மலிவு விலையில் இரண்டு வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகம்.!
நாய்ஸ் பிராண்டு இந்தியாவில் தற்சமயம் இரண்டு புதிய வயர்லெஸ் இயர்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக நாய்ஸ் டியூன்ஸ்போர்ட் மற்றும் நாய்ஸ் டியூன்டியோ என அழைக்கப்படும் இரு இயர்போன்களிலும் செக்யூர் ஃபிட்,
இயர்பட்களில் காந்த வசதி, கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி போன்ற சேவைகளுக்கு பிரத்யேக பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டியூன்ஸ்போர்ட் இன்-இயர் வயர்லெஸ் இயர்போன்
நாய்ஸ் டியூன்ஸ்போர்ட் இன்-இயர் வயர்லெஸ் இயர்போன் ஸ்போர்ட்ஸ்வியர் போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கிறது. 45 x 8 x 2 செ.மீ. அளவில் உருவாகி இருக்கும் இந்த இயர்போன் எடை 95.3 கிராம் ஆகும். இதில் ப்ளூடூத் 4.2, 10 எம்.எம். டிரைவர்கள், 5 மெகாவாட்ஸ் ஃபிரீக்வன்சியும், அதிகபட்சம் 20 முதல் 20000 ஹெர்ட்ஸ் வரையிலான ஃபிரீக்வன்சி ரெஸ்பான்ஸ் கொண்டிருக்கிறது.

ரிமோட் கண்ட்ரோல்
குறிப்பாக இந்த நாய்ஸ் டியூன்ஸ்போர்ட் சாதனத்தில் விங்டிப்ஸ் அம்சம் மற்றும் இயர்பட்களில் காந்த வசதியும் வழங்கப்பட்டுள்ளது, பின்பு பில்ட்-இன் மைக்ரோபோனுடன் ஃபுல் ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது.எனவே இதை கொண்டு இசையை பிளே, பாஸ், வால்யும் மற்றும் பல்வேறு வசதிகளை இயக்க முடியும்.

4மணி நேர பிளேபேக்
நாய்ஸ் டியூன்ஸ்போர்ட் இயர்போன் 80எம்ஏஎச் பேட்டரி கொண்டு வெளிவந்துள்ளது எனவே 4மணி நேர பிளேபேக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய்ஸ் டியூன்டியோ
அதேபோல் நாய்ஸ் டியூன்டியோ இயர்போன் 45 x 8 x 2 செ.மீ. அளவில் 86.2 கிராம் எடை கொண்டிருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் 4.2 வசதி கொண்டிருக்கிறது. எனினும், டியூன்டியோவில் இரண்டு ஸ்பீக்கர் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நாய்ஸ் டியூன்டியோ இயர்போன் சிறந்த ஆடியோ தரத்தை வழங்குகிறது, பின்பு இந்த இயர்போனிலும் ஃபுல் ரிமோட் கண்ட்ரோல், பில்ட்-இன் மைக்ரோபோன் போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது.

கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி சே
நாய்ஸ் டியூன்டியோ சாதனத்தில் கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி சேவையை இயக்க பட்டன் வழங்கப்பட்டுள்ளது, மேலும்
4மணி நேர பிளேபேக் வழங்கும் 80எம்ஏஎச பேட்டரி இவற்றுள் அடக்கம்.
நாய்ஸ் டியூன்ஸ்போர்ட் சாதனத்தின் விலை ரூ.999-ஆக உள்ளது, அதேபோல் நாய்ஸ் டியூன்டியோ விலை ரூ. 1299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications