ப்ளூடூத் காலிங், 7 நாள் பேட்டரி ஆயுள் உடன் Noise ColorFit Ultra 2 Buzz., விலை ரொம்ப கம்மி!

|

Noise ColorFit Ultra 2 Buzz ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்ததன் மூலம் இந்திய சந்தையில் ஸ்மார்ட் வாட்ச் வரம்பை நாய்ஸ் விரிவுப்படுத்தியுள்ளது. ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட Noise ColorFit Ultra Buzz ஸ்மார்ட்வாட்ச்சின் வாரிசாக இது இருக்கிறது.

அமோலெட் டிஸ்ப்ளே உடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் அம்சங்கள் மற்றும் விலையை பார்க்கலாம்.

Noise ColorFit Ultra 2 Buzz சிறப்பம்சங்கள்

Noise ColorFit Ultra 2 Buzz சிறப்பம்சங்கள்

Noise ColorFit Ultra 2 Buzz ஆனது, ப்ளூடூத் இணைப்பின் மூலம் கால் அழைப்பை எடுக்கக்கூடிய மலிவு விலை வாட்ச் ஆகும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.78-இன்ச் அளவுடன் கூடிய AMOLED ஸ்கொயர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் 368 x 448 பிக்சல்கள் தீர்மானத்துடன் 500 நிட்ஸ் உச்ச பிரகாசத்தை கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் மெட்டாலிக் ஃபினிஷ் ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது.

பல்வேறு அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்வாட்ச்

பல்வேறு அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்வாட்ச்

Noise ColorFit Ultra 2 Buzz ஸ்மார்ட்வாட்ச் ஆனது 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு முறைகளை கண்காணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது யோகா, கூடைப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டு முறைமைகளை இது கண்காணிக்கும்.

ஆரோக்கியத்துக்கான ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இது இதய துடிப்பு மானிட்டர், SpO2 சென்சார், ரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு, பெண் சுழற்சி கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு, மன அழுத்த கண்காணிப்பு உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது.

அதாவது இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆரோக்கியம் உட்பட பல கண்காணிப்பு ஆதரவுகளையும் துல்லியமாக வழங்குகிறது.

7 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்

7 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்

Noise ColorFit Ultra 2 Buzz ஸ்மார்ட்வாட்ச்சை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக ஏழு நாட்கள் வரை பேட்டரி ஆயுள் வழங்கும் என கூறப்படுகிறது.

அதேபோல் பயனர்கள் ப்ளூடூத் அம்சத்தை இயக்கும் பட்சத்தில் பேட்டரி ஆயுள் ஒரு நாளுக்கு மட்டுமே நீட்டிக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் ப்ளூடூத் 5.3 ஆதரவு இருக்கிறது. அதேபோல் BT சிப் உடன் வேகமான இணைப்பு ஆதரவுகள், மிகக் குறைந்த மின் நுகர்வு ஆகியவற்றையும் இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டிருக்கிறது.

Noise ColorFit Ultra 2 Buzz விலை, கிடைக்கும் தன்மை

Noise ColorFit Ultra 2 Buzz விலை, கிடைக்கும் தன்மை

Noise ColorFit Ultra 2 Buzz விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனையானது ஆகஸ்ட் 17 மதியம் 12 முதல் தொடங்குகிறது.

ஆரம்ப விற்பனை சலுகையுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச்சை வெறும் ரூ.3,999 என வாங்கலாம். ஜெட் ப்ளாக், விண்டேஜ் பிரவுன், ஆலிவ் க்ரீன் மற்றும் ஷாம்பெயின் க்ரே ஆகிய வண்ண விருப்பத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகி இருக்கிறது.

Noise ColorFit Ultra 2 Buzz வாங்கலாமா?

Noise ColorFit Ultra 2 Buzz வாங்கலாமா?

Noise ColorFit Ultra 2 Buzz ஆனது ப்ளூடூத் வாய்ஸ் அழைப்பு, அமோலெட் டிஸ்ப்ளே, ஆரோக்கிய கண்ட்ரோல் மற்றும் நீண்ட நாட்கள் பேட்டரி ஆயுள் போன்ற பல அம்சங்களை கொண்டிருக்கிறது.

இந்த அனைத்து அம்சங்களும் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் ரூ.4000-க்கு கீழ் கிடைக்கிறது என்றால் தாராளமாக வாங்கலாம் என்றே கணிக்கப்படுகிறது.

ColorFit Pro 4 மற்றும் ColorFit Pro 4 Max

ColorFit Pro 4 மற்றும் ColorFit Pro 4 Max

இந்தியாவில் நாய்ஸ் நிறுவனம் பெருமளவு பிரபலமடைந்து வருகிறது. நாய்ஸ் நிறுவனம் முன்னதாக இந்தியாவில் ColorFit Pro 4 மற்றும் ColorFit Pro 4 Max ஆகிய இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்தது.

ஸ்மார்ட்வாட்ச் விலைகள்

ஸ்மார்ட்வாட்ச் விலைகள்

இந்த ஸ்மார்ட்வாட்ச்சும் பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. Noise ColorFit Pro 4 ஸ்மார்ட் வாட்ச் வெறும் ரூ. 3,499 விலையில் சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

அதேபோல் Noise ColorFit Pro 4 Max வாட்ச் ஆனது சலுகையுடன் ரூ.3,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. நேவி கோல்ட், ரோஸ் கோல்ட், சில்வர் கிரே மற்றும் விண்டேஜ் பிரவுன் வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச்சை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Noise ColorFit Ultra 2 Buzz Smartwatch Launched With BT Calling, 7 Days Battery Life and More.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X