பிச்சிக்குது புக்கிங்.. வெறும் ரூ.2,999 போதும்.. OWS பட்ஸ்.. FAST சார்ஜிங்.. ENC டெக்னாலஜி.. எந்த மாடல்?
மியூசிக் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக பட்ஜெட் விலையில் நியோடைமியம் டைனாமிக் டிரைவர்கள், இன்ஸ்டாசார்ஜிங் டெக்னாலஜி, IPX5 தர வாட்டர் ரெசிஸ்டன்ட், டச் கன்ட்ரோல், லேட்டன்சி மோட் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் நாய்ஸ் ப்யூர் பாட்ஸ் (Noise Pure Pods) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாய்ஸ் ப்யூர் பாட்ஸ் அம்சங்கள் (Noise Pure Pods Specifications): இந்த ப்யூர் பாட்ஸ் மாடலில் 16மிமீ நியோடைமியம் டைனாமிக் டிரைவர்கள் (Neodymium Dynamic Drivers) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஏர்வேவ் டெக்னாலஜி (AirWave Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டெக்னாலஜியானது, ஏர் கண்டக்ஷன் மெக்கானிசம் (Air Conduction Mechanisms) மூலம் துல்லியமான ஆடியோ அவுட்புட் கொடுக்கக்கூடியது.

சொல்லப்போனால், இந்தியாவில் வெளியாகிய முதல் ஓவர்-இயர் வயர்லெஸ் ஸ்டீரியோ (Over-ear Wireless Stereo) அல்லது ஓடபுள்யூஎஸ் (OWS) இயர்பட்ஸ் மாடல் இதுவாகும். இந்த ப்யூர் பாட்ஸ் மாடலில் பிரிக்கக்கூடிய பியூர் பேண்ட் (Detachable Pure Band) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு வால்யூம், கால் கன்ட்ரோல்களுக்காக டச் கன்ட்ரோல் (Touch Controls) வருகிறது.
இந்த நாய்ஸ் ப்யூர் பாட்ஸ் மாடலில் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி கொண்ட குவாட் மைக் (Quad Mic) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் டெக்னாலஜி (Environmental Noise Cancellation Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, வாய்ஸ் கால் குவாலிட்டி மட்டுமல்லாமல், மியூசிக் குவாலிட்டியும் கிரிஸ்டல் கிளியராக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களை கவரும் விதமாக 50ms லோவ் லேட்டன்சி மோட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, மொபைல், லேப்டாப், டேப்லெட் போன்ற எந்த டிவைஸ்களில் கனெக்ட் செய்தாலும், ஆடியோ மற்றும் வீடியோ சிங்க் பக்காவான இருக்கும். இந்த நாய்ஸ் ப்யூர் பாட்ஸ் மாடலில் இன்ஸ்டாசார்ஜ் (Instacharge) ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் கூட தொடர்ந்து 180 நிமிடங்களுக்கு பிளேடைம் கிடைக்கும். அதேபோல ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 80 மணி நேரங்களுக்கு இந்த பாட்ஸ் பிளேபேக் டைம் கொடுக்கிறது. இதில் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.
இந்த நாய்ஸ் ப்யூர் பாட்ஸ் மாடலுக்கு 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. பவர் பிளாக் (Power Black) மற்றும் ஜென் பீஜ் (Zen Beige) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதனுடைய ப்ரீ-புக்கிங் கோநாய்ஸ்.காம் (Gonoise.Com) தளத்தில் பிரத்யேகமாக தொடங்கி இருக்கிறது. வெறும் ரூ.499 செலுத்தி ப்ரீ-புக்கிங் செய்து கொள்ளலாம்.
இந்த தளத்தில் ப்ரீ-புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.800 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதோடு நாய்ஸ் ப்ரோ 5 (Noise Pro 5) ஸ்மார்ட்வாட்ச் வாங்கும்பட்சத்தில், அதிலும் ரூ.1000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸின் விலை ரூ.2,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவெறும் அறிமுக சலுகை மட்டுமேயாகும். ஆகவே, விரைவில் விலை அதிகரிக்க வாய்புள்ளது. இந்த நாய்ஸ் ப்யூர் பாட்ஸ் வரும் டிசம்பர் 19ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் கோநாய்ஸ் தளங்களில் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம்.
மிகவும் கம்மியான பட்ஜெட்டில் ஓவர்-இயர் வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த நாய்ஸ் ப்யூர் பாட்ஸ் மாடல் நல்ல தேர்வாக இருக்கும். அதேபோல டச் கன்ட்ரோல், நாய்ஸ் கேன்சலேஷன், லோவ் லேட்டன்சி மோட் போன்ற புதுப்புது டெக்னாலஜியும் இருப்பதால் பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








