Home
Gadgets

பட்ஜெட்னா இதாங்க.. ரூ.1399 போதும்.. HD டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹார்ட் ரேட் மானிட்டர்.. எந்த மாடல்?

மெட்டாலிக் ஸ்ட்ராப், எச்டி டிஸ்பிளே, கர்வ்ட் டிசைன், ப்ளூடூத் காலிங், ஹார்ட் ரேட் மானிட்டர், 7 நாட்கள் பேட்டரி பேக்கப் போன்ற அம்சங்களுடன் பட்ஜெட்டில் நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ (Noise ColorFit Macro) ஸ்மார்ட்வாட்ச் மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. விவரம் இதோ.

நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ அம்சங்கள் (Noise ColorFit Macro Specifications): இந்த கலர்ஃபிட் மாடலில், 2.0 இன்ச் எச்டி (HD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு டிஃஎப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே மாடலாகும். 2.5டி கர்வ்ட் கிளாஸ் (2.5D Curved Glass) டிசைன் கொண்டிருக்கிறது.

ரூ.1399 போதும்.. HD டிஸ்பிளே.. ஹார்ட் ரேட் மானிட்டர்.. எந்த வாட்ச்?

கன்ட்ரோலுக்காக ஃபங்ஷ்னல் கிரவுண் (Functional Crown) வருகிறது. மெட்டாலிக் ஸ்ட்ராப் (Metallic Strap), லெதர் ஸ்ட்ராப் (Leather Strap), சிலிகான் ஸ்ட்ராப் (Silicone Strap) ஆகிய 3 வேரியண்ட்கள் கொண்டுள்ளது. இந்த வாட்ச்சில் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) வருகிறது.

அதோடு, நாய்ஸ் ட்ரூ சிங்க் டெக்னாலஜி (Noise Tru Sync Technology) கொண்டுள்ளது. ஆகவே, மொபைல், வாட்ச் கனெக்டிவிட்டி பக்காவாக இருக்கும். இந்த நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோவில் டயல் பேட் (Dial Pad), ரீசன்ட் கால் ஹிஸ்டரி (Recent Call History) சப்போர்ட கொண்டிருக்கிறது.

இந்த வேரியண்ட்டில் இன்-பில்ட் மைக்ரோபோன் (In-built Microphone) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) வருகிறது. நாய்ஸ்ஃபிட் ஆப் (NoiseFit App) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, ஆக்டிவிட்டி டேட்டாக்களை (Activity Data) இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். 200+ கிளவுட் பேஸ்ட் வாட்ச் பேஸ்கள் (Cloud-based Watch Faces) வருகின்றன.

அதேபோல ஸ்விம்மிங், ரன்னிங், ஜாக்கிங் உள்ளிட்ட 115+ ஸ்போர்ட்மோட்கள் (Sports Modes) வருகின்றன. இந்த நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ வேரியண்ட்டில் ஹெல்த் டிராக்கர்கள் (Health Tracker) மற்றும் ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitor) வருகின்றன. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor) உள்ளது.

அதோடு எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking), ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கிங் (Stress Level Tracking) மற்றும் ஃபீமேல் சைக்கிள் டிராக்கர் (Female Cycle Tracker) வருகிறது. அதுமட்டுமல்லாமல், ப்ரீதிங் பிரக்டிஸ் (Breathing Practice) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோவில் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (Voice Assistance Support) உள்ளது. நோட்டிபிகேஷன் டிஸ்பிளே (Notification Display), வெதர் அப்டேட்ஸ் (Weather Updates), ரீமைண்டர்கள் (Reminders), கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music Control) வருகிறது.

7 நாட்கள் பேட்டரி பேக்கப் வருகிறது. இந்த வாட்ச்சின் சிலிகான் ஸ்ட்ராப் வேரியண்ட்டில் மிஸ்ட் கிரே (Mist Grey), ஸ்பேஸ் ப்ளூ (Space Blue) மற்றும் ஜேட் பிளாஸ் (Jet Black) ஆகிய 4 கலர்கள் வருகிறது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.1,399ஆக இருக்கிறது.

அதேபோல லெதர் ஸ்ட்ராப் வேரியண்ட்டானது, கிளாசிக் பிளாக் (Classic Black) மற்றும் கிளாசிக் பிரவுண் (Classic Brown) கலர்கள் கொண்டுள்ளது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.1499ஆக இருக்கிறது. மெட்டாலிக் ஸ்ட்ராப் வேரியண்ட்டை பார்க்கையில், பிளாக் லிங்க் (Black Link) மற்றும் சில்வர் லிங்க் (Silver Link) கலர்கள் வருகின்றன.

இந்த வேரியண்ட்டின் விலை ரூ.1599ஆக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. பட்ஜெட்டில் பக்கா டிஸ்பிளே, பேட்டரி, ஹெல்த் மானிட்டர்கள் வேண்டுமானால், இந்த இந்த நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ மாடலை தேர்ந்தெடுங்கள்.

Best Mobiles in India

English summary
Noise ColorFit Macro With Bluetooth Calling Sale From February 19 in Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X