Home
Gadgets

வாங்குனா இதுதான்.. AMOLED டிஸ்பிளே.. GPS கனெக்டிவிட்டி.. 5ATM ரெசிஸ்டன்ட்.. பாஸ்வேர்ட் வருது.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களை தட்டித் தூக்கும்படியான பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, ஹெல்த் சூட், 7 நாட்கள் பேட்டரி, ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி, 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட், ஏஐ வாட்ச் பேஸ்கள் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 6 சீரிஸ் (Noise ColorFit Pro 6 Series) களமிறங்கி இருக்கிறது. இந்த மாடல்களின் விவரங்கள் இதோ.

இதில் நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 6 (Noise ColorFit Pro 6) மற்றும் நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 6 மேக்ஸ் (Noise ColorFit Pro 6 MAX) ஆகிய 2 வேரியண்ட்கள் வந்திருக்கின்றன. டிஸ்பிளே, வாட்டர் ரெசிஸ்டன்ட், கனெக்டிவிட்டி ஆகியவற்றில் 2 வேரியண்ட்களுக்கும் மாற்றங்கள் இருக்கின்றன. இருப்பினும், இந்த கலர்ஃபிட் ப்ரோ 6 சீரிஸ் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கின்றன.

வாங்குனா இதுதான்.. AMOLED டிஸ்பிளே.. GPS கனெக்டிவிட்டி.. எந்த மாடல்?

நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 6 மாடலில் 1.85 இன்ச் (390 × 450 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள் சப்போர்ட் கொடுக்க ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி இருக்கிறது. நாய்ஸ் ஏஐ (Noise AI) வருகிறது. ஆகவே, ஏஐ வாட்ச் பேஸ்கள் (AI Watch Faces) கிடைக்கின்றன.

மேலும், ஏஐ கம்பானியன் (AI Companion) மற்றும் ஏஐ பார்சலைசேஷன் (AI Personalization) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, ஏஐ ஹெல்த் அட்வைஸ், ஏஐ பேஸ் ஜெனிரேஷன் வருகிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்க ஈஎன்2 (EN2) சிப்செட் மற்றும் நெபுளா யுஐ 2.0 (Nebula UI 2.0) பேக் செய்யப்பட்டுள்ளது. நாய்ஸ் ஹெல்த் சூட் (Noise Health Suite) உள்ளது.

ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஆக்டிவிட்டி டிராக்கர் (Activity Tracker) மற்றும் ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கர் (Stress Level Tracker) உள்ளிட்டவை கிடைக்கின்றன. இதற்கான சென்சார்களும் வருகிறது. 7 நாட்கள் பேட்டரி பேக்கப் எதிர்பார்க்கலாம். ஸ்மார்ட்போனை போல பாஸ்வேர்ட் பாதுக்காப்பு வருகிறது.

வாங்குனா இதுதான்.. AMOLED டிஸ்பிளே.. GPS கனெக்டிவிட்டி.. எந்த மாடல்?

இதுபோல நோட்டிபிகேஷன்கள், கெஸ்ச்சர் சப்போர்ட் கொடுக்கிறது. இப்போது, நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 6 மேக்ஸ் மாடலின் பீச்சர்களை பார்ப்போம். மேற்கண்ட பீச்சர்களில் டிஸ்பிளே மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் மட்டுமே இதில் மாறுகிறது. மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, இதில் 1.96 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது.

410 × 502 பிக்சல்கள் ரெசொலூஷன் கிடைக்கிறது. 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் பில்ட்-இன் ஜிபிஎஸ் (Built-in GPS) கனெக்டிவிட்டி இருக்கிறது. ஆனால், நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 6 மாடலில் IP68 ரெசிஸ்டன்ட் மட்டுமே கிடைக்கிறது. இப்போது விலை விவரங்களை தெரிந்து கொள்வோம். ஸ்ட்ராப் வேரியண்ட்களுக்கு ஏற்ப விலைகள் மாறுபடுகின்றன.

ஆகவே, நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 6 மாடலின் மெஷ் ஸ்ட்ராப் (Mesh Strap) வேரியண்ட்டின் விலை ரூ.6,499ஆக இருக்கிறது. மேக்னடிக் ஸ்ட்ராப் (Magnetic Strap) வேரியண்ட்டின் விலை ரூ.5,999ஆக இருக்கிறது. பிராய்டெட் ஸ்ட்ராப் (Braided Strap) வேரியண்ட்டின் விலை ரூ.5,999ஆகவும் சிலிகான் ஸ்ட்ராப் (Silicone Strap) வேரியண்ட்டின் விலை ரூ.5,999ஆகவும் இருக்கிறது.

நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 6 மேக்ஸ் மாடலின் மெட்டல் ஸ்ட்ராப் (Metal Strap) வேரியண்ட்டின் விலை ரூ.7,999ஆகவும், மெக்னடிக் ஸ்ட்ராப் (Magnetic Strap) வேரியண்ட்டின் விலை ரூ.7,499ஆகவும் இருக்கிறது. அதேபோல லெதர் ஸ்ட்ராப் (Leather Strap) வேரியண்ட்டின் விலை ரூ.7,499ஆக இருக்கிறது. சிலிகான் ஸ்ட்ராப் (Silicone Strap) வேரியண்ட்டின் விலை ரூ.7,499ஆக இருக்கிறது.

ப்ரோ 6 மேக்ஸ் மாடலின் விற்பனை நாய்ஸ் தளத்தில் தொடங்கி இருக்கிறது. ப்ரோ 6 மாடலின் ப்ரீ-புக்கிங் இன்று தொடங்கி இருக்கிறது. விற்பனை வரும் ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஜனவரி 29ஆம் தேதி முதல் அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் ஆர்டர் செய்ய கிடைக்கும். பிரீமியம் பீச்சர்களை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கொடுக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Noise ColorFit Pro 6 Series With AMOLED Display AI Watch Faces Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X