Home
Gadgets

முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?

தற்போது இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. அதுவும் ஆப்பிள் நிறுவனத்திற்குப் போட்டியாக சில நிறுவனங்கள் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியாவில் மிகவும் பிரபலமான Noise நிறுவனம் புதிய NoiseFit Force என்ற Rugged Smartwatch மாடலை கம்மி விலையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும். இப்போது இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப்
பார்ப்போம்.

முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச்-ஐ கம்மி விலையில்  இறக்கிவிட்ட Noise.!

NoiseFit Force ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள்

NoiseFit Force ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.32-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 360 x 360 பிக்சலஸ, 550 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச். அதாவது மிகப்பெரிய அதிர்வுகள் மற்றும் கடினமான மோதல்களை தாங்கக்கூடியது நாய்ஸ் ஃபிட் Force ஸ்மார்ட்வாட்ச். எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை நம்பி வாங்கலாம்.

குறிப்பாக இந்த புதிய நாய்ஸ் ஃபிட் Force ஸ்மார்ட்வாட்ச் ஆனது ப்ளூடூத் காலிங் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இதில் AI வாய்ஸ் அஸ்சிஸ்ட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் 150 வாட்ச் பேஸ் மற்றும் பலவகையான ஸ்போர்ட்ஸ் மோட் ஆதரவைக் கொண்டுள்ளது.

பின்பு ஸ்லீப், SpO2 மற்றும் ஹார்ட் ரேட் டிராக்கிங் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நாய்ஸ் ஃபிட் Force ஸ்மார்ட்வாட்ச். வானிலை அப்டேட்கள், கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல், ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் போன்ற பல தரமான அம்சங்களுடன் இந்த புதிய நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.

முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச்-ஐ கம்மி விலையில்  இறக்கிவிட்ட Noise.!

இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதில் ப்ளூடூத் காலிங் வசதியை பயன்படுத்தினால் 2 வரை நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் ஜெட் பிளாக், டீல் கிரீன், மிஸ்டி கிரே நிறங்களில் இந்த நாய்ஸ் ஃபிட் Force ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

NoiseFit Force ஸ்மார்ட்வாட்ச் விலை?

குறிப்பாக நாய்ஸ் ஃபிட் Force ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.2,499-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் வரும் பிப்ரவரி 3-ம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசான் மற்றும் நாய்ஸ் ஃபிட் இணையதளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை விட கம்மி விலையில் ஒரு ஸ்மார்ட்வாட்ச் வேண்டும் என்றால், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்குவது நல்லது.

ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள்

அதாவது ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.39-இன்ச் கலர் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 240×240 ரெசல்யூஷன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்வாட்ச். ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் ஆனது இன்பில்ட் மைக்ரோபோன், ஸ்பீக்கர் போன்ற அம்சங்கள் மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்குகிறது.

முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச்-ஐ கம்மி விலையில்  இறக்கிவிட்ட Noise.!

ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஹார்ட் ரேட் சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர் போன்ற பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் barometer, gyro sensor, உள்ளிட்ட பல சென்சார் வசதி உள்ளன. குறிப்பாக ரன்னிங், சைக்கிள், ஜாக்கிங் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 123 விளையாட்டு முறைகளை (sports modes)வழங்குகிறது ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச்.

என்ன விலை?

இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஸ்மார்ட்போனை விரைவாக கட்டுப்படுத்தலாம். பின்பு வானிலை மற்றும் பங்குச் சந்தை அப்டேட்கள், நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே, ரிமோட் கேமரா, மியூசிக் கண்ட்ரோல் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச். பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.1999-ஆக உள்ளது. பிளிப்கார்ட் இணையதளத்தில் ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
NoiseFit Force Smartwatch with 1.32-inch Display Launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X