Home
Gadgets

அரளுது விலை.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. TruSync டெக்னாலஜி.. RUGGED டிசைன்.. எந்த மாடல்?

அமோலெட் டிஸ்பிளே, பிரீமியம் ரக்கட் டிசைன், மெட்டாலிக் பாடி, ப்ளூடூத் காலிங், ட்ரூசிங்க் டெக்னாலஜி, ஹெல்த் மானிட்டரிங் போன்ற மிட்-ரேஞ்ச் அம்சங்களை கொண்ட நாய்ஸ் கலர்ஃபிட் கேடட் (Noise ColorFit Cadet) ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவரம் இதோ.

நாய்ஸ் கலர்ஃபிட் கேடட் அம்சங்கள் (Noise ColorFit Cadet Specification): இந்த கேடட் ஸ்மார்ட்வாட்ச் 1.78 இன்ச் (366 x 448 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ஆல்-வேஸ் ஆன் (Always-On Display) மாடலாகும். ஆகவே, 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச் ரக்கட் டிசைனில் (Rugged Design) மெட்டல் பாடி (Metal Body) கொண்டிருக்கிறது.

பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. TruSync டெக்னாலஜி.. RUGGED டிசைன்!

அதோடு கேமவுஃபிளஜ் ஸ்ட்ராப் (Camouflage Strap) வருகிறது. அதேபோல ரோடேட்டிங் கிரவுண் (Rotating Crown) மற்றும் பிசிகல் பட்டன் (Physical Button) கொண்டுள்ளது. இந்த நாய்ஸ் கலர்ஃபிட் கேடட் வாட்ச்சில் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ட்ரூசிங்க் டெக்னாலஜி (TruSync Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டெக்னாலஜி மூலம் குயிக் பேரிங் (Quick Pairing), லோவ் பவர் கன்சம்ஷன் (Low Power Consumption) மற்றும் ஸ்டேபிள் கனெக்சன் (Stable Connection) கிடைக்கிறது. ஆகவே, குவாலிட்டியான வாய்ஸ் காலிங் அனுபவத்தை பெறலாம். இந்த மாடலில் ஸ்விம்மிங் (Swimming), ரன்னிங் (Running), சைக்கிளிங் (Cycling), பேட்மிட்டன் (Badminton) போன்ற 120+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன.

பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. TruSync டெக்னாலஜி.. RUGGED டிசைன்!

இதன் மூலம் பிசிகல் ஆக்டிவிட்டிகளை (Physical Activities) தொடர்ந்து கண்காணித்து கொள்ளலாம். அதேபோல 300+ வாட்ச் பேஸ்கள் (Watch Faces) உள்ளது. அதோடு கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customisable Watch Faces) சப்போர்ட் வருகிறது. இந்த நாய்ஸ் கலர்ஃபிட் கேடட் ரக்கட் மாடலில் ஹெல்த் டிராக்கிங் (Health Tracking) மற்றும் ஹெல்த் மானிட்டர் (Health Monitor) வருகிறது.

பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. TruSync டெக்னாலஜி.. RUGGED டிசைன்!

ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Heart Rate Monitoring), எஸ்பிஓ2 மானிட்டரிங் (SpO2 Monitoring), ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking) மற்றும் மென்சுரல் சைக்கிள் டிராக்கிங் (Menstrual Cycle Tracking) ஆகியவை கொண்டுள்ளன. ஆப்ஸ், காலிங் மற்றும் எஸ்எம்எஸ் நோட்டிபிகேஷன்களுக்கான ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் (Smart Notifications) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாய்ஸ் கலர்ஃபிட் கேடட் ரக்கட் வாட்ச்சில் இன்-பில்ட் கேம்ஸ் (In-built Games) மற்றும் டிஎன்டி மோட் (DND Mode) சப்போர்ட் வருகிறது. அதேபோல கால்குலேட்டர் (Calculator), ஸ்டாப்வாட்ச் (Stopwatch), அலாரம் (Alarm) மற்றும் வெதர் அப்டேட் (Weather Update) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. மல்டிபிள் ஸ்ட்ராப் கலர் (Multiple Strap Color) கொண்டுள்ளது.

இந்த வாட்ச்சில் லூனார் பிளாக் (Lunar Black), பிளாக் கேமோ (Black Camo) மற்றும் மிலிட்டரி கேமோ (Military Camo) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த நாய்ஸ் கலர்ஃபிட் கேடட் ரக்கட் ஸ்மார்ட்வாட்ச் அமேசான் (Amazon) தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சின் விலையை பொறுத்தவரை ரூ.6,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், அறிமுக சலுகையாக வெறும் ரூ.1,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. வரும் நாட்களில் விற்பனை தொடங்க இருக்கிறது. கம்மியான பட்ஜெட்டில் பிரீமியம் ரக்கட் டிசைன், மிரட்டலான அமோலெட் டிஸ்பிளே ஹெல்த் மானிட்டர்கள் போன்ற அம்சங்கள் வேண்டுமானால், இந்த நாய்ஸ் கலர்ஃபிட் கேடட் மாடலை தேர்ந்தெடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Noise ColorFit Cadet Rugged Smartwatch Sale Soon in Amazon Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X