மலிவு விலையில் ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட தரமான நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!
இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் நாய்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய நாய்ஸ் கலர்ஃபிட் Caliber Buzz என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
இப்போது நாய்ஸ் கலர்ஃபிட் Caliber Buzz ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது நாய்ஸ் கலர்ஃபிட் Caliber Buzz ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.69-இன்ச் டிஸ்பிளே மற்றும் சதுரங்க வடிவம் கொண்ட டயல் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது 300 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நாய்ஸ் கலர்ஃபிட் Caliber Buzz ஸ்மார்ட்வாட்ச். பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்பது தான் சிறப்பு.
இந்த நாய்ஸ் கலர்ஃபிட் Caliber Buzz ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆனது 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240x280 பிக்சல் ரெசல்யூஷன், 100-க்கும் அதிக கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். கண்டிப்பாக இளைஞர்களுக்கு இந்த ஸ்மார்ட்வாட்ச் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
வலதுபுறம் பட்டன் மற்றும் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியைக் கொண்டு இந்த நாய்ஸ் கலர்ஃபிட் Caliber Buzz ஸ்மார்ட்வாட்ச் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இதயத் துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டர், மென்ஸ்டுரல் சைக்கில் டிராக்கர் உள்ளிட்ட பல ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச்.
நாய்ஸ் கலர்ஃபிட் Caliber Buzz ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆனது 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இதில் பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு ப்ளூடூத் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் சமீபத்திய அழைப்புகளைக் காண்பிக்கிறது.
குறிப்பாக DND மோட், வானிலை மற்றும் பங்குச் சந்தை அப்டேட்கள், நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே, ரிமோட் கேமரா, மியூசிக் கண்ட்ரோல் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த நாய்ஸ் கலர்ஃபிட் Caliber Buzz ஸ்மார்ட்வாட்ச். பின்பு குறிப்பாக சிறந்த மென்பொருள் வசதியுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.

இந்த நாய்ஸ் கலர்ஃபிட் Caliber Buzz ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக், ரோஸ் பின்க், மிட்நைட் புளூ மற்றும் ஆலிவ் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கும். பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.1499-ஆக உள்ளது. பின்பு இதன் விற்பனை அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கம்மி விலையில் அனைத்து அம்சங்களுடன் ஒரு ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த நாய்ஸ் கலர்ஃபிட் Caliber Buzz ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்குவது நல்லது. பின்பு நாய்ஸ் நிறுவனம் விரைவில் பல அசத்தலான தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








