புரட்டிப்போடுது.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. மெட்டாலிக் பாடி.. ஹெல்த் மானிட்டர்.. எந்த மாடல்?
அல்ட்ரா பிரீமியம் மெட்டாலிக் டிசைன், அமோலெட் டிஸ்பிளே, ஹெல்த் மானிட்டர்கள், 10 நாட்கள் பேட்டரி பேக்கப், ஸ்போர்ட்ஸ் மோட்கள் போன்ற பக்காவான அம்சங்களை கொண்ட நாய்ஸ் கலர்ஃபிட் குரோம் (Noise ColorFit Chrome) ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.
நாய்ஸ் கலர்ஃபிட் குரோம் அம்சங்கள் (Noise ColorFit Chrome Specifications): இந்த நாய்ஸ் வேரியண்ட் 1.85 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. பிரீமியம் மெட்டாலிக் டிசைனில் (Premium Metallic Design) மிரளவிடுகிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்ட்ராப் (Stainless Steel Strap) மற்றும் ஃபங்ஷ்னல் கிரவுன் (Functional Crown) கொண்டிருக்கிறது.

நாய்ஸ் ட்ரூ சிங்க் டெக்னாலஜி (Noise Tru Sync Technology) கொண்ட ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) வருகிறது. ஆகவே, ஆடியோ குவாலிட்டி கிரிஸ்டல் கிளியர் தரத்தில் எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாய்ஸ்ஃபிட் ஆப் (NoiseFit App) சப்போர்ட் வருகிறது.
இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஸ்டோர் ஆகியவற்றில் கிடைக்கிறது. இதன் மூலம் டெய்லி ஆக்டிவிட்டி டேட்டாக்களை தெரிந்து கொள்ளலாம். இந்த நாய்ஸ் கலர்ஃபிட் குரோம் வேரிண்ட்டில் 100+ கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Faces) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹெல்த் டிராக்கர்கள் (Health Trackers) மற்றும் மானிட்டர்கள் (Monitors) வருகின்றன. ஆகவே, 24×7 ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking), ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கிங் (Stress Level Tracking) மற்றும் ஃபீமேல் சைக்கிள் டிராக்கர் (Female Cycle Tracker) வருகிறது.

அதோடு டெய்லி ஆக்விட்டிகளுக்கான மல்டிபிள் ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Multiple Sports Modes) வருகின்றன. இதன் மூலம் ரன்னிங் (Running), ஜாக்கிங் (Jogging), வாக்கிங் (Walking), ஸ்விம்மிங் (Swimming), சைக்கிளிங் (Cycling) உள்ளிட்ட பல்வேறு ஆக்டிவிட்டிகளின் டேட்டாக்களை தெரிந்து கொள்ளலாம். இதற்கு நாய்ஸ்ஃபிட் ஆப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த நாய்ஸ் கலர்ஃபிட் குரோம் மாடலில் எஸ்எம்எஸ் (SMS), ஆப் நோட்டிபிகேஷன் (App Notifiation) போன்றவற்றுக்காக (Notification Display) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மியூசிக் கன்ட்ரோல் (Music Control) மற்றும் கேமரா கன்ட்ரோல் (Camera Control) கொண்டிருக்கிறது. மேலும் வெதர் அப்டேட்ஸ் (Weather Updates), ரீமைண்டர்ஸ் (Reminders) வருகின்றன.
அதோடு அலாரம் (Alarm), கால்குலேட்டர் (Calculator) போன்றவையும் இருக்கின்றன. இந்த மாடலானது, மொத்தமாக 10 நாட்கள் பேக்கப் கொண்ட பேட்டரி கொண்டிருக்கிறது. எலைட் சில்வர் (Elite Silver), எலைட் மிட்நைட் கோல்டு (Elite Midnight Gold) மற்றும் எலைட் பிளாக் (Elite Black) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்த நாய்ஸ் கலர்ஃபிட் குரோம் வாட்ச்சானது, நாய்ஸ் வெப்சைட் (Noise Website) மற்றும் அமேசான் (Amazon) ஆகிய தளங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது. இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும் ரூ.5,000 மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாய்ஸ் மாடலை ரூ.499 செலுத்தி முன்கூட்டியே ப்ரீ-ரிசர்வ் செய்தால், ரூ.1000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.4000 விலையில் இந்த வாட்ச்சை வாங்கி கொள்ளலாம். பட்ஜெட்டில் அல்ட்ரா பிரீமியம் மெட்டாலிக் டிசைன், ஹெல்த் மானிட்டர்கள், ஸ்போர்ட்ஸ் மோட்கள் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் வேண்டுமென்றால், இதை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








