Home
Gadgets

பறக்குது ஆர்டர்.. பெரிய AMOLED டிஸ்பிளே.. 7 நாள் Battery.. உடனே Noise ColorFit Pro 5 வாங்கிடுங்க.. விலை என்ன?

ஸ்மார்ட்வாட்ச்களுக்கு மிகவும் பிரபலமான நிறுவனமாக நாய்ஸ் (Noise) பிராண்டு இந்தியாவில் உருமாறியுள்ளது. இந்தியாவை தளமாக கொண்ட நாய்ஸ் நிறுவனம் இப்போது நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 5 (Noise ColorFit Pro 5) என்ற சீரிஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 5 (Noise ColorFit Pro 5) தொடர் செவ்வாய்கிழமை (இன்று) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் அடிப்படை நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 5 (Noise ColorFit Pro 5) மற்றும் நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 5 மேக்ஸ் (Noise ColorFit Pro 5 Max) என்று இரண்டு சாதனங்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பறக்குது ஆர்டர்.. பெரிய AMOLED டிஸ்பிளே.. 7 நாள் Battery..

இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் (smartwatch) மாடல்கள் பல ஸ்போர்ட்ஸ் மோட் உடன் SOS இணைப்பை ஆதரிக்கின்றன. நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 5 (Noise ColorFit Pro 5) வாட்ச்களுக்கான ஸ்ட்ராப் விருப்பங்களில் லெதர் (leather), சிலிகான் (silicon), நைலான் (nylon) மற்றும் மெட்டல் (metal) போன்ற விருப்பங்களில் வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 5 மற்றும் நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 5 மேக்ஸ் விலை (Noise ColorFit Pro 5 and Noise ColorFit Pro 5 Max Price):

Noise ColorFit Pro 5 மற்றும் Noise ColorFit Pro 5 Max அடிப்படை பதிப்புகள் இந்தியாவில் ரூ. 3,999 மற்றும் ரூ. 4,999 விலையில் கிடைக்கிறது. இதன் எலைட் எடிஷன் மாடல் ரூ.4,999 மற்றும் ரூ.5,999 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இவை GoNoise.com, பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon), மித்ரா (Myntra) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் வழியாக வாங்குவதற்கு கிடைக்கின்றன.

நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 5 மற்றும் நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 5 மேக்ஸ் டிஸ்பிளே:

நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 5 (Noise ColorFit Pro 5) இன் அடிப்படை மாடலானது 390 x 450 தீர்மானம் கொண்ட 1.85' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 5 மேக்ஸ் மாடல் 410 x 502 தீர்மானம் கொண்ட 1.96' இன்ச் அளவு கொண்ட பெரிய AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இரண்டு டிஸ்பிளேவும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது.

இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகின்றன. இந்த ஸ்மார்ட்வாட்ச்களில் நாய்ஸ் ஹெல்த் சுய்ட் (Noise Health Suite) பொருத்தப்பட்டுள்ளது. இது பயனர்கள் இதயத் துடிப்பு, SpO2, ஸ்லீப் மானிட்டர், போன்ற பல ஆரோக்கிய அம்சங்களை கண்காணிக்கிறது. Noise ColorFit Pro 5 மற்றும் Noise ColorFit Pro 5 Max ஆகியவை தினசரி நோட்டிபிகேஷன் உடன் வெதர் ரிப்போர்ட் ஆதரவையும் கொண்டுள்ளது.

இது 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட் உடன் 150-க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ் அம்சத்தை ஆதரிக்கிறது. இந்த 2 ஸ்மார்ட்வாட்ச்களும் 7 நாள் பேட்டரி ஆயுளை வழங்குகின்றன. இவை SOS மற்றும் புளூடூத் 5.3 (Bluetooth) இணைப்புகளை ஆதரிக்கின்றன. இந்த வாட்ச்கள் NoiseFit மொபைல் ஆப்ஸ் உடன் இணைகிறது.

வண்ண விருப்பங்கள் (Noise ColorFit Pro 5colour options):

அடிப்படை நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 5 (Noise ColorFit Pro 5) வாட்ச் ஆனது மிட்நைட் பிளாக் (Midnight Black), வின்டேஜ் பிரௌன் (Vintage Brown), சன்செட் ஆரஞ்சு (Sunset Orange), கிளாசிக் ப்ளூ (Classic Blue), கிளாசிக் பிரௌன் (Classic Brown), எலைட் பிளாக் (Elite Black), எலைட் ரோஸ் கோல்டு (Elite Rose Gold), ஒலிவ் க்ரீன் (Olive Green),

ரெயின்போ வேவ் (Rainbow Weave) மற்றும் ஸ்டர்லைட் கோல்டு (Starlight Gold) ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இது எலைட் (மெட்டல்), கிளாசிக் (லெதர்), லைஃப்ஸ்டைல் ​​(சிலிக்கான்) மற்றும் வீவ் (நிட்) ஸ்டிராப் விருப்பங்கள் உடன் வாங்க கிடைக்கிறது. பெஸ்ட் லுக் உடன் பிரீமியம் தரத்தில் கெத்தான ஒரு ஸ்மார்ட்வாட்சை வாங்க ஆசையா? அப்படியானல் யோசிக்காமல் இந்த வாட்சை உடனே வாங்குங்கள்.

Best Mobiles in India

English summary
Noise ColorFit Pro 5 and Noise ColorFit Pro 5 Max With 1.98 inch AMOLED Display and SOS Feature
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X