அள்ளுது ஆர்டர்.. ரூ.2000 பட்ஜெட்ல எச்டி டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் சூட்.. எந்த வாட்ச்?
ரூ.2000 பட்ஜெட்டில் அவுட்டோர் டிசைன், எச்டி டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், ஹெல்த் சூட், 15 நாட்கள் பேட்டரி பேக்கப் போன்ற பக்கா அம்சங்களை கொண்ட நாய்ஸ் கலர்ஃபிட் த்ரில் (Noise ColorFit Thrill) ஸ்மார்ட்வாட்ச் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
நாய்ஸ் கலர்ஃபிட் த்ரில் அம்சங்கள் (Noise ColorFit Thrill Specifications): இந்த நாய்ஸ் வாட்ச்சில் 2.0 இன்ச் (240 x 296 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஎப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த நாய்ஸ் கலர்ஃபிட் த்ரில் மாடலில் நாய்ஸ் ட்ரூ சிங்க் டெக்னாலஜி (Noise Tru Sync Technology) கொண்ட ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) வருகிறது. ஆகவே, இன்-பில்ட் மைக்ரோபோன் (In-built Microphone) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) கொண்டிருக்கிறது.
அதோடு குயிக் டயல் பேட் (Quick Dial Pad) மற்றும் காண்டாக்ட்ஸ் (Contacts) சப்போர்ட் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) சப்போர்ட் வருகிறது. 150+ கிளவுட் பேஸ்ட் வாட்ச் பேஸ்கள் (Cloud Based Watch Faces) வருகின்றன. இந்த மாடலில் நாய்ஸ் ஹெல்த் சூட் (Noise Health Suite) சப்போர்ட் வருகிறது.
ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Heart Rate Monitoring), எஸ்பிஓ2 மானிட்டரிங் (SpO2 Monitoring), ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking), ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கிங் (Stress Level Tracking), ஃபீமேல் சைக்கிங் டிராக்கிங் (Female Cycle Tracking) மற்றும் ப்ரீத் டிராக்கிங் (Breathing Tracking) ஆகியவை வருகின்றன.

ரன்னிங் (Running), ஸ்விம்மிங் (Swimming), சைக்கிளிங் (Cycling), ஜாக்கிங் (Jogging) போன்ற 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன. IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water/Dust Resistance) வருகிறது. இந்த நாய்ஸ் கலர்ஃபிட் த்ரில் வாட்ச்சில் 15 நாட்கள் பேக்கப் கொடுக்கும் பேட்டரி வருகிறது.
ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் (Smart Notification) சப்போர்ட் வருகிறது. அதோடு வெதர் அப்டேட்ஸ் (Weather Updates), ரீமைண்டர் (Reminders), அலாரம் (Alarm), கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music control) மற்றும் கால்குலேட்டர் (Calculator) போன்ற பீச்சர்கள் கொண்டிருக்கிறது.
அதேபோல டிஎன்டி (DND) மோட் வருகிறது. இந்த நாய்ஸ் கலர்ஃபிட் த்ரில் வாட்ச்சின் டேட்டாக்களை நாய்ஸ்ஃபிட் ஆப் (NoiseFit App) மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஸ்டோர் (Apple Store) ஆகியவற்றில் கிடைக்கிறது.
இந்த நாய்ஸ் கலர்ஃபிட் த்ரில் மாடலில் ஜெட் பிளாக் (Jet Black), தண்டர் கிரே (Thunder Grey), கேமோ கிரீன் (Camo Green), கேமோ கிரே (Camo Grey) மற்றும் விண்டேஜ் பிரவுன் (Vintage Brown) ஆகிய கலர்கள் விற்பனைக்கு வருகிறது. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த வாட்ச்சின் விலை ரூ.1,899ஆக இருக்கிறது.
இந்த விலை அறிமுக சலுகை மட்டுமே. ஆகவே, விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கம்மியான பட்ஜெட்டில் அவுட்டோர் ஸ்மார்ட்வாட்ச் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த நாய்ஸ் கலர்ஃபிட் த்ரில் மாடல் நல்ல தேர்வாக இருக்கும். இப்போது, நாய்ஸ் வெப்சைட்டில் வாங்க கிடைக்கிறது. விரைவில் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








