விடாதீங்க.. ரூ.1,299 விலையில் ரூ.5,999 மதிப்புள்ள ஸ்மார்ட்வாட்ச்.. முதல் 1,000 ஆர்டர்களுக்கு மட்டும்!
பட்ஜெட் விலையில் ப்ளூடூத் காலிங், நான்கு ஹெல்த் மானிட்டர்கள், ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பட்டாசான அம்சங்களுடன் நாய்ஸ் (Noise) நிறுவனத்தின் நாய்ஸ் கலர்ஃபிட் த்ரைவ் (Noise ColorFit Thrive) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் குறித்து விவரம் இதோ.
மலிவான விலையில் பக்காவான அம்சங்களுடன் ஸ்மார்ட்வாட்ச் வாங்க காத்திருப்பவர்களுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. எச்டி டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட், ஹெல்த் மானிட்டர்கள் போன்ற பல்வேறு அம்சங்களுடன் கூடிய நாய்ஸ் கலர்ஃபிட் த்ரைவ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுக சலுகையாக கம்மி விலைக்கு வந்துள்ளது.

நாய்ஸ் கலர்ஃபிட் த்ரைவ் அம்சங்கள் (Noise ColorFit Thrive Specifications): இந்த நாய்ஸ் வாட்ச் 1.85 இன்ச் (240 x 280 பிக்சல்கள்) எச்டி (HD) டிஎஃப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் மல்டிபிள் மெனு வியூ ஆப்சன் (Multiple Menu View Options) வருகிறது. இந்த நாய்ஸ் வாட்ச்சில் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் உள்ளது.
இதன் மூலம் 10 மீட்டர் வரை ரேன்ஞ் கிடைக்கும். 100 க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ்கள் (Watch Faces) கொடுக்கப்பட்டுள்ளன. ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistant) சப்போர்ட் உள்ளது. இந்த வாட்ச்சில் நான்கு ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் (Blood Oxygen Level Monitor), ஸ்லீப்பிங் டிராக்கிங் (Sleeping Tracking), ஃபிமேல் சைக்கிள் டிராக்கர் (Female Cycle Tracker) வருகின்றன. ரன்னிங் (Running), ஜாக்கிங் (Jogging), சைக்கிளிங் (Cycling) உள்ளிட்ட மல்டிபிள் வொர்க் - அவுட் மோட்கள் (Multiple Workout Modes) வருகின்றன.
இன்பில்ட் கேம்ஸ் (In-built Games) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட் நோட்டிஃபிக்கேஷன் டிஸ்பிளே ( Smart Notification Display) அம்சம் இருக்கிறது. மேலும், வெதர் அப்டேட் (Weather Updates), கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music Control) அம்சங்கள் வருகிறது.
டிரிங் வாட்டர் ரீமைண்டர் (Drink Water Remainder) மற்றும் செடண்டரி ரீமைண்டர் (Sedentary Remainder) இருக்கிறது. கால்குலேட்டர் (Calculator) அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாய்ஸ் கலர்ஃபிட் வாட்ச் தொடர்ந்து 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும். ப்ளூடூத் காலிங் தொடர்ந்து பயன்படுத்தினால், இரண்டு நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும்.
நாய்ஸ் கலர்ஃபிட் த்ரைவ் விலை (Noise ColorFit Thrive Price): இந்த நாய்ஸ் வாட்ச் மிட்நைட் ப்ளூ (Midnight Blue), சில்வர் கிரோ (Silver Grey), கால்ம் ப்ளூ (Calm Blue), கோரல் பிங்க் (Coral Pink), டீப் வைன் (Deep Wine) மற்றும் ஜெட் பிளாக் (Jet Black) ஆகிய ஆறு கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
நாய்ஸ் வைப்சைட் (Noise Website) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் வாங்கிக்கொள்ள முடியும். இந்த நாய்ஸ் வாட்ச்சின் விலை ரூ.5,999 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இப்போது அறிமுக விலையாக ரூ.1,299 க்கு விற்பனைக்கு வர இருக்கிறது. வரும் ஜூலை 31ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஆர்டர் செய்துகொள்ள முடியும். இந்த அறிமுக விலை முதலில் ஆர்டர் செய்யும் 1000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
அதன்பின் விலை அதிகரிக்கக்கூடும். ஆகவே, பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்வாட்ச் வாங்க திட்டம்போட்டவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








