ப்ளூடூத் காலிங் வசதி.. ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட்.. பக்கா பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச் Noise அறிமுகம்!
பிரபல அசெஸ்சரிஸ் நிறுவனமான நாய்ஸ், வெறும் 1299 ரூபாய்க்கு ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) முதல் ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் (AI Voice Assistant) வரை பல்வேறு அம்சங்களை கொண்ட கலர்ஃபிட் விவிட் கால் (Noise Colorfit Vivid Call) என்னும் ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.
இப்போதெல்லாம் ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்துவதையே அனைவரும் விரும்புகின்றனர். ஏனென்றால், ஸ்மார்ட்வாட்ச்கள் மூலம் நமது உடல் ஆரோக்கியத்தை ட்ராக் செய்து கொள்ள முடிகிறது. அதன்படி ப்ளூடூத் காலிங் செய்துகொள்ள முடியும். நமது போனுக்கு வரும் நோட்டிபிகேஷன்களை எளிதாக பார்த்துக்கொள்ள முடியும். அதேடு நேவிகேஷன் (Navigation), ஜிபிஎஸ் (GPS) போன்ற பல வசதிகளும் உள்ளன.

குறிப்பாக பெண்கள் ஸ்மார்ட்வாட்ச்களை மென்ஸ்சுரல் டிராக்கராக (Menstrual Tracker) கூட பயன்படுத்திக்கொள்ள முடியும். இப்படி பல்வேறு வசதிகளை கொண்ட ஸ்மார்ட்வாட்ச்களை அவற்றின் தயாரிப்பு நிறுவனங்கள் அவ்வப்போது அப்டேட் செய்துகொண்டே வருகின்றன.
புதுப்புது டிசைன்களிலும், அம்சங்களிலும் அறிமுகம் செய்து வருகின்றன.அந்த வரிசையில் நாய்ஸ் நிறுவனத்தின் கலர்ஃபிட் விவிட் கால் என்னும் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து விதமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விலை மற்றும் அம்சங்கள்: இந்த நாய்ஸ் கலர்ஃபிட் விவிட் கால் ஸ்மார்ட்வாட்ச் வெறும் ரூ.1,299-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Amazon.in மற்றும் Gonoise.com ஆகிய தளங்களில் ஆர்டர் செய்துகொள்ளலாம். இந்த வாட்ச்சின் அவுட்டர் பக்கமானது கோல்டன் கலர் மெட்டாலிக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக ஸ்பேஸ் ப்ளூ, சில்வர் கிரே, ஜெட் பிளாக், ஃபாரஸ்ட் கிரீன், ரோஸ் பிங்க் மற்றும் டீப் வையின் ஆகிய ஆறு கலர்களில் கிடைக்கிறது.
இந்த வாட்ச் 550 நெட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 1.69 இன்ச் ( 240x280 பிக்சல் ) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. குறிப்பாக ப்ளூடூத் காலிங்கை வாட்ச்சில் இருந்தே பேசிக்கொள்ளும் வகையில் மைக் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு உள்ளது. அதோடு ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரையில் 260 எம்ஏஹெச் உள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட கிளவுட் சார்ந்த டிஸ்பிளே ஃபேஸ்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. மேலும் ஹார்ட் ரேட் காண்காணிப்பு, ஆக்ஸிஜன் அளவு காண்காணிப்பு, சென்சார்கள் உள்ளிட்டவையை கொண்டுள்ளது. குறிப்பாக வாட்டர் ரெசிஸ்டண்ட் உள்ளது.
இதுகுறித்து நாய்ஸ் நிறுவனத்தில் இணை நிறுவனர் அமித் காத்ரி கூறுகையில், "டிஜிட்டல் யுகத்தில், நாம் பயன்படுத்தும் கேஜெட்டுகள் நாளுக்கு நாள் அப்டேட்டாகி கொண்டே இருக்கின்றன. இந்த அப்டேட்கள் மக்களை எளிதில் சென்றடைய வேண்டும். அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
எங்களின் ஸ்மார்ட்வாட்ச் தெளிவான காலிங் வாய்ஸ் வசதியை அளிக்கும். அதுவே முதன்மை சிறப்பம்சம் எனத் தெரிவித்தார். பட்ஜெட் விலையில் பெரும்பாலான அம்சங்கள் இருக்க வேண்டும் என்றால் இந்த லர்ஃபிட் விவிட் கால் சரியான சாய்ஸாக இருக்கும்.


Click it and Unblock the Notifications