புரட்டிபோடும் பட்ஜெட்.. வெறும் ரூ.999 போதும்.. eSIM சப்போர்ட்... AMOLED டிஸ்பிளே.. GPS கனெக்டிவிட்டி!
மார்கெட் அதிரும் விதமாக வெறும் ரூ.1000 பட்ஜெட்டில் ஈசிம் கனெக்டிவிட்டி, அமோலெட் டிஸ்பிளே, ஹெல்த் மானிட்டர்கள் போன்ற ப்ரீமியம் அம்சங்களுடன் நாய்ஸ் வோயேஜ் (Noise Voyage) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மற்றும் முழு அம்சங்கள் குறித்த விவரம் இதோ.
இந்திய ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களை பட்ஜெட்டில் விலையில் கட்டி இழுக்கும் நிறுவனங்களில், நாய்ஸ் நிறுவனமும் முதன்மை பட்டியலில் இருக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, ஈசிம், ஜிபிஎஸ் போன்ற பிரீமியம் அம்சங்களை மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்களில் கொடுத்துவருகிறது. அந்த வரிசையில், நாய்ஸ் வோயேஜ் மாடல் பின்னி எடுக்கிறது.

நாய்ஸ் வோயேஜ் அம்சங்கள் (Noise Voyage Specifications): இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.4 இன்ச் (454 x 454 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ரெடினா (Retina) டிஸ்பிளே மாடலாகும். ஆகவே, கிரிஸ்டல் கிளியர் கிளாரிட்டி கிடைக்கிறது.. அதோடு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெசல் (Stainless Steel Bezel) டயல் கொண்டிருக்கிறது.
இந்த நாய்ஸ் வோயேஜ் வாட்ச்சில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி (Bluetooth Connectivity) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு டிடபுள்யூஎஸ் கனெக்டிவிட்டியும் (TWS Connectivity) வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஈசிம் (e-SIM) கனெக்டிவிட்டி வருகிறது. ஆகவே, 4ஜி காலிங் சப்போர்ட் (4G Calling Support) மற்றும் 200 கான்டாக்ட்ஸ் சப்போர்ட் (Contacts Support) கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஸ்மார்ட்போன் ப்ரீ காலிங் (Smartphone Free Calling) செய்து கொள்ளலாம். அதோடு ஜியோ (Jio) அல்லது ஏர்டெல் (Airtel) ஈ-சிம் கார்டுகளுக்கு மூன்று மாதங்களுக்கான ப்ரீ காலிங் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த நாய்ஸ் வோயேஜ் ஸ்மார்ட்வாட்ச்சை ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த வாட்ச்சில் ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitor)மற்றும் ஹெல்த் டிராக்கர்கள் (Health Tracker) வருகின்றன. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking) மற்றும் ஸ்ட்ரெஸ் மானிட்டர் (Stress Monito) வருகிறது.
இந்த மாடலில் ஜிபிஎஸ் (GPS) மற்றும் போசிஷன் டிராக்கிங் (Position Tracking) வருகிறது. ரன்னிங் (Running), ஜாக்கிங் (Jogging), ஸ்விம்மிங் (Swimming), சைக்கிளிங் (Cycling) போன்ற 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன. இந்த ஆக்டிவிட்டிகளின் போது ஆட்டோமேடிக் வொர்க்அவுட் டிடெக்சன் (Automatic Workout Detection) சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த நாய்ஸ் வோயேஜ் வாட்ச்சில் நேட்டிபிகேஷன் டிஸ்பிளே (Notification Display) வருகிறது. ஆகவே, காலிங், எஸ்எம்எஸ் மற்றும் ஆப் அப்டேட்களை செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், வெதர் அப்டேட்ஸ் (Weather Updates), ரீமைண்டர்கள் (Reminders), அலாரம் (Alarm) சப்போர்ட் வருகிறது.
அதுமட்டுமல்லாமல், கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music Control) மற்றும் கால்குலேட்டர் (Calculator) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 7 நாட்கள் பேக்கப் கொடுக்கக்கூடியது. அதுவே பவர் சேவிங் மோடில் (Power Saving Mode) 30 நாட்களுக்கும், வாய்ஸ் காலிங் மோடில் (Voice Calling) 2 நாட்களுக்கும் பேட்டரி பேக்கப் கிடைக்கிறது.
இந்த நாய்ஸ் வோயேஜ் வாட்ச் நாய்ஸ் (Noise) வெப்சைட்டில் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. வரும் டிசம்பர் 23 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ்.காம் (GoNoise.com) ஆகிய தளங்களில் விற்பனைக்கு வருகிறது. இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும், இதன் விலை வெறும் ரூ.999 ஆக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலையானது, வெறும் அறிமுக சலுகை மட்டுமேயாகும். ஆகவே, விரைவில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரூ.1000 பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, ஜிபிஎஸ், ஈசிம் சப்போர்ட் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் வேண்டும் என்றால், இந்த நாய்ஸ் வோயேஜ் வாட்ச் மாடலை தேர்வு செய்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








