான ஸ்மார்ட்வாட்ச்சாகும். பிரீமியம் மெட்டாலிக் டிசைனில் (Premium Metallic Design) ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி (Stainless Steel Body) கொண்டிருக்கிறது. அதோடு ஃபங்ஷ்னல் கிரவுன் (Functional Crown) வருகிறது.

AMOLED டிஸ்பிளே.. ஃபீமேல் ஹெல்த் மானிட்டர்..  மெட்டாலிக் பாடி வாட்ச்!

இந்த நாய்ஸ்ஃபிட் கிரேஸ் மாடலில் 1.1 இன்ச் (360 x 360 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பீக் பிரைடன்ஸ் சப்போர்ட் வருகிறது. ஆகவே, அவுட்புட் பர்ஃபாமென்ஸ் பக்காவாகவே இருக்கும். அதோடு 100+ வாட்ச் பேஸ்கள் (Watch Faces) இதில் வருகின்றன.

ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) கொண்டுள்ளது. அதோடு நாய்ஸ் ட்ரூ சிங்க் டெக்னாலஜி (Noise Tru Sync Technology) வருகிறது. ஆகவே, ப்ளூடூத் வாய்ஸ் காலிங் (Bluetooth Voice Calling) அனுபவம் கிரிஸ்டல் கிளியராக இருக்கும். அதுமட்டுமல்லாமல், குயிக் அக்சஸ் டயல் பேட் (Quick Access Dial Pad) சப்போர்ட் வருகிறது.

அதோடு ரீசன்ட் கால் லாக்ஸ் (Recent Call Logs) மற்றும் கான்டாக்ட்ஸ் ஸ்டோரேஜ் (Contacts Storage) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த நாய்ஸ்ஃபிட் கிரேஸ் வேரியண்ட்டில் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) சப்போர்ட் வருகிறது. நாட்ஃபிட் ஆப் (NoiseFit App) சப்போர்ட் உள்ளது.

இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஸ்டோர் (Apple Store) ஆகியவற்றில் கிடைக்கிறது. இந்த வாட்ச்சிலும், நாய்ஸ் ஹெல்த் சூட் (NoiseHealth Suite) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஹெல்த் டிராக்கர்கள் (Health Trackers) மற்றும் ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) வருகின்றன.

இதில் ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) ஆகிய மானிட்டர்களும், ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking), ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கிங் (Stress Level Tracking) மற்றும் ஃபீமேல் சைக்கிங் டிராக்கிங் (Female Cycle Tracking) ஆகிய டிராக்கர்களும் இடம் பெற்றுள்ளன.

ஜாக்கிங், ரன்னிங், வாக்கிங், சைக்கிளிங் போன்ற மல்டிபிள் ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Multiple Sports Modes) வருகின்றன. IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water & Dust Resistance) கொண்டுள்ளது. இந்த நாய்ஸ்ஃபிட் கிரேஸ் வேரியண்ட்டில் 4 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும் பேட்டரி வருகிறது.

4 மெனு ஸ்டைல் (Menu Styles) மற்றும் ஆப், கால், எஸ்எம்எஸ்களுக்காக நோட்டிபிகேஷன் டிஸ்பிளே (Notification Display) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதோடு வெதர் அப்டேட்ஸ் (Weather Updates), ரீமைண்டர்கள் (Reminders), அலாரம் (Alarm) மற்றும் கால்குலேட்டர் (Calculator) சப்போர்ட் வருகிறது.

அதுமட்டுமல்லாமல், மியூசிக் கன்ட்ரோல் (Music Control) மற்றும் கேமரா கன்ட்ரோல் (Camera Control) சப்போர்ட் கொண்டுள்ளது. ரோஸ் கோல்டு (Rose Gold), மெட்டல் சில்வர் (Metal Silver) மற்றும் ஜெட் பிளாக் (Jet Black) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இதன் விலை ரூ.2,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
NoiseFit Grace With AMOLED Display Metal Body Sale From Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X