Noise செய்த வேலை.. உலகின் முதல் AI அம்சம் கொண்ட Smart Ring.. இனி எல்லாமே மாறப்போகுது.. லூனா ரிங் விலை என்ன?
ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) அம்சத்தை நாய்ஸ் (Noise) நிறுவனம் இப்போது அதன் ஸ்மார்ட் ரிங் (Smart Ring) சாதனத்தில் கிடைக்கும் படி செய்து, புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.
நாய்ஸ் (Noise) பிராண்ட் மிகவும் பிரபலமான வியரப்பில் கேட்ஜெட்ஸ் நிறுவனமாக திகழ்கிறது. இந்த நாய்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch), ப்ளூடூத் TWS இயர்பட்ஸ் (Bluetooth TWS Earbuds), ஹெட்போன்ஸ் (Headphones), ஸ்மார்ட் ரிங் (Smart Ring), ஸ்பீக்கர்ஸ் (Speaker) போன்ற சாதனங்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த பட்டியலில் சூப்பர் ஸ்மார்ட் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்ட டிவைஸ் தான் லூனா ரிங் என்ற ஸ்மார்ட் மோதிரம்.

நாய்ஸ் லூனா ரிங் (Noise Luna Ring):
நாய்ஸ் லூனா ரிங் (Noise Luna Ring) என்ற ஸ்மார்ட் மோதிரம், வெளித்தோற்றத்தில் பார்ப்பதற்கு வழக்கமான மோதிரம் (ring) போல காட்சியளித்தாலும், இதன் உள்பக்கத்தை பார்த்தால் தான் உங்களுக்கு விஷயமே புரியும். காரணம், அந்த அளவிற்கு இதன் அடிப்பக்கம் ஹை-டெக் தொழில்நுட்பத்தால் (high tech) ஆன உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் சென்சார்கள் (body health monitor sensors) மற்றும் இணைப்புகளால் (circuits) உருவாக்கப்பட்டுள்ளது.
பல பிட்னெஸ் பேண்ட் (Fitness band) மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களுடன் பயன்படுத்த கிடைக்கும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கிய கண்காணிப்பு அம்சத்தை இந்த ஸ்மார்ட் ரிங் (luna ring smart ring) கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் உடல் பற்றிய முழு விபரங்களை இந்த லூனா ரிங் சாதனம் அனலைஸ் செய்து, மொபைல் ஆப்ஸ் மூலமாக உங்களுக்கு தெரியப்படுத்துகிறது. உங்கள் உடலின் சமநிலையை கண்டறிய இந்த கேட்ஜெட் பெரிதும் உதவுகிறது.
இந்த சாதனத்தை நாய்ஸ் நிறுவனம் விற்பனை கொண்டு வந்து, பல லட்சம் பயனர்கள் பயன்பெறும் வகையில் செய்துள்ளது. இந்த லூனா ரிங் என்ற ஸ்மார்ட் ரிங் சாதனத்தை நாய்ஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ. 21,999 என்ற அசல் MRP விலையுடன் அறிமுகம் செய்திருந்தது. இப்போது இந்த நாய்ஸ் லூனா ரிங் சாதனத்தின் விலை (Noise Luna Ring Price) சலுகையுடன் ரூ.19,999 என்ற விற்பனை விலையுடன் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

ஏஐ அம்சத்துடன் உலகின் முதல் ஸ்மார்ட் ரிங் சாதனம் (World's first smart ring device with AI feature):
நாய்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் வியரப்பில் ஸ்மார்ட் சாதனமான லூனா ரிங் டிவைஸிற்கு நிறுவனம் இப்போது புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம், லூனா ரிங் சாதனம் (Luna ring AI update) இப்போது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்ற ஏஐ அம்சத்தை பெறுகிறது. உலகத்தில் முதல் முறையாக ஏஐ அம்சத்தை பெரும் முதல் ஸ்மார்ட் ரிங் சாதனமாக இந்த லூனா ரிங் உருமாறியுள்ளது.
இனி ஏஐ அம்சத்துடன் லூனா ரிங் சாதனம் அடுத்தகத்திற்கு செயல்படும் என்று நாய்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இனி உங்கள் உடலை பற்றிய எந்தவிதமான கேள்வியாக இருந்தாலும், அதை லூனா ரிங்கிடம் நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்விகளுக்கான பதிலை ஸ்மார்ட்போன் ஆப்ஸ் மூலம் லூனா ரிங் ஏஐ (Luna ring AI) உங்களுக்கு தெரியப்படுத்தும். அதேபோல், மிக துல்லியமான உடல் தகவல்களையும் இனி லூனா ரிங் பயனர்கள் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








