Home
Gadgets

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.1,399 போதும்.. FAST சார்ஜிங்.. QUAD மைக்.. ENC டெக்னாலஜி.. எந்த மாடல்?

மியூசிக் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) சப்போர்ட் மட்டுமல்லாமல், நாய்ஸ் கேன்சலேஷன் (Noise Cancellation), ஹைப்பர் சிங்க் (Hyper Sync) போன்ற பக்காவான டெக்னாலஜிகளுடன் நாய்ஸ் பட்ஸ் காம்பாட் எக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

மார்கெட்டில் இப்போது வரும் இயர்பட்ஸ் (Earbuds) மாடல்களில், புதுப்புது டெக்னாலஜிகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படி கிரிஸ்டல் கிளியர் ஆடியோவுக்காக நாய்ஸ் கேன்சலேஷன், ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் லேப்டாப் போன்ற டிவைஸ்களில் நொடியில் கனெக்ட் செய்வதற்காக குயிக் பேரிங் போன்ற பல டெக்னாலஜிகள் வந்து விட்டன.

வெறும் ரூ.1,399 போதும்.. FAST சார்ஜிங்.. QUAD மைக்.. ENC டெக்னாலஜி!

அதேபோல, ஃபாஸ்ட் சார்ஜிங், டச் கன்ட்ரோல் போன்றவையும் வருகின்றன. இருப்பினும், இதுபோன்ற பல்வேறு டெக்னாலஜிகளை கொண்ட இயர்பட்ஸ் மாடல்களின் விலை சற்று அதிகமாகவே இருக்கும் என்றே சொல்ல வேண்டும். ஆனால், நாய்ஸ் (Noise) நிறுவனமனாது, கம்மியான பட்ஜெட்டில் அப்படிவொரு இயர்பட்ஸ் வேரியண்ட்டை இப்போது, களமிறக்கி இருக்கிறது.

இதற்கு நாய்ஸ் பட்ஸ் காம்பாட் எக்ஸ் (Noise Buds Combat X) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் பட்டையை கிளப்பும் பல்வேறு அம்சங்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைனில் வரும் ஆர்ஜிபி எல்இடிகள் பின்னிப்பெடல் எடுக்கிறது. இந்த காம்பாட் எக்ஸ் மாடலின் விற்பனை விவரங்களை பார்ப்பதற்கு முன்பாக, அதன் முழு அம்சங்களையும் இப்போது தெரிந்து கொள்வோம்.

நாய்ஸ் பட்ஸ் காம்பாட் எக்ஸ் அம்சங்கள் (Noise Buds Combat X Specifications): இந்த காம்பாட் எக்ஸ் இயர்பட்ஸ் 10 மிமீ டிரைவர்கள் கொண்டிருக்கிறது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி வருகிறது. அதோடு குவாட் மைக் (Quad Mic) கொண்டுள்ளது. இந்த மைக்கில் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation Technology) டெக்னாலஜி வருகிறது.

வெறும் ரூ.1,399 போதும்.. FAST சார்ஜிங்.. QUAD மைக்.. ENC டெக்னாலஜி!

ஆகவே, வாய்ஸ் காலிங் அனுபவம், கிரிஸ்டல் கிளியராக எதிர்பார்க்கலாம். அதேபோல சவுண்டிங் அனுபவத்துக்கான ஸ்பாஷியல் ஆடியோ டெக்னாலஜி வருகிறது. இதன் மூலம் கேமிங் மற்றும் மியூசிக் அனுபவம் வேற லெவலில் இருக்கும். அதுமட்டுமல்லாமல், 40ms அல்ட்ரா லோவ் லேட்டன்சி சப்போர்ட் (Ultra Low Latency Support) வருகிறது.

இந்த நாய்ஸ் பட்ஸ் காம்பாட் எக்ஸ் மாடலானது, டச் கன்ட்ரோல் (Touch Controls) கொண்டிருக்கிறது. இன்ஸ்டாசார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Instacharge Fast Charging Support) வருகிறது. ஆகவே, வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், தொடர்ந்து 180 நிமிடங்களுக்கு பிளேபேக் கிடைக்கும். அதேபோல ஃபுல் சார்ஜில் 60 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கக்கூடியது.

இந்த வேரியண்ட்டில் IPX5 தர ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் (Splash/Sweat Resistance) வருகிறது. மேலும், குயிக் பேரிங் (Quick Pairing) சப்போர்ட்டுக்காக ஹைப்பர் சிங்க் டெக்னாலஜி (Hyper Sync Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாய்ஸ் பட்ஸ் காம்பாட் எக்ஸ் வேரியண்ட்டின் பட்ஸ் மற்றும் சார்ஜிக் கேஸில் ஆர்ஜிபி (RGB) எல்இடி இடம் பெற்றுள்ளது.

வெறும் ரூ.1,399 போதும்.. FAST சார்ஜிங்.. QUAD மைக்.. ENC டெக்னாலஜி!

கோவெர்ட் ஒயிட் (Covert White), ஸ்டீல்த் ப்ளூ (Stealth Blue), தண்டர் ப்ளூ (Thunder Blue) மற்றும் ஷோடோ கிரே (Shadow Grey) ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும் வெறும் ரூ.1,399 விலைக்கே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையும் அறிமுக சலுகையில் மட்டுமே கிடைக்கிறது.

ஆகவே, விரைவில் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நாய்ஸ் பட்ஸ் காம்பாட் எக்ஸ் மாடலை அமேசான் (Amazon) மற்றும் நாய்ஸ் வெப்சைட் (Noise Website) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பட்ஜெட்டில் பக்கா அம்சங்கள் மற்றும் பிரீமியம் டிசைன் கொண்ட இயர்பட்ஸ் வேண்டுமானால், இந்த மாடலை ஆப்சனில் எடுத்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Noise Buds Combat X With Spatial Audio Sale on Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X