Home
Gadgets

லோக்கல் பட்ஜெட்ல மெட்டாலிக் ஸ்மார்ட்வாட்ச்.. அமோலெட் டிஸ்பிளே.. ஹெல்த் மானிட்டர்.. எந்த மாடல்?

மிரட்டலான மெட்டாலிக் டிசைனில் அமோலெட் டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங் சப்போர்ட், ஹெல்த் மானிட்டர்கள், ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் போன்ற அம்சங்களை கொண்ட நாய்ஸ்ஃபிட் எவால்வ் 4 (NoiseFit Evolve 4) ஸ்மார்ட்வாட்ச் கம்மியான பட்ஜெட்டில் விற்பனைக்கு வருகிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

நாய்ஸ்ஃபிட் எவால்வ் 4 அம்சங்கள் (NoiseFit Evolve 4 Specifications): இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் 1.46 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always-on Display) வருகிறது. இதுவொரு அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 326 பிபிஐ சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

லோக்கல் பட்ஜெட்ல அமோலெட் டிஸ்பிளே.. ஹெல்த் மானிட்டர்.. எந்த மாடல்?

லைட் வெயிட் மெட்டாலிக் டிசைன் (Lightweight Metallic Design) கொண்டிருக்கிறது. இந்த எவால்வ் 4 மாடலில் ஃபங்ஸ்னல் கிரவுன் (Functional Crown) மற்றும் புஸ் பட்டன் (Push Button) கன்ட்ரோல் வருகிறது. நாய்ஸ் ட்ரூ சிங்க் டெக்னாலஜி (Noise Tru Sync Technology) கொண்ட ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) வருகிறது.

ஆகவே, கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால் அனுபவத்தை பெற முடியும். அதோடு இன்-பில்ட் ஸ்பீக்கர் (In-built speaker), இன்-பில்ட் மைக்ரோபோன் (In-built microphone), கால் லாக்ஸ் (Call Logs) உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நாய்ஸ்ஃபிட் எவால்வ் 4 மாடல் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) சப்போர்ட் கொண்டுள்ளது.

இந்த மாடலில் 100 பிளஸ் வாட்ச் பேஸ்கள் (Watch Faces) வருகின்றன. இதில் நாய்ஸ் ஹெல்த் சூட் (Noise Health Suite) சப்போர்ட் வருகிறது. ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking), ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டர் (Stress Level Monitor) மற்றும் ஃபீமேல் சைக்கிள் டிராக்கர் (Female Cycle Tracker) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

லோக்கல் பட்ஜெட்ல அமோலெட் டிஸ்பிளே.. ஹெல்த் மானிட்டர்.. எந்த மாடல்?

அதேபோல ரேபிட் ஹெல்த் மானிட்டர் (Rapid Health Monitor) வருகிறது. ஜாக்கிங், ரன்னிங், ஸ்விம்மிங் போன்ற 100க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன. இந்த நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச்சில் எமர்ஜென்ஸி எஸ்ஓஎஸ் பீச்சர் (Emergency SOS Feature) கொடுக்கப்பட்டுள்ளது. IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water/Dust Resistance) கொண்டிருக்கிறது.

நாய்ஸ்ஃபிட் எவால்வ் 4 மாடலில் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் (Smart Notification) சப்போர்ட் வருகிறது. ஆகவே, கால், எஸ்எம்எஸ் மற்றும் ஆப் நோட்டிபிகேஷன்களை தெரிந்துகொள்ள முடியும்.
அதேபோல வெதர் அப்டேட்ஸ் (Weather Updates), ரீமைண்டர் (Reminders), அலாரம் (Alarm), கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music Control), கால்குலேட்டர் (Calculator) போன்ற பீச்சர்கள் வருகின்றன.

இந்த நாய்ஸ்ஃபிட் எவால்வ் 4 வாட்ச் ஸ்பேஸ் ப்ளூ (Space Blue), கிளாசிக் பிளாக் (Classic Black) மற்றும் எலைட் பிளாக் (Elite Black) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. 7 நாட்கள் பேக்கப் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச் மெட்டாலிக் ஸ்ட்ராப் (Metallic Strap) கொண்டிருக்கிறது. இந்தியாவில் வரும் நவம்பர் 22 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது.

இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த வாட்ச்சின் விலை ரூ.3,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதோடு அறிமுக சலுகையாக ரூ.500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.3,499க்கு இந்த வாட்ச்சை வாங்கி கொள்ள முடியும். கம்மியான பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, ஹெல்த் மானிட்டர்கள், நல்ல பேட்டரி பேக்கப் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் வேண்டுமானால், இந்த நாய்ஸ்ஃபிட் எவால்வ் 4 மாடலை தேர்வு செய்துகொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
NoiseFit Evolve 4 With AMOLED Display Sale From November 22 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X