Home
Gadgets

முரட்டு பட்ஜெட்.. ரூ.2,499 போதும்.. அலாய் மெட்டல் கேஸ்.. 35 மணி நேர பேக்கப்.. IPX4 ரேட்டிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் முதல் முறையாக அலாய் மெட்டல் கேஸ் கொண்ட இயர்பட்ஸ் மாடலாக நாய்ஸ் பட்ஸ் மரைன் (Noise Buds Marine) களமிறங்கி இருக்கிறது. இதுபோக டிடாச்சபிள் செயினுடன் புதுவித டிசைன் கொண்டிக்கிறது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், லோவ் லேட்டன்சி மோட், டூயல் டிவைஸ் பேரிங், ஃபாஸ்ட் சார்ஜ் போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த நாய்ஸ் பட்ஸ் மரைன் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மெட்டாலிக் டிசைனுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பிரீமியம் மெட்டல் கேஸ் அல்லது மெட்டல் மிடில் ஃபிரேம் கொடுக்கும் ஸ்மார்ட்போன்களை தேடித்தேடி வாங்கும் பிரியர்களும் இருக்கிறார்கள். இதேபோன்ற பாடியை இயர்பட்களில் எதிர்பார்க்கும் கஸ்டமர்களை தட்டித்தூக்கும்படி மெட்டாலிக் கேஸ் கொண்ட மாடலாக நாய்ஸ் பட்ஸ் மரைன் வெளியாகி இருக்கிறது.

முரட்டு பட்ஜெட்.. ரூ.2,499 போதும்.. அலாய் மெட்டல் கேஸ்.. எந்த மாடல்?

காம்பாக்ட் டிசைனில் மெட்டாலிக் பாடியுடன் மரைன் பிளஸ் (Marine Black) மற்றும் மரைன் கிரே (Marine Grey) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இதுபோக டிடாச்சபிள் செயின் (Detachable Chain) கிடைக்கிறது. இப்படி டிசைன் மற்றும் பில்ட்-குவாலிட்டியில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இப்போது, ஆடியோ மற்றும் ஸ்மார்ட் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

நாய்ஸ் பட்ஸ் மரைன் அம்சங்கள் (Noise Buds Marine Specifications): ஹெவி டியூட்டி ஆடியோ அவுட்புட் கொடுக்க 13 எம்எம் டைனாமிக் டிரைவர் கிடைக்கிறது. இந்த டிரைவர் மற்றும் சார்ஜிங் கேஸ் மூலம் 35 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம். இன்ஸ்டாசார்ஜ் (Instacharge) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 120 நிமிடங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம்.

என்விராண்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) சப்போர்ட் கொண்ட குவாட் மைக் (Quad Mic) கிடைக்கிறது. ஆகவே, பேக்கிரவுண்ட் நாய்ஸ் இல்லாமல், கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களை பெற்று கொள்ளலாம். கேமிங் பிரியர்களுக்கான லோவ் லேட்டன்சி மோட் (Low Latency Mode) கிடைக்கிறது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth V5.3) கிடைக்கிறது.

முரட்டு பட்ஜெட்.. ரூ.2,499 போதும்.. அலாய் மெட்டல் கேஸ்.. எந்த மாடல்?

இந்த நாய்ஸ் பட்ஸ் மரைன் மாடலில் 32dB அவுட்புட் கொண்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) சப்போர்ட் கிடைக்கிறது. ஆட்டோ பேரிங் (Auto Pairing) மற்றும் டூயல் டிவைஸ் பேரிங் (Dual Device Pairing) சப்போர்ட் கிடைக்கிறது. சிரி வாய்ஸ் அசிஸ்டன்ட் (Siri Voice Assistant) மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) கிடைக்கிறது.

சார்ஜிங் கேஸில் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) மற்றும் சார்ஜிங் இன்டிகேட்டர் (Charging Indicator) கிடைக்கிறது. இந்த நாய்ஸ் பட்ஸ் மரைன் மாடலில் மெட்டாலிக் பாடி மட்டுமல்லாமல், IPX4 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆடியோ பீச்சர்களை பேக் செய்து கொடுத்துள்ளது.

நாய்ஸ் பட்ஸ் மரைன் விலை (Noise Buds Marine Price): இந்த மாடலின் விலை ரூ.2,499ஆக இருக்கிறது. கோநாய்ஸ்.காம் (gonoise.com) தளத்தில் ப்ரீ-புக்கிங் செய்ய கிடைக்கிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) போன்ற ஈ-காமர்ஸ் தளங்களில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் விற்பனை தொடங்க இருக்கிறது. இது பட்ஜெட்டுக்கு ஏற்ப டிசைன் கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
Noise Buds Marine With Full Metal Alloy Case Sale From July 1 in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X