நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!
நாய்ஸ் நிறுவனத்தின் இயர்பட்ஸ் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் புதிய புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

தற்சமயம் இந்திய சந்தையில் நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 ட்ரூ வயர்லெஸ் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஷாட்ஸ் நியோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்த நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 இயர்பட்ஸ் ஆனது ல்ட்ரா-லோ லேடென்சி மோட் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ் மூலம் மியூசிக், அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது, சிரி அல்லது கூகுள் அசிஸ்டண்ட் போன்ற ஆக்டிவேட் செய்ய போன் எடுக்க அவசியம் இருக்காது.

குறிப்பாக ப்ளூடூத் 5, 6எம்எம் ஸ்பீக்கர் டிரைவர், MEMS மைக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நியோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்போன் மாடல். இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நாய்ஸ் நிறுவனம்.
மேலும் ஸ்மார்ட் டச் கண்ட்ரோல் வசதியுடன் இந்த இயர்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பொது இடங்களில் வைத்து மிக அருமையாக பயன்படுத்த முடியும். அதேசமயம் சிறந்த மென்பொருள் வசதியுடன் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வாட்டர் ரெசிஸண்ட் வசதி, பின்டிப் மற்றும் சிலிகான் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். பின்பு ஷாட்ஸ் நியோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என்பதால் கூடுதல் அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
அதேபோல் 5 மணி நேர பிளேபேக் ஆதரவைக் கொண்டுள்ளது இயர்போன் மாடல். குறிப்பாக Boat உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த அசத்தலான சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 இயர்போன் ஆனது ரேவென் பிளாக், ஆம்பர் ஆரஞ்சு, கோபால்ட் புளூ மற்றும் லைம் கிரீன் நிறங்களில் கிடைக்கும். மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.1999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications