இவ்ளோ கம்மியா? 2 இன்ச் டிஸ்பிளே.. 7 நாட்கள் பேட்டரி பேக்கப்.. 5 ஹெல்த் மானிட்டர்கள்.. எந்த மாடல்?
நாய்ஸ் (Noise) நிறுவனத்தின் நாய்ஸ் கலர்ஃபிட் ஸ்பார்க் ஸ்மார்ட்வாட்ச் (Noise ColorFit Spark Smartwatch) பட்ஜெட் விலையில் 2 இன்ச் டிஸ்பிளே, 7 நாட்கள் பேக்கப், 5 ஹெல்த் மானிட்டர்கள் என்று பக்கவான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
இப்போது மார்கெட்டில் விற்பனைக்கு ஸ்மார்ட்வாட்ச்களில் புதுப்புது அம்சங்கள் கொடுக்கப்படுகின்றன. சொல்லப்போனால், ஒரு ஸ்மார்ட்போனுக்கு நிகராக ப்ளூடூத் காலிங், கேமிங், என்எஃப்சி பேமெண்ட், இ-சிம் கார்டு என்று பல அம்சங்கள் அதில் வந்து விடுகின்றன. இதனால் நாளுக்கு நாள் ஸ்மார்ட்வாட்ச்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது.

ஆனால், இதுபோன்ற அம்சங்கள் கொண்ட வாட்ச்களின் விலை ரூ.5,000 க்கு மேல் இருக்கும். ஆனால், நாய்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் அதுபோன்ற அம்சங்களை பேக் செய்துவருகிறது. அந்த வரிசையில், மலிவான விலையில், நாய்ஸ் கலர்ஃபிட் ஸ்பார்க் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்கள் பின்வருமாறு.
நாய்ஸ் கலர்ஃபிட் ஸ்பார்க் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் (Noise ColorFit Spark Smartwatch Specifications): இந்த ஸ்மார்ட்வாட்ச் 2 இன்ச் டிஎஃப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் மல்டிபிள் மெனு வியூ ஆப்சன் (Multiple Menu View Options) கொடுக்கப்பட்டுள்ளது.
ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) இணைப்புத்திறன் இருக்கிறது. நாய்ஸ் ட்ரூசின்க் டெக்னாலஜி (Noise Tru Sync Technology) உடன் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) வருகிறது. 150+ வாட்ச் பேஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் 5 ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) வருகின்றன.
அந்த வகையில், 24×7 ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் (Blood Oxygen Level Monitor), ஸ்லீப் டிராக்கிங் மானிட்டர் (Sleep Tracking Monitor), ஸ்டெரெஸ் மானிட்டர் (Stress Monitor), ஃபீமேல் சைக்கிள் மானிட்டர் (Female Cycle Monitor) இருக்கின்றன.
100+ வொர்க்அவுட் மோட்கள் (Workout Modes) கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச்சை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 7 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு வேளை ப்ளூடூத் காலிங் தொடர்ந்து பயன்படுத்தினால் கூட 2 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும்.
இந்த நாய்ஸ் கலர்ஃபிட் ஸ்பார்க் ஸ்மார்ட்வாட்ச் ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green), சார்கோல் கிரே (Charcoal Grey), சில்வர் கிரே (Silver Grey), கோபால்ட் ப்ளூ (Cobalt Blue), டீப் வைன் (Deep Wine), ஜெட் பிளாக் (Jet Black ) ஆகிய 5 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுக சலுகையாக ரூ.1,999க்கு விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான் (Amazon) மற்றும் நாய்ஸ் தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








