பட்ஜெட் விலையில் நெக்பேண்ட் ஹெட்போன் மாடல் அறிமுகம்.!

|

நாய்ஸ் நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் புதிய டியூன் ஃபிளெக்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டியூன் ஃபிளெக்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஹேட்போன்

டியூன் ஃபிளெக்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஹேட்போன்

குறிப்பாக நாய்ஸ் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள டியூன் ஃபிளெக்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஹேட்போன் ஆனது ஒருமணி நேரம் சார்ஜ் செய்தால் 12மணி நேரங்களுக்கு பிளேபேக் மற்றும் 180மணி நேர ஸ்டான்ட்-பை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிலிகான் ஜெல்

சிலிகான் ஜெல்

மேலும் இந்த சாதனம் சிலிகான் ஜெல் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதால், இதனை பயன்படுத்தும்போது சரும பிரச்சனைகள்
எதுவும் ஏற்படாது எனவும். மேலும் இதன் நேரத்தியான வடிவமைப்பு வாடிக்கையாளர்களின் கழுத்தில் கச்சிதமாக பொருந்தும் வகையில் இருக்கிறது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பான அம்சங்களை பார்ப்போம்.

கூகுள் நம் அனைவரையும் கெடுக்கிறது: பிரதமர் மோடி உரைகூகுள் நம் அனைவரையும் கெடுக்கிறது: பிரதமர் மோடி உரை

டியூன் ஃபிளெக்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஹேட்போன் அம்சம்

டியூன் ஃபிளெக்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஹேட்போன் அம்சம்

குவால்காம் QCC3003 சிப்செட்
ப்ளூடூத் 5.0
2718 ரக சிலிகான் கொண்ட மைக்ரோபோன்
வியர்வை மற்றும் வாட்டரி ரெசிஸ்டண்ட் (IPX5)
சிரி, கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி
20Hz-20KHz ஃபிரீக்வன்சி ரெஸ்பான்ஸ்
10mm N50 நியோடிமியம் காந்த சக்தி டிரைவர்கள்( சிறப்பான ஆடியோ வழங்க உதவும்)
குவால்காம் சிவிசி 8.0 காற்றின் சத்தத்தை குறைக்கும்.
140எம்ஏஎச் பேட்டரி

பிளிப்கார்ட் மற்றும் அமேசான்

பிளிப்கார்ட் மற்றும் அமேசான்

டியூன் ஃபிளெக்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஹேட்போன் மாடல் ஸ்பேஸ் கிரே, கிரீன் மற்றும் பிரான்ஸ் கிரே நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நவம்பர் 26(இன்று)-முதல் பிளிப்கார்ட் மற்றும் அமேசான், கோநாய்ஸ் போன்ற வலைதளங்களில் விற்பனைக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

 டியூன் ஃபிளெக்ஸ் விலை

டியூன் ஃபிளெக்ஸ் விலை

இந்த சாதனத்தின் விலை 2,199-என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,பின்பு நாய்ஸ் டியூன் ஃபிளெக்ஸ் பிரான்ஸ் கிரே வேரியண்ட் மாடல் ஆனது வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Noise Tune Flex Bluetooth Neckband Headphones Launched in India: Price and Other Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X