போடு ஆர்டர் போடு.. கம்மி பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. TruSync டெக்னாலஜி.. 7 நாட்கள் பேட்டரி.. எந்த வாட்ச்?
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலுக்கு நிகரான டிசைனில் அமோலெட் டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், ட்ரூ சிங்க் டெக்னாலஜி, ஹெல்த் மானிட்டர்கள், வாட்டர் ரெசிஸ்டன்ட், 7 நாட்கள் பேட்டரி பேக்கப் போன்ற பக்கா அம்சங்களுடன் நாய்ஸ் கலர்ஃபிட் கேலிபர் 3 விற்பனைக்கு வந்துள்ளது.
நாய்ஸ் கலர்ஃபிட் கேலிபர் 3 அம்சங்கள் (Noise ColorFit Caliber 3 Specification): இந்த நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் 1.78 இன்ச் (368 x 448 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மாடலாகும். கிளவுட் பேஸ்ட் வாட்ச் பேஸ்கள் (Cloud Based Watch Faces) வருகின்றன.

பிளாட்-எட்ஜ் டிசைனில் (Flat-Edge Design) மெட்டாலிக் பாடி கொண்டிருக்கிறது. அதோடு ஃபங்ஸ்னல் கிரவுன் (Functional Crown) மற்றும் கன்ட்ரோல் பட்டன் இடம் பெற்றுள்ளது. இந்த நாய்ஸ் கலர்ஃபிட் கேலிபர் 3 வாட்ச்சில் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி கொண்ட ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மொபைல், லேப்டாப் போன்ற டிவைஸ்களில் நொடியில் கனெக்ட் செய்ய ஏதுவாக நாய்ஸ் ட்ரூ சிங்க் டெக்னாலஜி (Noise Tru Sync Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சை ஐஓஎஸ் 11.0 (iOS 11.0) மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 (Android 9.0) ஓஎஸ் அல்லது அதற்கு மேற்பட்ட ஓஎஸ்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Faces) வருகின்றன.
அதேபோல 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) கொடுக்கப்பட்டுள்ளன. ரன்னிங், ஜாக்கிங், வாக்கிங் போன்றவற்றின் போது, இந்த வாட்ச் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் டிடெக்சன் (Auto Sports Detection) செய்து கொள்ளும். இதில் நாய்ஸ் ஹெல்த் சூட் (Noise Health Suite) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, மொத்தமாக 6 ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) மற்றும் ஹெல்த் டிராக்கர்கள் (Health Trackers) வருகின்றன.
அதில் ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்ட்ரெஸ் மானிட்டர் (Stress Monitor), ப்ரீத் பிராக்டிஸ் (Breath Practice), எஸ்பிஓ2 டிராக்கர் (SpO2 Tracker), ஃபீமேல் சைக்கிள் டிராக்கர் (Female Cycle Tracker) மற்றும் ஸ்லீப் டிராக்கர் (Sleep Tracker) ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் 24 மணி நேரமும் பிளட் ஆக்ஸிஜன் லெவல், ஹார்ட் ரேட் ஆகிவற்றை கவனித்துக்கொள்ள முடியும்.

இந்த நாய்ஸ் கலர்ஃபிட் கேலிபர் 3 ஸ்மார்ட்வாட்ச்சில் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water/Dust Resistance) கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஸ்விம்மிங் போதும் இந்த வாட்ச்சை பயன்படுத்த முடியும். இந்த வாட்ச் ஒரு ஃபுல் சார்ஜில் தொடர்ந்து 7 நாட்கள் பேட்டரி பேக்கப் கொடுக்கக்கூடியது. அதேபோல ஸ்டான்பை மோடில் 30 நாட்கள் வரையில் பேக்கப் கிடைக்கும்.
இதை ஃபுல் சார்ஜ் செய்ய 2 மணி நேரங்கள் பிடிக்கும். இதற்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாய்ஸ் கலர்ஃபிட் கேலிபர் 3 ஸ்மார்ட்வாட்ச்சில் கெஸ்சர் கன்ட்ரோல் (Gesture Control), 2 ஸ்டைல் மெனு (2 Menu Style), மியூசிக் கன்ட்ரோல் (Music Control) போன்ற பீச்சர்கள் வருகின்றன.

அதோடு நோட்டிபிகேஷன் டிஸ்பிளே (Notification Display), வெதர் அப்டேட், கேமரா கன்ட்ரோல், கால்குலேட்டர் ஆகிவை உள்ளன. இந்த வாட்ச் மின்ட் கிரீன், ஸ்பேஸ் பிளாக் ரோஸ் பிங்க், ஜெட் பிளாக் மற்றும் டீப் ஒயின் ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த வாட்ச்சின் விலை ரூ.2,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அறிமுகம் விலை மட்டுமேயாகும். நாட்ஸ் வெப்சைட்டில் ஆர்டர் செய்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications