Home
Gadgets

ஆளுக்கொரு ஆர்டர்.. ரூ.1,199 போதும்.. QUAD மைக்.. SonicBlend ஆடியோ.. DUAL பேரிங்.. IPX5 ரேட்டிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஆளுக்கொரு ஆர்டர் போடும்படியான பட்ஜெட்டில் நாய்ஸ் பட்ஸ் விஎஸ்601 (Noise Buds VS601) இயர்பட்ஸ் களமிறங்கி இருக்கிறது. மற்ற பட்ஜெட் மாடல்களை போலல்லாமல், டிரான்ஸ்பரன்ட் சார்ஜிங் கேஸ், சோனிக்பிளென்ட் ஆடியோ, என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் மைக், டூயல் டிவைஸ் பேரிங் மற்றும் IPX5 ரேட்டிங் போன்ற நம்ப முடியாத பீச்சர்களை பேக் செய்துள்ளது. இந்த புதிய நாய்ஸ் பட்ஸ் விஎஸ்601 இயர்பட்ஸ் மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரூ.1,000 பட்ஜெட்டில் கிடைக்கும் இயர்பட்ஸ் மாடல்களில் பெரும்பாலான பீச்சர்களை எதிர்பார்க்க முடியாது. அதிலும் வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் நாய்ஸ் கேன்சலேஷன் கிடைக்காது. ஆனால், நாய்ஸ் நிறுவனம் அதை கொடுத்து ஆடியோ பிரியர்களை தட்டித்தூக்கி வருகிறது. இந்த வரிசையில் டிசைனிலும் பட்டையை கிளப்பும்படி நாய்ஸ் பட்ஸ் விஎஸ்601 களமிறங்கி இருக்கிறது.

ஆளுக்கொரு ஆர்டர்.. ரூ.1,199 போதும்.. QUAD மைக்.. SonicBlend ஆடியோ!

நாய்ஸ் பட்ஸ் விஎஸ்601 அம்சங்கள் (Noise Buds VS601 Specifications): இந்த நாய்ஸ் மாடலில் பேக்கப் பட்டையை கிளப்பும்படி கிடைக்கிறது. அதாவது ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் போதும் 7 மணி நேரங்களுக்கு பட்களிலும் 43 மணி நேரங்களுக்கு சார்ஜிங் கேஸ் மூலம் பேக்கப் கிடைக்கிறது. ஆகவே, 50 மணி நேரங்களுக்கு பிளேடைம் கொடுக்கும் மாடலாக இது இருக்கிறது.

டிசைனை பார்க்கையில், மெட்டாலிக் பிஷினிங் கொண்ட சார்ஜிங் கேஸ் மற்றும் டிரான்ஸ்பரன்ட் லிட் (Transparent Lid) கிடைக்கிறது. ஆகவே, அடிமட்ட பட்ஜெட்டிலும் டிரெண்டிங் மற்றும் பிரீமியம் லுக் எதிர்பார்க்கலாம். இயர்பட்களிலும் மெட்டாலிக் பினிஷிங் அவுட்டர் கிடைக்கிறது. பட்ஜெட் மாடலாக இருப்பதால், எல்இடி இன்டிகேட்டர் பேக் செய்யப்படவில்லை.

கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்கள் அவுட்புட் கொடுப்பதற்காக குவாட் மைக் (Quad Mic) மட்டுமல்லாமல், என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, அவுட்டோரில் கனெக்ட் செய்யப்படும் வாய்ஸ் கால்களும் நாய்ஸ் இல்லாமல் கேட்கும்படி இருக்கும். 10 எம்எம் டிரைவர்கள் வருகின்றன.

ஆளுக்கொரு ஆர்டர்.. ரூ.1,199 போதும்.. QUAD மைக்.. SonicBlend ஆடியோ!

இந்த டிரைவர்களில் சோனிக்பிளென்ட் (SonicBlend) ஆடியோ டியூனிங் டெக்னாலஜி கிடைக்கிறது. ஆகவே, ரிச் மற்றும் குவாலிட்டி ஆடியோ அனுபவத்தை எதிர்பார்க்கலாம். இந்த பட்ஜெட்டிலும் டூயல் டிவைஸ் பேரிங் (Dual Device Paring) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, மீண்டும் ஸ்விட்ச் செய்யாமல் ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களில் கனெக்ட் செய்து பயன்படுத்தலாம்.

இந்த நாய்ஸ் பட்ஸ் விஎஸ்601 மாடலில் இன்ஸ்டாசார்ஜ் (Instacharge) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்யும்பட்சத்தில் 150 நிமிடங்களுக்கு பிளேடைம் பெற்று கொள்ளலாம். ஆகவே, கம்மி பட்ஜெட்டில் குயிக் சார்ஜ் கொடுக்கும் மாடலாகவும் இது இருக்கிறது. கேமிங் பிரியர்களுக்கான லோவ்-லேட்டன்சி சப்போர்ட் கிடைக்கிறது.

ஆகவே, ஆடியோ மற்றும் வீடியோ சின்க் பட்டையை கிளப்பும்படி இருக்கும். இந்த மாடலில் IPX5 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. கிராஃபைட் பிளாக் (Graphite Black), கோபால்ட் ப்ளூ (Cobalt Blue), காப்பர் பிரவுன் (Copper Brown), எமரால்டு கிரீன் (Emerald Green) மற்றும் மற்றும் சில்வர் கிரே (Silver Grey) ஆகிய கலர்களில் வருகிறது.

இந்த நாய்ஸ் பட்ஸ் விஎஸ்601 மாடலின் மார்கெட் விலை ரூ.1,399ஆக இருக்கிறது. ஆனால், அறிமுக சலுகையில் ரூ.1,199 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான் (Amazon) மற்றும் நாய்ஸ் வெப்சைட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் பிரீமியம் டிசைன் மற்றும் பக்கா பீச்சர்கள் வேண்டுமானால், இந்த மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Noise Buds VS601 With Transparent Charging Case 50 Hours Playtime Launched Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X