ஆர்டர் மிரளும்.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. ஆக்டிவிட்டி டிராக்கர்.. ஹெல்த் மானிட்டர்.. எந்த மாடல்?
அமோலெட் டிஸ்பிளே, லெதர் ஸ்ட்ராப், ட்ரூ சிங்க் டெக்னாலஜி, ப்ளூடூத் காலிங், ஆக்டிவிட்டி டிராக்கர்கள், ஹெல்த் மானிட்டர்கள், 7 நாட்கள் பேட்டரி பேக்கப் போன்ற பக்காவான அம்சங்களை கொண்ட நாய்ஸ் கலர்ஃபிட் ஹெக்ஸா (Noise ColorFit Hexa) ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட்டில் வருகிறது.
நாய்ஸ் கலர்ஃபிட் ஹெக்ஸா அம்சங்கள் (Noise ColorFit Hexa Specifications): இந்த ஹெக்ஸா மாடலில் 1.96 இன்ச் (360 x 360 பிக்சல்கள்) ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-on Display) வருகிறது. இதுவொரு 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். ஆகவே, அவுட்டோரிலும் பக்காவான டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

இந்த நாய்ஸ் கலர்ஃபிட் ஹெக்ஸா வாட்ச்சானது, கர்வ்ட் டிசைன் (Curved Design) கொண்டிருக்கிறது. அதோடு ஃபங்ஷ்னல் கிரவுண் (Functional Crown) கொண்டுள்ளது. ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் வருகிறது. அதோடு குயிக் டயல் பேட் (Quick Dial Pad) மற்றும் காண்டாக்ட்ஸ் (Contacts) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், நாய்ஸ் ட்ரூ சிங்க் டெக்னாலஜி (Noise Tru Sync Technology) கொண்டிருக்கிறது. ஆகவே, வாய்ஸ் காலிங் அனுபவம் கிரிஸ்டல் கிளியராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நாய்ஸ் கலர்ஃபிட் ஹெக்ஸா மாடலானது, ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.
அதோடு நாய்ஸ்ஃபிட் (NoiseFit) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஸ்டோர் (Apple Store) ஆகியவற்றில் கிடைக்கிறது. இந்த ஆப் மூலம் ஆக்டிவிட்டி டேட்டாக்களை தெரிந்து கொள்ளலாம். இந்த மாடலில் 100+ கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Faces) வருகின்றன.
ஆக்டிவிட்டி டிராக்கர்கள் (Activity Tracker) மற்றும் ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) வருகின்றன. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டர் (Stress Level Monitor) மற்றும் ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking) ஆகியவை வருகின்றன.

ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங், ஜாக்கிங் உள்ளிட்ட மல்டிபிள் ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Multiple Sports Modes) கொடுக்கப்பட்டுள்ளன. இந்த டேட்டாக்களை நாய்ஸ்ஃபிட் ஆப் மூலம் பார்த்து கொள்ளலாம். நோட்டிபிகேஷன் டிஸ்பிளே (Notification Display) கொண்டிருக்கிறது. ஆகவே, எஸ்எம்எஸ் (SMS), ஆப் (App) நோட்பிகேஷன்களை எளிதாக பார்த்து கொள்ளலாம்.
இந்த நாய்ஸ் கலர்ஃபிட் ஹெக்ஸா மாடலில் 7 நாட்கள் பேக்கப் கொடுக்கும் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water/Dust Resistance) கொண்டிருக்கிறது. அதோடு மியூசிக் கன்ட்ரோல் (Music Control), கேமரா கன்ட்ரோல் (Camera Control) மற்றும் வெதர் அப்டேட்ஸ் (Weather Updates) பீச்சர் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், ரீமைண்டர்ஸ் (Reminders), அலாரம் (Alarm) மற்றும் கால்குலேட்டர் (Calculator) ஆகியவற்றின் சப்போர்ட்டும் வருகிறது. இந்த ஹெக்ஸா மாடலானது, மெட்டாலிக் பாடியோடு டீல் ப்ளூ, கிளாசிக் பிரவுன் (லெதர்), கிளாசிக் பிளாக் (லெதர்) மற்றும் ஜெட் பிளாக் ஆகிய கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.
நாய்ஸ் வெப்சைட் (Noise Website) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். வரும் ஜனவரி 24ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும், இதன் விலை ரூ.2,499ஆக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அறிமுக சலுகையென்பதால், விரைவில் விலை அதிகரிக்கலாம்.


Click it and Unblock the Notifications








