Home
Gadgets

ரக்கட் பாய்ஸ்-க்கான முரட்டு வாட்ச் NoiseFit Force Plus.. ஸ்விம்மிங் பண்ணிட்டே ப்ளூடூத் கால் பேசலாம்!

ரக்கட் பாய்ஸ்க்கு எப்பவும் ரக்கட்டான கேட்ஜெட்ஸ் (Gadgets) தான் பிடித்தமானதாக இருக்கும். இவங்களுக்கு ஏத்த மாதிரியே முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது. ப்ளூடூத் காலிங், வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டண்டுனு ஏராளமான அம்சமும் இந்த வாட்ச்ல இருக்கு. இந்த ஸ்மார்ட்வாட்ச் பத்தின முழு தகவல் இதே.

அசெஸ்சரிஸ் (Accessories) நிறுவனமான நாய்ஸ் (Noise), தனது புதிய ரக்கட் ஸ்மார்ட்வாட்ச்சை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. நாய்ஸ்ஃபிட் ஃபோர்ஸ் பிளஸ் (NoiseFit Force Plus) என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் பெரும்பாலான அம்சங்கள கொண்டிருக்கிறது. குறிப்பாக, இதன் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) மற்றும் அமோலேட் டிஸ்பிளே (AMOLED Display) வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கிறது.

ரக்கட் பாய்ஸ்க்கான முரட்டு வாட்ச் NoiseFit Force Plus

பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்வாட்ச்கள் பயன்படுத்துவதையே அதிகம் விரும்புகின்றனர். ஏனென்றால், ஸ்மார்ட்வாட்ச்களில் அவ்வளவு அம்சங்கள் (Specifications) இருக்கும். ஒரு மினி டாக்டராகவே ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்தப்படுதுனு கூட சொல்லாம்.

ஹாட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பிளட் பிரஷர் மானிட்டர் (Blood Pressure Monitor), ஆக்சிஜன் லெவல் மானிட்டர் (Oxygen Level Monitor) , பாடி டெம்பரேச்சர் மானிட்டர் (Body Temperature Monitor) , ஸ்லீப்பிங் டைம் டிராக்கிங் (Sleeping Time Tracking), ஸ்டெப்ஸ் & காலோரிஸ் டிராக்கிங் (Step and Calorie Tracking) உள்ளிட்ட அனைத்தும் ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ளன.

பெண்களுக்கு என மென்ஸ்சுரல் டிராக்கர் (Menstrual Tracker) கூட உள்ளது. இதனால் ஸ்மார்ட்வாச் மூலம் முழு உடல் ஆரோக்கியத்தை தொடர்ந்து கவனித்துக்கொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட அம்சங்களை கொண்ட வாட்ச்களை யார்தான் வாங்க நினைக்க மாட்டார்கள். அதிலும் புதுப்புது டிசைன்களின் வந்தால் சொல்லவா வேண்டும். அப்படிதான் ஸ்டைலிஷ் ரக்கட் டிசைனில் வெளியாகியாக இருக்கிறது நாய்ஸ்ஃபிட் ஃபோர்ஸ் பிளஸ்.

நாய்ஸ்ஃபிட் ஃபோர்ஸ் பிளஸ் அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்வாட்ச் 466×466 பிக்சல்கள் கொண்ட 1.46 இன்ச் அமோலேட் டிஸ்பிளே உடன் வருகிறது.
அதில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே (Always On Display) அம்சமும் இருக்கிறது. இந்த வாட்ச் 550 நெட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டது. ப்ளூடூத் v5 (Bluetooth v5) காலிங் வசதி உள்ளது. அதற்காக மைக் மற்றும் ஸ்பீக்கர் வாட்ச்சிலேயே வழங்கப்பட்டு உள்ளது.

அதோடு ஏஐ வாய்ஸ் (AI Voice) அசிஸ்டண்ட் வசதியும் உள்ளது. அதிகபட்சம் 5 பேன் நம்பர்களை வாட்ச்சில் சேமித்துக்கொள்ள முடியும். பிரத்யேகமாக ட்ரூஸிங் என்னும் (TruSync) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ட்ரூஸிங் மூலம் ஸ்மார்ட்போன் உடன் எளிதாக வாட்ச் கனெக்ட்டாகிவிடும். ஒருமுறை பேய்ர் (Pair) செய்துவிட்டால், எந்தவித இடையூறுமின்றி ஆட்டோமேட்டிக்காக கனெக்ட்டாகிவிடும்.

வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டண்ட் (Water And Dust Resistant) உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 260 எம்ஏஹெச் ஆக உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கிடைக்கும். 150 டிஸ்பிளே ஸ்போர்ட்ஸ் ஃபேஸ் மோட்கள் உள்ளன. ஹாட் ரேட் மானிட்டர், ஸ்லீப்பிங் மற்றும் ஸ்டெப்ஸ் டிராக்கிங், மென்ஸ்சுரல் டிராக்கர், ஆக்சிஜன் லெவல் மானிட்டர் சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வரும் மே 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. விலையை பொறுத்தவரையில் ரூ. 3,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வருட வாரண்ட்டி வழங்கப்படுகிறது. ஜெட் பிளாக் (Jet Black) , மிஸ்ட் கிரே (Mist Grey) மற்றும் டீல் ப்ளூ (Teal Blue) ஆகிய மூன்று வெவ்வேறு கலர்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
noisefit force plus rugged smartwatch price and specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X