Home
Gadgets

பின்றானே இவன்.. AMOLED டிஸ்பிளே.. AI அசிஸ்டன்ட்.. 5 நாட்கள் பேட்டரி.. SOS லைவ் லோகேஷன்.. எந்த மாடல்?

நாய்ஸ் நிறுவனத்தின் நாய்ஸ்ஃபிட் திவா அரயா (NoiseFit Diva Araya) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் செராமிக் பாடி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் மாடலாக வெளியாகி இருக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, 5 நாட்கள் பேட்டரி, ஏஐ வாட்ஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்துள்ளது. இந்த நாய்ஸ்ஃபிட் திவா அரயா மாடலின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் மாடலாக இருப்பதால், ஏஸ்தெட்டிக்ஸ் ஜுவல்லரி டிசைனை பார்க்க முடிகிறது. செராமிக் பாடி மட்டுமல்லாமல், ஸ்க்ராட்ச் ரெசிஸ்டன்ட் ஃபினிஷிங் கொடுத்துள்ளது. 60 செட் ஸ்டோன்கள் பதிக்கப்பட்டுள்ளன. செராமிக் மட்டுமல்லாமல், மெட்டல் மற்றும் மெஸ் ஸ்ட்ராப் கொண்ட வேரியண்ட்களும் கிடைக்கின்றன.

பின்றானே இவன்.. AMOLED டிஸ்பிளே.. AI அசிஸ்டன்ட்.. 5 நாட்கள் பேட்டரி!

ஆகவே, ஏஸ்தெட்டிக்ஸ் ஜுவல்லரி டிசைனில் அதிகப்படியான டெக்னாலஜிகளை கொண்ட மாடலாகவும் இந்த நாய்ஸ்ஃபிட் திவா அரயா ஸ்மார்ட்வாட்ச் இருக்கிறது. ஏனென்றால், ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் முதல் எஸ்ஓஎஸ் லைவ் லோகேஷன் வரையில் பீச்சர்கள் கிடைக்கின்றன. ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் டிராக்கர்கள் உள்ளன.

நாய்ஸ்ஃபிட் திவா அரயா அம்சங்கள் (NoiseFit Diva Araya Specifications): 1.28 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த நாய்ஸ்ஃபிட் திவா அரயா ஸ்மார்ட்வாட்ச் கொடுக்கிறது. 850 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கிளவுட் போஸ்டு வாட்ச் பேஸ்கள் (Cloud Based Watch Faces) கிடைக்கின்றன. கூடுதலாக கஸ்டம் வாட்ச் பேஸ்களும் (Custom Watch Faces) கிடைக்கின்றன.

100+ கிளவுட் வாட்ச் பேஸ்கள் கிடைக்கும். ஹெல்த் பீச்சர்களை பார்க்கையில், ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 டிராக்கர் (SpO₂ Tracker) கிடைக்கிறது. மேலும், வழக்கமாக கிடைக்கும் ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking), ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கிங் (Stress Level Tracking) மற்றும் வுமன் சைக்கிள் டிராக்கிங் (Women Cycle Tracking) கிடைக்கிறது.

ஸ்கின் டெம்ப்ரேச்சர் (Skin Temperature Tracking) கிடைக்கிறது. எஸ்ஓஎஸ் லைவ் லேகேஷன் டிராக்கிங் கிடைக்கிறது. ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த நாய்ஸ்ஃபிட் திவா அரயா இருக்கிறது. ஆகவே, ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistant) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஸ்மார்ட் நோட்டிபிகேஷன்கள் கிடைக்கும். மியூசிக் கன்ட்ரோல், கேமரா கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். வெதர் அப்டேட்களை பார்த்து கொள்ளலாம். ஃபைண்ட் மை போன் பீச்சரும் இந்த நாய்ஸ்ஃபிட் திவா அரயா மாடலுக்கு கிடைக்கிறது. 5 நாட்களுக்கு பேட்டரி கிடைக்கிறது. ரூ.4,999 விலையில் இந்த திவா அரயா ஸ்மார்ட்வாட்ச் கிடைக்கிறது. 1 வருட வாரண்டி கிடைக்கிறது.

ரோஸ் கோல்டு லிங்க் (Rose Gold Link), ஐகானிக் ரோஸ் கோல்டு (Iconic Rose Gold), ப்ரோஸ்ட் சில்வர் செராமிக் (Frost Silver Ceramic) மற்றும் ரோஸ் கோல்டு செராமிக் (Rose Gold Ceramic) ஆகிய கலர்களில் இந்த நாய்ஸ்ஃபிட் திவா அரயா ஸ்மார்ட்வாட்ச் வாங்கி கொள்ள கிடைக்கிறது. கோநாய்ஸ் மற்றும் அமேசான் (Amazon) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். லேட்டஸ்ட் டெக்னாலஜி மற்றும் கலைநயம் மிக்க டிசைனுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
NoiseFit Diva Araya With AMOLED Display Launched Under Rs 5000 in India Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X