10 நிமிடங்கள் சார்ஜ்.. 180 நிமிடங்கள் பேக்கப்.. பட்ஜெட் விலையில் ஃபாஸ்ட் சார்ஜிங் இயர்பட்ஸ்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் மலிவான பட்ஜெட்டில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், பாஸ்ட் சார்ஜிங், குவாட் மைக், லேவ் லேட்டன்சி மோட் போன்ற பிரமாதமான அம்சங்களுடன் நாய்ஸ் (Noise) நிறுவனத்தின் நாய்ஸ் பட்ஸ் விஎஸ்104 மேக்ஸ் (Noise Buds VS104 Max) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இப்போது வரும் வயர்லெஸ் இயர்பட்ஸ்களில் பெரும் தலைவலியாக இருப்பது, பேட்டரி பேக்கப் மட்டுமே. மார்கெட்டில் கிடைக்கும் பல இயர்பட்ஸ்கள் என்னதான், சவுண்டிங் அனுபவத்தில் பிசிறு தட்டினாலும், பேட்டரி என்று வரும்போது மண்ணை கவ்வுகின்றன. இதனால், அடிக்கடி சார்ஜ் போட்டுக்கொண்டு காத்திருக்க வேண்டியிருக்கிறது.

இதில் சில இயர்பட்ஸ்கள், பல மணி நேரம் சார்ஜ் செய்தாலும், சில மணி நேரங்களுக்கு கூட பிளே பேக் டைம் கொடுக்கப்பதில்லை. அதோடு மொபைலில் கனெக்ட் செய்வதற்கான நேரமும் கூடுதலாக ஏற்படுவதை கண்டு பலர் டென்ஷனாகி விடுகிறார்கள். இதையெல்லாம், சரிசெய்வதற்காக, இயர்பட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், ஃபாஸ்ட் சார்ஜிங், ஹைபர் சின்க் போன் டெக்னாலஜியை பயன்படுத்துகின்றன.
இதுபோன்ற அதிநவீன டெக்னாஜி கொண்ட இயர்பட்ஸ்களின் விலை ரூ.3,000 க்கும் மேல் இருக்கும். ஆனால், மலிவான விலையில் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்து அசத்தி வரும் நாய்ஸ் நிறுவனம், இந்த அனைத்து அம்சங்களையும் பேக் செய்யும் வகையில் நாய்ட் பட்ஸ் விஎஸ்104 மேக்ஸ் இயர்பட்ஸை பட்ஜெட்டில் அறிமுகம் செய்துள்ளது.
நாய்ட் பட்ஸ் விஎஸ்104 மேக்ஸ் அம்சங்கள் (Noise Buds VS104 Max Specifications): இந்த நாய்ஸ் இயர்பட்ஸ் எர்கானாமிக் (Ergonomic) டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. 13 மிமீ டிரைவர்கள் வருகிறது. ப்ளூடூத் வி5.3 கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்பிசி (SBC) மற்றும் ஏஏசி (AAC) கோடெக் (Codec) சப்போர்ட் வருகிறது. டச் கன்ட்ரோல் கொடுக்கப்பட்டுள்ளது.
கிரிஸ்டர் கிளியர் காலிங் அனுபவத்துக்காக குவாட் (Quad) மைக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மைக்கில் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காலிங் அனுபவம் மிகுந்த தரமானதாக இருக்கும். 25 டிபி வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) வருகிறது.
டிரான்ஸ்பரன்சி மோட் (Transparency Mode) கொடுக்கப்பட்டுள்ளது. ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistant) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாய்ஸ் இயர்பட்ஸை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 45 நிமிடங்களுக்கு பிளே பேக் டைம் கிடைக்கும். இதற்காக இன்ஸ்டா ஃபாஸ்ட் சார்ஜிங் (Insta Fast Charging Support) வருகிறது.
இதன் மூலம் வெறும் 10 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் போதும், தொடர்ந்து 180 நிமிடங்களுக்கு பிளே பேக் டைம் கிடைக்கும். 50 எம்எஸ் லோவ் லேட்டன்சி ( Low Latency) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு லேப்டாப், மொபைல் ஆகியவற்றுடன் நொடியில் கனெக்ட்டாவதற்காக ஹைபர் சின்க் டெக்னாலஜி (Hyper Sync Technology ) பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், IPX5 தர ப்ளாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வருகிறது. இதற்கு ஒரு வருட வாரண்ட்டி வழங்கப்படுகிறது. ஜெட் பிளாக் ( Jet Black ), ரோஸ் கோல்டு ( Rose Gold), சில்வர் கிரே (Silver Grey) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. அமேசான் (Amazon ) மற்றும் நாய்ஸ் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த இயர்பட்ஸ் விலை ரூ.4000 க்கு மேல் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அறிமுக சலுகையாக ரூ.1,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கம்மியான விலையில் லேவ் லேட்டன்சி மோட், நல்ல பேட்டரி பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட இயர்பட்ஸ் வேண்டும் என்றால், இந்த நாய்ஸ் பட்ஸ் விஎஸ்104 மேக்ஸ் நல்ல தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








