Home
Gadgets

Noise Luna Ring இனி இங்க கூட வாங்க கிடைக்குமா? அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட நாய்ஸ் நிறுவனம்..

நாய்ஸ் (Noise) நிறுவனம் அதன் ஸ்மார்ட் வியரப்பில் (Smart Wearable) வரிசையில் அறிமுகம் செய்த ஒரு அசத்தலான கேட்ஜெட் (Gadgets) சாதனம் தான் நாய்ஸ் லூனா ரிங் (Noise Luna Ring) என்றழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் ரிங் (Smart ring) டிவைஸ்.

நாய்ஸ் நிறுவனம் அதன் முதன்மையான மற்றும் ஸ்டைலான நாய்ஸ் லூனா ரிங் என்ற ஸ்மார்ட் ரிங் சாதனத்தை, இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்கள் வழியாக இப்போது கிடைக்கும் படி செய்துள்ளதாக, Noise நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நாய்ஸ் லூனா ரிங் பற்றிய கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

Noise Luna Ring இனி இங்க கூட வாங்க கிடைக்குமா?

நாய்ஸ் நிறுவனத்தின் சக்தி வாய்ந்த இந்த புதிய நாய்ஸ் லூனா ரிங் (Noise Luna Ring) ஸ்மார்ட் ரிங் சாதனத்தை இனி இந்திய ரசிகர்கள் ஆஃப்லைன் கடைகள் வழியாக வாங்கி மகிழலாம் என்று கூறப்பட்டுள்ளது. டெல்லி-என்சிஆர், மும்பை, புனே, பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 நகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் விஜய் சேல்ஸ் ஸ்டோர்கள் வழியாக இவை இனி வாங்க கிடைக்கும்.

லூனா ரிங் வாங்க இனி மக்கள் ஆன்லைன் தளத்தில் ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்து. இப்போது நாய்ஸ் லூனா ஸ்மார்ட் ரிங் சாதனத்தை வாங்க விருப்பமுள்ள மக்கள், ஆப்லைன் கடைகளுக்கு நேரில் சென்று இதன் வடிவமைப்பு மற்றும் ஆற்றலை நேரில் பார்த்து பிடித்த பிறகு வாங்கி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது அதன் பயனர்களுக்கு லூனா ரிங் அம்சங்களைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறவும் உதவும்.

இந்த இன்-ஸ்டோரின் இருப்பு, ஆன்லைன் தொழில்நுட்ப ஆர்வமுள்ள மக்களைத் தாண்டி, இந்தியாவில் ஸ்மார்ட் ரிங் சாதனத்தை ட்ரை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தயக்கத்தில் இருக்கும் மக்களுக்கு ஒரு ஆழமான புரிதலை வழங்க நாய்ஸ் முயன்றுள்ளது போல் தெரிகிறது. பரந்த நுகர்வோர் தளத்தைப் பூர்த்தி செய்ய நாய்ஸ் அனுமதிக்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Noise Luna Ring இனி இங்க கூட வாங்க கிடைக்குமா?

Noise Luna Ring ஆனது சன்லைட் கோல்டு (Sunlit Gold), ரோஸ் கோல்டு (Rose Gold), ஸ்டாண்டர்ட் சில்வர் (Stardust Silver), லூனார் பிளாக் (Lunar Black) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய நிறங்களில் ரூ. 19,999 மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர் கடைகளில் வழியாக வாங்க கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) அம்சத்தை நாய்ஸ் (Noise) நிறுவனம் இப்போது அதன் ஸ்மார்ட் ரிங் (Smart Ring) சாதனத்தில் கிடைக்கும் படி செய்து, புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாய்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் வியரப்பில் ஸ்மார்ட் சாதனமான லூனா ரிங் டிவைஸிற்கு நிறுவனம் இப்போது புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய அப்டேட் மூலம், லூனா ரிங் சாதனம் (Luna ring AI update) இப்போது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்ற ஏஐ அம்சத்தை பெறுகிறது. உலகத்தில் முதல் முறையாக ஏஐ அம்சத்தை பெரும் முதல் ஸ்மார்ட் ரிங் சாதனமாக இந்த லூனா ரிங் உருமாறியுள்ளது. இனி ஏஐ அம்சத்துடன் லூனா ரிங் சாதனம் அடுத்தகத்திற்கு செயல்படும் என்று நாய்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இனி உங்கள் உடலை பற்றிய எந்தவிதமான கேள்வியாக இருந்தாலும், அதை லூனா ரிங்கிடம் நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்விகளுக்கான பதிலை ஸ்மார்ட்போன் ஆப்ஸ் மூலம் லூனா ரிங் ஏஐ (Luna ring AI) உங்களுக்கு தெரியப்படுத்தும். அதேபோல், மிக துல்லியமான உடல் தகவல்களையும் இனி லூனா ரிங் பயனர்கள் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Noise Luna Ring now available from select offline stores and online stores in India to buy now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X