Home
Gadgets

நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.!

இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் வாட்ச் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கலர்பிட் ப்ரோ 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷன்

இந்நிறுவனம் அறிமுகம் செய்த கலர்பிட் ப்ரோ 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் தான் நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 மாடல். மேலும் இந்தவாட்ச் நாய்ஸ்பிட் செயலியுடன் இணைந்து உடல்நலன் சார்ந்த விவரங்களை டிராக் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

500 நிட்ஸ் பிரைட்னஸ்  வசதி

500 நிட்ஸ் பிரைட்னஸ் வசதி

குறிப்பாக இந்த கலர்பிட் ப்ரோ 3 மாடல் ஆனது 1.55-இன்ச் டச் எச்டி ட்ரூவியூ டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 500 நிட்ஸ் பிரைட்னஸ் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது.

ஸ்டிரெஸ் மாணிட்டர்

ஸ்டிரெஸ் மாணிட்டர்

இந்த சாதனம் ப்ளூடூத் 5.0 மற்றும் 5 ஏடிஎம் தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. பின்பு 24x7 இதய துடிப்பு டிராக்கிங், எஸ்பிஒ2 மாணிட்டர், ஸ்டிரெஸ் மாணிட்டர், பிரீத் மோட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது இந்த கலர்பிட் ப்ரோ 3 மாடல்.

 14 ஸ்போர்ட்ஸ் மோட்கள்

14 ஸ்போர்ட்ஸ் மோட்கள்

குறிப்பாக கலர்பிட் ப்ரோ 3 மாடல் ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கு பின் வெளியான இயங்குதளத்தை கொண்ட சாதனங்களுடன் இணைந்து செயல்படும். அதேபோல் இந்த புதிய சாதனத்தில் 14 ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கரோரிக்கள் எரிக்கப்பட்டன.

கலர்பிட் ப்ரோ 3 சாதனம் மூலம் உடலில் எத்தனை கரோரிக்கள் எரிக்கப்பட்டன. எத்தனை தூரம் கடக்கப்பட்டது, ஸ்லீப் மாணிட்டர் மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

210 எம்ஏஎச் பேட்டரி

210 எம்ஏஎச் பேட்டரி

மேலும் இந்த புதிய சாதனம் டெக்ஸ்ட், ஆப், சமூக வலைதள நோட்டிபிகேஷன், அழைப்புகள் உள்ளிட்டவைகளுக்கு வைப்ரேஷன் அலெர்ட்களை வழங்குகிறது. பின்பு 35 கிராம் எடை கொண்டுள்ள இந்த கலர்பிட் ப்ரோ 3 ஸ்மார்ட்வாட்ச் மாடல் 210 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இது 10 நாட்களுக்கான பேக்கப் மற்றும் 30 நாட்களுக்கான ஸ்டான்ட்பை வழங்குகிறது.

ஜெட் புளூ, ஸ்மோக் கிரே, ஸ்மோக்

ஜெட் பிளாக், ஜெட் புளூ, ஸ்மோக் கிரே, ஸ்மோக் கிரீன் உள்ளிட்ட சில நிறங்களில் கிடைக்கிறது இந்த நாய்ஸ் கலர்பிட் ப்ரோ 3 மாடல். மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.5,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் மற்றும் நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ரூ. 3,999 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Noise Colorfit Pro 3 Smartwatch Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X