Home
Gadgets

இதுல கேட்டா.. சும்மா கிழிதான்.. BOSE சவுண்ட்.. ANC ஆடியோ.. 60 மணி நேர பேக்கப்.. IPX4 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் ஓவர்-இயர் ஹெட்போன்களுக்கு நிகரான பிரீமியம் ஆடியோ பீச்சர்கள் மற்றும் டிசைனுடன் நாய்ஸ் நிறுவனத்தின் நாய்ஸ் மாஸ்டர் பட்ஸ் மேக்ஸ் (Noise Master Buds Max) ஹெட்போன் களமிறங்கி இருக்கிறது. போஸ் சவுண்ட் அவுட்புட் மட்டுமல்லாமல், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன், ஸ்பாஷியல் ஆடியோ 60 மணி நேரங்களுக்கு பேக்கப் போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் பீச்சர்களையும் கொடுக்கிறது. இந்த நாய்ஸ் மாஸ்டர் பட்ஸ் மேக்ஸ் ஹெட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பெயருக்கு ஏற்ப மேக்ஸிமம் பீச்சர்களை கவர் செய்துள்ளது. அதேபோல டிசைனிலும் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது. பேலன்ஸ்டு, ஃபுல்-ரேஞ்ச் மற்றும் டீப் பேஸ் ஆகிய ஆடியோவில் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. போஸ் நிறுவனத்தின் ஆடியோவை கொண்டிருப்பதால், அல்ட்ரா பிரீமியம் அனுபவம் எதிர்பார்க்கலாம். இதுபோக பல்வேறு டெக்னாலஜிகளும் கிடைக்கின்றன.

இதுல கேட்டா.. சும்மா கிழிதான்.. BOSE சவுண்ட்.. ANC ஆடியோ.. மாடல்?

நாய்ஸ் மாஸ்டர் பட்ஸ் மேக்ஸ் அம்சங்கள் (Noise Master Buds Max Specification): ஏரோஸ்பேஸ்-கிரேடு மெட்டாலிக் கிரில்கள் (Aerospace-grade Metallic Grills) மற்றும் வீகன் லெதர் குஷன் கிடைக்கிறது. இந்த டிசைனில் நாள் முழுவதும் பயன்படுத்தும்படி லைட்-வெயிட் மாடலாக கிடைக்கிறது. மொத்தமாக 262 கிராம் எடை கிடைக்கிறது. IPX4 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

40 எம்எம் டிரைவர் கிடைக்கிறது. இதில் 40dB கொண்ட அடாப்டிவ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Adaptive Active Noise Cancellation) கிடைக்கிறது. ஆகவே, ஏஎன்சி (ANC), அடாப்டிவ் ஏஎன்சி (Adaptive ANC) கிடைக்கிறது. இதுபோக டிரான்ஸ்பரன்ஸி மோட் (Transparency Mode) போன்ற மோட்களும் இருக்கின்றன. 360 டிகிரி ஆடியோ அவுட்புட் கொடுக்க ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

எல்எச்டிசி 5.0 (LHDC 5.0) கோடக் மற்றும் ப்ளூடூத் வி5.4 (Bluetooth v5.4) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஆகவே, 10 மீட்டர்கள் வயர்லெஸ் ரேஞ்ச் கிடைக்கிறது. ஏ2டிபி (A2DP), ஏவிஆர்சிபி (AVRCP) உள்ளிட்ட பெரும்பாலான ப்ரோபைல்கள் கிடைக்கின்றன. ஆட்டோ பேரிங் (Auto Pairing) சப்போர்ட் கிடைக்கிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 60 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கிறது.

ஃபுல் சார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் தேவைப்படுகிறது. இந்த நாய்ஸ் மாஸ்டர் பட்ஸ் மேக்ஸ் மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 10 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) மற்றும் சார்ஜிங் இன்டிகேட்டர் (Charging Indicator) கிடைக்கிறது. இதுபோக ஈக்குலைசர் (Equaliser) மற்றும் போகஸ் மோட் (Focus Mode) கிடைக்கிறது.

மேலும், ஃபைண்ட் மை ஹெட்போன் (Find My Headphone) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த நாய்ஸ் மாஸ்டர் பட்ஸ் மேக்ஸ் மாடலில் ஓனிக்ஸ் (Onyx), டைட்டானியம் (Titanium) மற்றும் சில்வர் (Silver) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. பிரீமியம் பீச்சர்களை கொடுப்பதால், ரூ.9,999ஆக விலை இருக்கிறது. கோநாய்ஸ் (Gonoise) அமேசான் (Amazon), குரோமா (Croma) போன்ற தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஓவர்-இயர் ஹெட்போனாக இருந்தும், வயர்லெஸ் கனெக்டிவிட்டி கொடுக்கிறது. ஆகவே, இது பயன்படுத்த கம்போர்ட்டாக இருக்கும். அதேபோல எங்கும் எடுத்து சென்று பயன்படுத்தி கொள்ளலாம். எல்எச்டிசி 5.0 கிடைப்பதால் எச்டி வயர்லெஸ் ஆடியோ அனுபவம் கிடைக்கும். அடாப்டிவ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அவுட்டோருக்கும் பக்கா அவுட்புட் கொடுக்கும்படி இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Noise Master Buds Max With 60 Hours Playtime Active Noise Cancellation Launched Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X