Home
Gadgets

பட்ஜெட் விலையில் அசத்தலான நாய்ஸ்பிட் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

இந்தியாவில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை நாய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய சாதனம். தற்சமயம் நாய்ஸ்பிட் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் எனும் மாடலை தான் நாய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பட்ஜெட் விலையில் அசத்தலான நாய்ஸ்பிட் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

நாய்ஸ்பிட் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் மாடல் 1.28-இன்ச் கலர் டச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 240x240 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் 24x7 இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டர், ஸ்டிலெஸ் மாணிட்டர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்.

மேலும் இந்த நாய்ஸ்பிட் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் குறைந்த எடை, பாலிகார்பனைட் ஷெல் மற்றும் சிலிகான் ஆதரவுகள் உள்ளன. பின்பு 14 ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஆட்டோ ஸ்போர்ட் ரிகக்னீஷன், 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பட்ஜெட் விலையில் அசத்தலான நாய்ஸ்பிட் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

கண்டிப்பாக நாய்ஸ்பிட் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ள அக்செல்லோமீட்டர் சென்சார் மற்றும் 24×7 இதய துடிப்பு மாணிட்டரிங் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதுதவிர 320 எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். அதிகபட்சமாக 7 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச்

பட்ஜெட் விலையில் அசத்தலான நாய்ஸ்பிட் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

குறிப்பாக நாய்ஸ்பிட் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆனது செஸ்டி கிரே, ரோபுஸ்ட் பிளாக், ஸ்போர்டி ரெட், பவர் புளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. பின்பு இதன் விலை ரூ.3499-ஆகும். அதேபோல் இந்த சாதனத்தை பிளிப்கார்ட் வலைத்தளத்தில் வாங்க முடியும். மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

பட்ஜெட் விலையில் அசத்தலான நாய்ஸ்பிட் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 இயர்பட்ஸ் ஆனது அல்ட்ரா-லோ லேடென்சி மோட் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ் மூலம் மியூசிக், அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது, சிரி அல்லது கூகுள் அசிஸ்டண்ட் போன்ற ஆக்டிவேட் செய்ய போன் எடுக்க அவசியம் இருக்காது.

குறிப்பாக ப்ளூடூத் 5, 6எம்எம் ஸ்பீக்கர் டிரைவர், MEMS மைக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நியோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்போன் மாடல். இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நாய்ஸ் நிறுவனம். மேலும் ஸ்மார்ட் டச் கண்ட்ரோல் வசதியுடன் இந்த இயர்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பொது இடங்களில் வைத்து மிக அருமையாக பயன்படுத்த முடியும். அதேசமயம் சிறந்த மென்பொருள் வசதியுடன் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வாட்டர் ரெசிஸண்ட் வசதி, பின்டிப் மற்றும் சிலிகான் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். பின்பு ஷாட்ஸ் நியோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என்பதால் கூடுதல் அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் 5 மணி நேர பிளேபேக் ஆதரவைக்கொண்டுள்ளது இயர்போன் மாடல். குறிப்பாக Boat உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த அசத்தலான சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் அசத்தலான நாய்ஸ்பிட் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

புதிய நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 இயர்போன் ஆனது ரேவென் பிளாக், ஆம்பர் ஆரஞ்சு, கோபால்ட் புளூ மற்றும் லைம் கிரீன் நிறங்களில் கிடைக்கும். மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.1999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
NoiseFit Active Smartwatch: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X