அடிச்சான் பாரு Noise.. பட்ஜெட்ல AI காலிங்.. 50 மணிநேர பிளேடைம்.. அலறவிடும் சவுண்ட்.. என்ன மாடல்? என்ன விலை?
நாய்ஸ் (Noise) நிறுவனம் அதன் போர்ட்போலியோவில் புதிதாக நாய்ஸ் பட்ஸ் ஸீரோ (Noise Buds Xero) என்ற புதிய ஹை-எண்டு TWS இயர்பட்ஸ் (Earbuds) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சாதனம் பற்றிய முழு விபரம் இதோ.
நாய்ஸ் நிறுவனத்தின் அதன் இயர்பட்ஸ் வரிசையில் புதிதாக மற்றொரு TWS இயர்பட்ஸ் ஸீரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் அதன் புதிய நாய்ஸ் ஏர்வேவ் நெக்பேண்டை (Noise AirWave Neckband) சாதனத்தை நிறுவனம் அறிமுகம் செய்த பிறகு, இந்த புதிய TWS இயர்பட்ஸ் சாதனத்தை நாய்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இது மிகவும் ஸ்லிம் ஆன வடிவமைப்பைக் குரோம் டிஸைனுடன் கொண்டுள்ளது.

ஆம், இது பிரீமியம் குரோம் டூயல்-டோன் பூச்சு உடன் வருகிறது. நாய்ஸ் பட்ஸ் ஸீரோ ஆனது 12.4மிமீ டைட்டானியம் டிரைவர்களை கொண்டுள்ளது. இது PEEK மற்றும் TITANIUM மெட்டீரியலின் கலவையுடன் உயர் ஃபிடிலிட்டி ஒலியியலால் இயக்கப்படுகிறது. இது 50dB வரை அடாப்டிவ் ஹைப்ரிட் ANC அம்சத்துடன் இயங்குகிறது. இதனால், மிகவும் துல்லியமான ஆடியோ தரத்தை இந்த சாதனம் எல்லா சூழ்நிலைகளிலும் வழங்குகிறது.
நாய்ஸ் பட்ஸ் ஸீரோ (Noise Buds Xero):
உயர்தர அழைப்புத் தரத்திற்கான சவுண்ட்+ அல்காரிதம் அம்சமும் இதில் உள்ளது. இந்த புதிய இயர்பட்ஸ் சாதனம் 50ms வரையிலான லோ-லேட்டன்சி பயன்முறை மற்றும் இன்-இயர்பட்ஸ் டிடெக்ட் ஆதரவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த புதிய நாய்ஸ் பட்ஸ் ஸீரோ TWS இயர்பட்ஸ் (Noise Buds Xero TWS Earbuds) சாதனம் புளூடூத் v5.3 (Bluetooth v5.3) ஆதரவை கொண்டுள்ளது.
இந்த புதிய நாய்ஸ் பட்ஸ் ஸீரோ TWS இயர்பட்ஸ் (Noise Buds Xero TWS Earbuds) சாதனம் டச் கண்ட்ரோல் கட்டுப்பாட்டுடன் வருகிறது. இது இன்-இயர் டிடெக்ஷன் உடன் வருகிறது. உங்கள் காதில் இயர்பட்ஸ் பொருத்திய பிறகு, இயர்பட்ஸ் தானாக ஆக்டிவேட் செய்யப்படும். சூப்பர் கிளியர் ஆடியோவிற்காக
இதில் சவுண்ட்+ அல்காரிதம் (Sound+ Algorithm) அம்சமும் இடம்பெற்றுள்ளது.

இது 50 dB வரை 3 நிலை ANC அம்சத்தை ஆதரிக்கிறது. இது டீப், லைட் மற்றும் டிரான்ஸ்பரென்ட் என மூன்று மோடுகளை ஆதரிக்கிறது. இந்த நாய்ஸ் பட்ஸ் ஸீரோ TWS இயர்பட்ஸ் (Noise Buds Xero TWS Earbuds) சாதனத்தின் மொத்த பிளேபேக் நேரம் 50 மணிநேரம் வரை நீடித்து செயல்படும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது AI வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவுடன் வருகிறது.
இது இன்ஸ்டாசார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருவதனால், வெறும் 10 நிமிட சார்ஜில் 6 மணிநேர பிளேபேக்கை வழங்குகிறது. இது 50ms லோ-லேடன்சி உடன், உங்கள் ஸ்மார்ட்போன்னுடன் உடனே இணையும் ஹைப்பர் சின்க் டெக்னாலஜி அம்சத்துடன் வருகிறது. இது IPX5 ஸ்பிளாஸ் மற்றும் ஸ்வெட் ப்ரூப் அம்சத்துடன் வருகிறது. இந்த இயர்பட்ஸ் 1 வருட உத்தரவாத்தையும் வழங்குகிறது.
நாய்ஸ் பட்ஸ் ஸீரோ விலை (Noise Buds Xero Price):
இந்த புதிய நாய்ஸ் பட்ஸ் ஸீரோ TWS இயர்பட்ஸ் (Noise Buds Xero TWS Earbuds) விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்று பேசுகையில், இது குரோம் பிளாக், குரோம் பீஜ் மற்றும் குரோம் ப்ளூ ஆகிய 3 வண்ணங்களில் வருகிறது. இது நிறுவனத்தின் இணையதளம், Flipkart மற்றும் Amazon.in ஆகியவற்றில் ரூ. 3,999 என்ற அறிமுகம் விலையுடன் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








