Home
Gadgets

நியூ கோல்டு.. 4 கிராமில் 70+ ஹெல்த் மெட்ரிக்ஸ்.. 6 நாட்கள் பேட்டரி.. ப்ளூடூத் கனெக்டிவிட்டி!

ஹெல்த் சென்சார்கள், மானிட்டர்கள், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, வாட்டர் ரெசிஸ்டன்ட், 6 நாட்கள் பேக்கப் போன்ற மூக்கில் விரல் வைக்கும்படியான டெக்னாலஜிகளை 4 கிராம் எடையில் கொண்டுள்ள நாய்ல் லூனா ரிங்கில் (Noise Luna Ring) புதிய கலர் வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன.

நாய்ஸ் நிறுவனத்தின் லூனா ரிங் கடந்த அக்டோபரில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. ஒரு ஸ்மார்ட்வாட்ச்சிக்கு நிகராக பெரும்பாலான டெக்னாலஜிகளுடன் மார்கெட்டை அதிர வைத்தது. இந்த வரவேற்பை மேலும் அதிகரிக்கும் விதமாக லூனா ரிங்கின் புதிய கலர் வேரியண்ட்கள் இப்போது, விற்பனைக்கு வந்துள்ளன.

நியூ கோல்டு.. 4 கிராமில் 70+ ஹெல்த் மெட்ரிக்ஸ்.. 6 நாட்கள் பேட்டரி!

பிரீமியம் கோட்டிங்கில் ரோஸ் கோல்டு (Rose Gold) மற்றும் சன்லிட் கோல்டு (Sunlit Gold) ஆகிய 2 கலர்களில் கிடைக்கிறது. 4 கிராம் எடை கொண்ட இந்த நாய்ஸ் லூனா ரிங்கின் பீச்சர்கள் மிரள வைக்கிறது. இந்த அம்சங்களோடு அந்த ரிங்கின் விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

நாய்ஸ் லூனா ரிங் அம்சங்கள் (Noise Luna Ring Specifications): இந்த ரிங்கானது, அல்ட்ரா-லைட் வெயிட் (Ultra-light Weight) டிசைன் கொண்டிருக்கிறது. டைட்டானியம் கோட்டிங் பாடி (Titanium Coating Body) கொண்டுள்ளது. 70+ ஹெல்த் மெட்ரிக்ஸ் (Health Metrics) வருகிறது. பிஎல்ஈ 5 (BLE 5) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor), பிளட் ஆக்ஸிஜன் சென்சார் (Blood Oxygen Sensor), பிபிஜி சென்சார் (PPG Sensor), ஸ்கின் டெம்பரேச்சர் சென்சார் (Skin Temperature Sensor) வருகிறது. அதேபோல ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), ஆக்டிவிட்டி டிராக்கர் (Activity Tracker) இருக்கிறது. பர்சனலைஸ்டு நட்ஜ்ஸ் (Personalized Nudges) சப்போர்ட் உள்ளது.

நியூ கோல்டு.. 4 கிராமில் 70+ ஹெல்த் மெட்ரிக்ஸ்.. 6 நாட்கள் பேட்டரி!

இந்த நாய்ஸ் லூனா ரிங் மாடலை ஐஓஎஸ் 14 (iOS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 6 ஓஎஸ் (Android 6 OS) அல்லது அதற்கு மேற்பட்ட ஓஎஸ்கள் கொண்ட டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்ளலாம். 50 மீட்டர்கள் வரையில் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. 3 ஆக்சிஸ் ஆக்சிலரோமீட்டர் (3 Axis Accelerometer) வருகிறது

தொடர்ந்து 6 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும். ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்ய 90 முதல் 120 நிமிடங்கள் வரையில் பிடிக்கும். ஸ்டார்டஸ்ட் சில்வர் (Stardust Silver), லூனார் பிளாக் (Lunar Black), மிட்நைட் பிளாக் (Midnight Black), ரோஸ் கோல்டு மற்றும் சன்லிட் கோல்டு ஆகிய 5 கலர்கள் கொண்டிருக்கிறது.

அதேபோல லூனா ரிங் ஆப் (Luna Ring App) மூலம் ஆக்டிவிட்டி டேட்டாக்களை தெரிந்து கொள்ளலாம். 7 சைஸ்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அல்ட்ரா பிரீமியம் அம்சங்களை கொண்டிருப்பதால், இந்த நாய்ஸ் லூனா ரிங்கின் விலை ரூ.19,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோநாய்ஸ் (Gonoise) தளத்தில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் வாட்ச்சில் வரும் பெரும்பாலான அம்சங்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் டிசைன் கொண்ட ஸ்மார்ட் ரிங் வேண்டுமானால், இந்த நாய்ஸ் லூனா ரிங் மாடலை ஆப்ஷனில் வைத்து கொள்ளலாம். இதுபோன்ற மேலும் டெக்னாலஜி தொடர்பான செய்திகளுக்கு எங்களது கிஸ்பாட் தளத்தை பின்தொடருங்கள்.

Best Mobiles in India

English summary
Noise Luna Ring With Rose Gold Sunlit Gold Colors on Sale in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X