ஆளுக்கு 2 ஆர்டர்.. இவ்ளோ கம்மி விலைக்கு.. ENC ஆதரவு, IPX5 வாட்டர் ஃப்ரூப், 120Hrs பேட்டரி-ஆ.. என்ன மாடல்?
ரூ.1500 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு தரமான வயர்லெஸ் இயர்பட்ஸை (Best TWS Under Rs.1500) தேடும் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு, உள்நாட்டு வியாரிபிள்ஸ் உற்பத்தியாளர் ஆன நாய்ஸ் (Noise) தனது லேட்டஸ்ட் டிடபுள்யூஎஸ் ஆக நாய்ஸ் பட்ஸ் எக்ஸ் ப்ரைம் (Noise Buds X Prime) என்கிற இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
நாய்ஸ் பட்ஸ் எக்ஸ் ப்ரைம் இயர்பட்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாய்ஸ் நிறுவனம் அதன் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (True Wireless Stereo) சீரீஸை விரிவுபடுத்தியுள்ளது. 120 மணிநேர பேட்டரி பேக்கப்பை (120Hrs Battery Backup) வழங்குவதாக உறுதி அளிக்கும் இந்த நாய்ஸ் இயர்பட்ஸின் விலை என்ன? இது வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

நாய்ஸ் பட்ஸ் எக்ஸ் ப்ரைம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸின் அம்சங்கள்: நாய்ஸ் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் இயர்பட்ஸ் ஆனது குவாட் மைக் இஎன்சி (Quad Mic ENC) உடன் வருகிறது. அறியாதோர்களுக்கு இஎன்சி என்பது என்விராயன்மென்டல் நாய்ஸ் கண்ட்ரோல் (Environmental Noise Control) என்பதன் சுருக்கமாகும். இது தெளிவான கால் குவாலிட்டியை (Call Quality) வழங்குவதாக உறுதியளிக்கிறது.
மேலும் இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் 11மிமீ ட்ரைவர் யூனிட் (11mm Driver Unit) உடன் வருகின்றன, இது ஆழமான பாஸ் (Deep Bass) மற்றும் அதிவேக சவுண்ட் அனுபவத்தை (Immersive sound experience) வழங்குவதாக நாய்ஸ் கூறுகிறது. மேலும் இந்த நாய்ஸ் பட்ஸ் எக்ஸ் ப்ரைம் இயர்பட்ஸ் ஆனது தடையற்ற மற்றும் உடனடி இணைப்பிற்கான ஹைப்பர்சின்க தொழில்நுட்பத்தையும் (HyperSync Technology) கொண்டுள்ளது.
கூடுதலாக இது ப்ளூடூத் வெர்ஷன் 5.3-ஐயும் (Bluetooth Version 5.3) ஆதரிக்கிறது. இது ரூ.1500 க்குள் என்கிற மிகவும் மலிவான இயர்பட்ஸ் ஆக இருந்தாலும் கூட ஐபிஎக்ஸ்5 ரேட்டிங் (IPX5 Rating) உடன் வருகின்றன. அதாவது இது நீர்-எதிர்ப்பு (Water-resistant) திறனை கொண்டுள்ளது என்று அர்த்தம்.
நாய்ஸ் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் இயர்பட்ஸ் 50எம்எஸ் வரையிலான லோ லேடன்சி (Low latency of up to 50ms) உடன் வருகிறது. இது தடையற்ற ஆடியோ-விஷுவல் ஒத்திசைவை (Audio-visual synchronization) அனுபவிக்க உதவுகிறது. அதாவது நீங்கள் பார்க்கும் கட்சிக்கும் அதன் ஒலிக்கும் இடையே எந்த விதமான முன்-பின் சிக்கல்களும் இருக்காது என்று அர்த்தம்.
முன்னரே குறிப்பிட்டபடி, இந்த இயர்பட்ஸ் மொத்தம் 120 மணிநேர மியூசிக் பிளேபேக்கை (120Hrs Music Playback) வழங்குகிறது. மேலும் இந்த இயர்பட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் (Fast Charging Support) வருகின்றன. நாய்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி வெறும் 10 நிமிட சார்ஜ் மூலம் இந்த இயர்பட்களால் 200 நிமிடங்களுக்கு மியூசிக் பிளேபேக்கை வழங்க முடியும்.
நாய்ஸ் பட்ஸ் எக்ஸ் ப்ரைம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸின் விலை மற்றும் விற்பனை: இது ரூ.1,399 என்கிற ஆஃபர் விலையில் வாங்க கிடைக்கிறது, இந்த இயர்பட்ஸ், சில்வர் கிரே (Silver Grey), ஷீன் கிரீன் (Sheen Green) மற்றும் ஷாம்பெயின் ஒயிட் (Champagne White) என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. இது அமேசான்.இன் (Amazon.in) வழியாகவும், நிறுவனத்தின் சொந்த வலைத்தளமான கோநாய்ஸ்.காம் (gonoise.com) வழியாக விற்பனை செய்யப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக வெறும் ரூ.1400 க்கு.. 120 மணிநேர பேக்கப், என்விராயன்மென்டல் நாய்ஸ் கண்ட்ரோல், 50எம்எஸ் வரையிலான லோ லேடன்சி, ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 11மிமீ ட்ரைவர் யூனிட் போன்ற அம்சங்களுடன் வரும் இந்த நாய்ஸ் பட்ஸ் எக்ஸ் ப்ரைம் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் நிச்சயம் பட்ஜெட் வாசிகளை சுண்டி இழுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!


Click it and Unblock the Notifications