Home
Gadgets

யாரு சாமி அவன்.. சிங்கிள் சார்ஜில் 10 நாட்கள் பேட்டரி.. 5ATM ரேட்டிங்.. ஹார்ட் ரேட் மானிட்டரிங்.. எந்த மாடல்?

டிஸ்பிளேவே இல்லாமல், பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்களில் கிடைக்கும் ஒட்டுமொத்த ஹெல்த் மானிட்டர் மற்றும் டிராக்கர்களையும் கொடுக்கும்படி நாய்ஸ் ரெப் பேண்ட் (Noise REP Band) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சிங்கிள் சார்ஜில் 10 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கிறது. இந்த நாய்ஸ் ரெப் பேண்ட் மாடலின் விவரங்கள் இதோ.

இந்திய மார்கெட்டில் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் கிடைக்கும் பீச்சர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். இதனால், டிசைனை வைத்து கஸ்டமர்களை தட்டித்தூக்க ஸ்மார்ட்வாட்ச் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

யாரு சாமி அவன்.. சிங்கிள் சார்ஜில் 10 நாட்கள் பேட்டரி.. 5ATM ரேட்டிங்!

இதில் நாய்ஸ் நிறுவனம், டிஸ்பிளேவே இல்லாமல், ஹார்ட் ரேட் மானிட்டரிங், எஸ்பிஓ2 மானிட்டரிங், ஸ்லீப் டிராக்கர், ஸ்ட்ரெஸ் டிராக்கர் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஹெல்த் பீச்சர்களையும் நாய்ஸ் ரெப் பேண்ட் மாடலில் கொடுத்துள்ளது. பார்ப்பதற்கு வெறும் ஸ்ட்ராப் மட்டுமே இருக்கும்படி இருக்கும். ஆனால், பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்.

நாய்ஸ் ரெப் பேண்ட் அம்சங்கள் (Noise REP Band Specifications): டிஸ்பிளே இல்லாத மாடலாக இருந்தாலும், நாய்ஸ்ஃபிட் (NoiseFit) ஆப் சப்போர்ட் கிடைக்கும். இதை ப்ளூடூத் (Bluetooth) வழியாக கனெக்ட் செய்து கொண்டு, ஹெல்த் மற்றும் ஆக்டிவிட்டிகளை டிராக் செய்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் யூசர்களுக்கு இந்த ஆப் கிடைக்கிறது.

டூயல்-பினிஷிங் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி கிடைக்கிறது. டூயல்-டோன் ட்வில் வீவ் (Dual-tone Twill Weave) ஸ்ட்ராப் கிடைக்கிறது. இதுவொரு ஹைபோஅலர்ஜெனிக் (Hypoallergenic) ஸ்ட்ராப் மாடலாக இருக்கிறது. ஆகவே, ஸ்கின் அலர்ஜி இருப்பவர்களுக்கும் பக்காவாக பொருந்தும். மொத்தமாக 27 கிராம் எடையை இந்த நாய்ஸ் ரெப் பேண்ட் கொண்டுள்ளது.

5ATM ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. சிங்கிள் சார்ஜில் 10 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் பெற்று கொள்ளலாம். ஹார்ட் ரேட் மானிட்டரிங் கொடுக்க சர்குலர் மல்டி பிடி மல்டி-எல்இடி ஆப்டிகல் சென்சார் கிடைக்கிறது. ஆக்டிவிட்டி டிராக்கிங் கொடுக்க 6 ஆக்சிஸ் ஐஎம்யூ சென்சார்கள் கிடைக்கின்றன. 3-ஆக்சிஸ் ஆக்ஸிலரேட்டர் உள்ளது.

மேலும், 3 ஆக்சிஸ் கைரோஸ்கோப் கிடைக்கிறது. 24 மணி நேரமும் ஹார்ட் ரேட் மானிட்டரிங் கொடுக்கிறது. மேலும், எச்ஆர்வி (HRV), ரிக்வரி ஸ்கோர் (Recovery Score), ஸ்லீப் அனாலைசிஸ் (Sleep Analysis), ஸ்ட்ரெஸ் டிராக்கிங் (Stress Tracking), எஃபோர்ட் மோட்ரிக்ஸ் (Effort Metrics), விஓ2 (VO2) மற்றும் எஸ்பிஓ2 (SpO2) மானிட்டரிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆட்டோ வொர்க்அவுட் டிடெக்சன் (Auto Workout Detection) கொடுக்கிறது. ஆகவே, ரன்னிங், வாக்கிங், சைக்கிளிங் உள்ளிட்ட பல்வேறு இன்டோர் மற்றும் அவுட்டோர் ஆக்டிவிட்டிகள் ஆட்டோ டிடெக்ட் செய்து கொள்ளப்படும். நாய்ஸ்ஃபிட் ஆப் வழியாக தினசரி ஹெல்த் ஹைட்லைட்களை பார்த்து கொள்ளலாம். 4 கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

ஆகவே, விவிட் ஆரஞ்ச் (Vivid Orange), நேவி ப்ளூ (Navy Blue), கிளாசிக் பிளாக் (Classic Black) மற்றும் சாண்ட் பெய்ஜ் (Sand Beige) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம். ரூ. 9,999 ஆக விலை இருக்கிறது. நாய்ஸ் தளத்தில் ப்ரீ-புக்கிங் செய்ய கிடைக்கிறது. ரூ.999 செலுத்தி புக்கிங் செய்யலாம். ரூ.2000 டிஸ்கவுண்ட் போக ரூ.7,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Noise REP Band With 10 Days Battery 5 ATM Water Resistance Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X