ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!

|

Noise ColorFit Ultra 2 Buzz ஆனது AMOLED டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் அழைப்பு ஆதரவுகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது நான்கு வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. அது ஜெட் ப்ளாக், விண்டேஜ் ப்ரவுன், ஆலிவ் க்ரீன் மற்றும் ஷாம்பெயின் க்ரே ஆகும்.

Noise ColorFit Ultra 2 Buzz ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

Noise ColorFit Ultra 2 Buzz ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

AMOLED டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் காலிங் ஆதரவு என இரண்டும் இணைந்து அறிமுகமான முதல் நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் இதுதான் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Noise ColorFit Ultra 2 Buzz ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து நிலையிலும் இயங்கும் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் ஒற்றை சிப் ப்ளூடூத் அழைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது.

நான்கு வண்ண விருப்பங்களில் விற்பனை

நான்கு வண்ண விருப்பங்களில் விற்பனை

Noise ColorFit Ultra 2 Buzz விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.3,499 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதை Amazon மற்றும் gonoise.com மூலம் வாங்கலாம்.

இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது நான்கு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அது ஜெட் ப்ளாக், விண்டேஜ் ப்ரவுன், ஆலிவ் க்ரீன் மற்றும் ஷாம்பெயின் க்ரே ஆகும்.

Noise ColorFit Ultra 2 Buzz அம்சங்கள்

Noise ColorFit Ultra 2 Buzz அம்சங்கள்

புதிய Noise ColorFit Ultra 2 Buzz ஆனது 368*448-பிக்சல் தீர்மானத்துடன் 500 நிட்ஸ் பிரகாசம் கொண்ட 1.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இந்த அமோலெட் டிஸ்ப்ளே எப்போதும் ஆன் மோட்டில் இருக்கும்.

பொதுவாக ஸ்மார்ட்வாட்ச்கள் டிஸ்ப்ளே ஆனது குறிப்பிட்ட நேரத்தில் ஆஃப் ஆகி விடும், பின் பவர் பட்டன் அல்லது திரையை இரண்டு முறை டச் செய்த பிறகே டிஸ்ப்ளே ஆன் ஆகும்.

ஆனால் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் பொருத்தப்பட்டுள்ள ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே ஆனது பவர் பட்டன் அல்லது டிஸ்ப்ளேவை டச் செய்யாமலே நேரம், தேதி உள்ளிட்டவைகளை அறிந்துக் கொள்ளலாம்.

வாய்ஸ் கால்களை நேரடியாக கையாளலாம்

வாய்ஸ் கால்களை நேரடியாக கையாளலாம்

அதோடு Noise ColorFit Ultra 2 Buzz ஸ்மார்ட்வாட்ச் ஆனது டூயல் மோட் ப்ளூடூத் 5.3 உடன் கூடிய ஒற்றை சிப் ப்ளூடூத் கால் அழைப்பு அம்சத்துடன் வருகிறது.

எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர் மற்றும் மைக் மூலமாகவே உங்களுக்கு வரும் அழைப்பை எடுத்து விரைவாக பேசலாம்.

இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவே தங்களுக்கு வரும் அழைப்பை எடுத்து பேசலாம், நிராகரிக்கலாம் மற்றும் சைலண்ட் மோடிலும் போடலாம்.

டயலர் பேட் அம்சம்

கூடுதலாக ஸ்மார்ட்வாட்ச் டயலர் பேடை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான எண்ணை டைப் செய்து அழைப்பு செய்யவும் முடியும். அதேபோல் சமீபத்திய அழைப்புகள், தொடர்பு பட்டியலையும் அணுகி கால் செய்ய முடியும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

7 நாள் பேட்டரி ஆயுள்

7 நாள் பேட்டரி ஆயுள்

இந்த ஸ்மார்ட் வாட்ச் சிறிய மற்றும் இலகுரக வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. எனவே இதை கையில் அணிந்திருக்கும் போது அசௌகரிய நிலையை வழங்காது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 7 நாள் பேட்டரி ஆயுளை வழங்குகிறது.

100 விளையாட்டு முறைமைகள்

100 விளையாட்டு முறைமைகள்

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஸ்மார்ட்வாட்ச்களுக்கு என்றே தனி அம்சம் இருக்கிறது.

அது உடல்நல கண்காணிப்பு மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு ஆதரவுகள் ஆகும். அது இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் மேம்பட்ட வகையில் இருக்கிறது.

உடற்பயிற்சி ஆர்வலர்கள் தங்களது விளையாட்டை மேம்படுத்த உதவும் வகையில், இதில் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கண்டறிதல் ஆதரவு இருக்கிறது. இது 100 விளையாட்டு முறைமைகளை உள்ளடக்கியது.

நேரடியாக ஸ்மார்ட்வாட்ச் மூலம் ரன்னிங், வாக்கிங் போன்ற அடிப்படையான 10 முறைமைகளையும் நாய்ஸ் பயன்பாட்டின் மூலம் மீதமுள்ள முறைமைகளையும் பெறலாம்.

பிரத்யேக அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது தனிப்பயனாக்க முறையில் உருவாக்கப்பட்ட க்ளவுட் ஹோஸ்ட் முகங்களை (வாட்ஸ் ஹெட்) கொண்டிருக்கிறது.

அதேபோல் புதிய UI மற்றும் ஸ்மார்ட் விட்ஜெட்டுகள் மூலம் இந்த ஸ்மார்ட்வாட்ச் இயக்கப்படுகிறது.

இதன் மூலம் ஸ்மார்ட்வாட்ச்சை எளிதாக பல ஷார்ட்கட் முறையில் கையாலளாம். வழக்கமான ஸ்மார்ட்வாட்ச்களில் இடம்பெறும் IP68 சான்றிதழ் இதிலும் இருக்கிறது.

நிகழ்நேரத்தில் கண்காணிக்கலாம்

நிகழ்நேரத்தில் கண்காணிக்கலாம்

Noise ColorFit Ultra 2 Buzz ஆனது தொடர்ச்சியாக இதய துடிப்பு கண்காணிப்பு, SpO2 மற்றும் பெண் சுழற்சி கண்காணிப்பு போன்ற பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது. அதேபோல் மன அழுத்தம் மற்றும் தூக்க கண்காணிப்பு அம்சமும் இதில் இருக்கிறது. இது பயனர்களின் உடல்நல நிலையை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது.

Best Mobiles in India

English summary
Noise ColorFit Ultra 2 Buzz Launched in India With Bluetooth Calling, Alway ON AMOLED Display

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X